2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஜனசக்தி நிறுவனத்தின் பெடி வீரஷேகரவுக்கு 'மதிப்பிற்குரிய வர்த்தக குறியீட்டுத் தலைவர்' விருது

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அனுபவம் வாய்ந்த சந்தைப்படுத்தல் துறை நிபுணரும் ஜனசக்தி நிறுவன சந்தைப்படுத்தல் பிரிவு தலைமை அதிகாரியுமான பெடி வீரஷேகர - துபாய் தாஜ் பலஸ் ஹோட்டலில் கடந்த வார இறுதியில் இடம்பெற்ற ஆசிய தலைமைத்துவ விருதுகள் (Asian Leadership Awards) வழங்கும் நிகழ்வில் அனைவரும் பொறாமைப்படத்தக்க வகையிலான 'மதிப்பிற்குரிய வர்த்தக குறியீட்டுத் தலைவர்' விருதினை தட்டிச் சென்றார்.

ஆசிய தலைமைத்துவ விருதுகள் (ALA) என்பது முழுமையாக சாதனையாளர்கள், அதியுயர் சாதனையாளர்கள் மற்றும் எதிர்கால வர்த்தக தலைவர்களை அங்கீகரிப்பதுடன் ஆசியாவின் சிறந்தவற்றில் இருந்து மிகச் சிறந்தவைகளை தெரிவு செய்து உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. தத்தமது வர்த்தகங்களை இக்கட்டான நேரங்களில் முன்கொண்டு செல்தல் மற்றும் தமது நடப்புகால குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காகவும் அவற்றை நிர்வகிப்பதற்காகவும் சிறந்த வர்த்தக முறைமைகளைப் பிரயோகித்தல் ஆகிய விடயங்களில் இத்துறையில் உள்ளவர்களுக்கு காணப்படும் ஆற்றல் இவ்விருதுகளின் ஊடாக அங்கீகரிக்கப்பட்டு, வெகுமதியளிக்கப்படுகின்றது.

மிகவும் மகிழ்ச்சியடைந்தவரான வீரஷேகர கருத்துத் தெரிவிக்கையில், 'மதிப்புமிக்க இவ்வாறான விருது ஒன்றினை பெற்றுக் கொள்வதையிட்டும் அதேநேரம், போன்ற சர்வதேச வர்த்தக குறியீடுகளை அபிவிருத்தி செய்வதற்கு உதவிபுரிந்த ஏனைய உலகளாவிய சந்தைப்படுத்தல் நிபுணர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளதையிட்டும் நான் பெருமிதமும் புளகாங்கிதமும் அடைகின்றேன். எனக்கு வழங்கிய அளவுகடந்த ஒத்துழைப்புக்காகவும் என்மீது வைத்திருந்த அளவற்ற நம்பிக்கைக்காகவும் ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவத்தினருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் எனது அனைத்து விதமான முயற்சிகளின் போதும் எனக்கு பக்கபலமாக இருந்து பாடுபட்ட விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுவினருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். அவர்கள் இல்லை என்றிருந்தால்இ இந்த விருதினை நான் பெற்றுக் கொள்வது சாத்தியமாகி இருக்காது. இது, தனியொரு நபரின் விருதுக்கான வெற்றியல்ல; மாறாக முழு நிறுவனத்திற்கும் கிடைத்த வெற்றியாகும். இவ்விருது என்னை சகிப்புத் தன்மை கொண்டவராக மாற்றுவதுடன் நான் இன்னும் உயர்ந்த மட்டங்களை அடைவதற்கு உந்துசக்தியாகவும் அமைகின்றது'' என்றார்.

ALA விருது வழங்கல் நிகழ்வானது வர்த்தகங்களின் ஆசியக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்டதுடன் கைத்தொழில் குழுமத்தைச் சேர்ந்த நட்சத்திர அந்தஸ்துப் பெற்ற நிறுவனங்கள் இதற்கு ஆதரவு வழங்கியிருந்தன. CMO Asia, CMO Council மற்றும் World Brand Congress ஆகியன அதனது உபாய பங்காளர்களாக திகழ்கின்றன. எண்ணத்தை தூண்டுகின்ற தலைமைத்துவத்தின் மூலம் உயர்மட்ட அறிவுப் பரிமாற்றத்திற்காக ALA விருது வழங்கல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதுடன், ஆசியாவில் அனைத்து கைத்தொழில் பிரிவுகளிலும் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்திலுள்ள அதிகாரிகளிடையே உள்ள வலைப்பின்னலை கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்கின்றது. பிரமாண்டமாக இடம்பெற்ற விருது வழங்கல் விழாவில் 'மார் 150 சிரேஷ்ட தலைவர்களும் தீர்மானம் எடுக்கும் அந்தஸ்துள்ள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதற்கு மேலதிகமாக பல்வேறு நாடுகளையும் சேர்ந்த அதிகாரம் பெற்ற தரப்பினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளும் சமுகமளித்திருந்த இந்நிகழ்வு, அறிவையும் அனுபவங்களையும் பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

உள்நாட்டு மற்றும் பல்தேசிய கம்பனிகளில் சந்தைப்படுத்தல் மற்றும் தொலைத்தொடர்பாடல் துறைகளில் விஜயசேகர 16 வருடங்களுக்கும் அதிகமான அனுபவத்தைக் கொண்டுள்ளார். தற்போது ஜனசக்தி இன்சூரன்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தில் சந்தைப்படுத்தல் பிரிவு தலைமை அதிகாரியாக பதவி வகிக்கும் இவர், நிறுவனத்தின் வர்த்தக குறியீட்டு முகாமைத்துவம், வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவம், ஆய்வு மற்றும் தொலைபேசியை அடிப்படையாகக் கொண்ட (நேரடி) சந்தைப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்குகின்றார். 

மூன்று வருடங்கள் என்ற குறைந்த காலப் பகுதிக்குள்ளேயே, ஜனசக்தி நிறுவனமானது முன்னொருபோதும் இல்லாத மிகவுயர்ந்த மட்டங்களை அடைந்து கொள்வதற்காக கணிசமான பங்களிப்பினை வீரசேகர வழங்கியுள்ளார். இவரது பங்களிப்பின் காரணமாக, 2010 மற்றும் 2011 ஆண்டுகளின் முதல் அரையாண்டு காலப்பகுதிகளில் இத்துறையில் முதலாமிடத்தில் உள்ள நிறுவனத்தை தோற்கடிக்கும் வகையில் ஜனசக்தியின் பெறுபேறுகள் அமைந்ததுடன் 2010இல் மிகவுயர்ந்த மைற்கல்லான 6 பில்லியன் ரூபாவினையும் நிறுவனம் பெற்றுக் கொண்டது. இலாபம் தொடர்பான மேற்படி இலக்குகளை அடைந்த அதேநேரம், ஜனசக்தியின் கூட்டாண்மை தோற்றப்பாட்டு அடையாளத்தை புதுப்பிப்பதிலும் புரட்சிகரமான 'வெஹிகல் எமேர்ஜன்சி பொலிஸி' உள்ளிட்ட பல்வேறுபட்ட புத்தாக்க உற்பத்திகளை காப்புறுதித் துறைக்கு அறிமுகம் செய்து வைப்பதிலும் வீரஷேகர காரணகர்த்தாவாக திகழ்ந்தார். மேலும், நிறுவனமானது உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை பெற்றுக் கொள்வதற்கும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இதற்கு முன்னர் வீரஷேகர 'Bates 141' எனும் பல்தேசிய தொலைத் தொடர்பாடல் முகவர் நிறுவனத்தில் பொது முகாமையாளராக பணிபுரிந்தார். இந்த முகவர் நிறுவனத்தின் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்ட வேளையில் பல்வேறுபட்ட முக்கிய உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக குறியீடுகளுக்காக உபாய ரீதியிலான அபிவிருத்தித் திட்டங்களை தலைமைதாங்கி முன்னெடுத்தார். நோக்கியா, பென்சன் அன்ட் ஹெட்ஜ்ஸ், மிட்'பிசி, கார்ல்ஸ்பேர்க், 3M, ஹச், DHL, லங்கா பெல், மொபிடெல் மற்றும் ஆசிய மெய்வல்லுனர் ஷம்பியன்ஷிப் 2002 ஆகியனவும் இவற்றுள் உள்ளடங்குகின்றன.

சான்றளிக்கப்பட்ட விளம்பர முகவர்கள் ஒன்றியம் மற்றும் சர்வதேச விளம்பர ஒன்றியம் ஆகிவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2009ஆம் ஆண்டின் Chillies விளம்பர விருது வழங்கல் நிகழ்வில் இரண்டாவது மிகப் பெரிய விருது வென்ற நிறுவனம் என்ற பெருமையைப் பெறும் வகையில், மிகவும் மாற்றத்தை ஏற்படுத்திய 'ஆண்டின் மிகச் சிறந்த பிரஷ்பரம்' விருது உட்பட 11 விருதுகளை  'Bates 141' முகவர் நிறுவனம் தமதாக்கிக் கொண்டது. 

விளம்பரத்துறையில் மிக முக்கிய ஒரு ஆளுமையாக வீரஷேகர திகழ்ந்ததுடன் பல முன்னெடுப்புகளுக்கும் பங்களிப்பினை நல்கியுள்ளார். சான்றளிக்கப்பட்ட விளம்பர முகவர்கள் ஒன்றியத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக அவர் பதவி வகித்தார். இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தின் 2005ஆம் ஆண்டுக்கான சந்தைப்படுத்தல் விளம்பர விருது வழங்கலுக்கான நடுவர் குழுவிலும் இவர் பணியாற்றினார். இவர் தற்போது இலங்கை காப்புறுதி ஒன்றியத்தின் (IAS) விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் குழுவில் அங்கம் வகிக்கின்றார்.

றோயல் கல்லூரியின் பழைய மாணவரான வீரஷேகர, சந்தைப்படுத்தல் பட்டய நிறுவகத்தில் (MCIM UK) சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையில் பட்டப்பின் டிப்ளோமாவையும் ஐக்கிய இராச்சியத்தின் வேல்ஸ் பல்லைக்கழகத்தில் MBA பட்டப் படிப்பையும் மேற்கொண்டுள்ளார். அத்துடன் வடிவமைப்பு கல்வியகம், இலங்கை தொழில்சார் விளம்பரப்படுத்தல் மற்றும் புத்துருவாக்கப் பாடசாலை (SPAACS) ஆகியவற்றில் விரிவுரையாளராகவும் வீரஷேகர பணியாற்றியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .