2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறந்த ஏற்றுமதி செயற்பாடுகளுக்காக தொடர்ச்சியான விருதுகளை வென்ற மஞ்சி

Super User   / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிலோன் பிஸ்கட் நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளில் ஒன்றான மஞ்சி ஏற்றுமதி துறையில் சிறப்பாக செயற்பட்டதை கௌரவிக்கும் வகையில் கடந்த 3 மாத காலப்பகுதியில் 12க்கும் அதிகமான விருதுகளை வென்றுள்ளது. தொடர்ச்சியான 19ஆவது தடவையாக அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகள் நிகழ்வில் 2 தங்க விருதுகளையும், வெள்ளி விருதையும் வென்றிருந்தது.

பேக்கரி மற்றும் கொன்ஃபெக்ஷனரி துறையில் சிறந்த ஏற்றுமதியாளருக்கான தங்க விருது, சிறந்த ஏற்றுமதி துறை நிறுவனத்துக்கான தங்க விருது மற்றும் அனைத்து பிரிவுகளிலும் இரண்டாவது சிறந்த ஏற்றுமதியாளருக்கான வெள்ளி விருதையும் மஞ்சி வென்றிருந்தது.

தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகள் நிகழ்வு 1993 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்படுவதுடன், இலங்கையின் ஏற்றுமதி துறையை முன்னேற்றும் வகையில் பங்களிப்பு செய்யும் நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.

ஜனாதிபதி – ஏற்றுமதியாளர் 2011க்கான விருதுகள் வழங்கும் நிகழ்விலும் சிறந்த ஏற்றுமதியாளருக்கான தங்க விருது உள்ளடங்கலாக 9 விருதுகளை மஞ்சி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகள் நிகழ்வில் மஞ்சி விருதுகள் வென்றமை குறித்து சிபிஎல் - மஞ்சி வர்த்தக நாமத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சியா விக்ரமசிங்க கருத்து வெளியிடுகையில், 'வாடிக்கையாளர் தேவைகளுக்கு முக்கியத்துவமளித்து அதற்கேற்ற வகையில் எமது தயாரிப்புகளை வழங்குவதை கௌரவிக்கும் வகையில் எமக்கு இந்த விருதுகள் கிடைத்துள்ளன. சிபிஎல் - மஞ்சி வர்த்தக நாமம் சந்தையில் தனது ஆதிக்கத்தை முன்னெடுக்க பிரதான பக்க பலமாக ஊழியர்களின் செயற்பாடு அமைந்துள்ளது' என்றார்.

சிபிஎல் - மஞ்சி நிறுவனத்தின் குழுமத் தலைவரும் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் பணிப்பாளருமான நந்தன விக்ரமகே கருத்து தெரிவிக்கையில் 'வருடாந்தம் நாம் எமது தயாரிப்பு மற்றும் விற்பனை துறையில் முன்னெடுக்கும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு கிடைக்கும் கௌரவமாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. இவற்றின் மூலம் எமது செயற்பாடுகளுக்கு மேலும் சான்று கிடைத்துள்ளன. மேலும், உற்பத்தி செய்யப்படு;ம் ஒவ்வொரு மஞ்சி தயாரிப்பும் பல்வேறு வகையான ஆய்வுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது' என்றார்.
பல்வேறு வகையான உள்நாட்டு விருதுகளுக்கு மேலதிகமாக, ஆசியாவின் ஊஆழு இன்டர்நஷனல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த தொழில் வழங்குநர்களுக்கான விருதையும் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளன விருதுகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடமிருந்து சிபிஎல் - மஞ்சி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சியா விக்ரமசிங்க தமது நிறுவனத்துக்கான விருதை பெற்றுக் கொள்வதையும் விருதுக்கு உரித்துடைய சிபிஎல் - மஞ்சி குழும அங்கத்தவர்களையும் படங்களில் காணலாம்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .