2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ஒரு மில்லியன் ரூபாவை 'பரிசாக வழங்கும்' செலான் வங்கி

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் வங்கியியல் மற்றும் நிதியியல் சேவைகள் துறைகளில் இதுகால வரைக்கும் கண்டிராத புதுமையான முயற்சி ஒன்றினை ஒக்டோபர் 22ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கவுள்ளதுடன், அன்றைய தினம் 01 மில்லியன் ரூபாவை வானில் இருந்து நேரடியாக 'கீழே போடுவதன்' மூலம் செலான் வங்கியானது சேமிப்புகள் தொடர்பான எண்ணக்கருவை துணிச்சலுடன் மாற்றியமைக்கவுள்ளது.

ஒக்டோபர் 22ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கும் பிற்பகல் 3.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இலங்கையின் வேறுபட்ட பிரதேசங்களிற்கு மேலாக வான் பரப்பில் ஹெலிடுவர்ஸ் நிறுவனத்தின் உலங்கு வானூர்திகள் (ஹெலிக்கொப்டர்கள்) சுற்றித் திரிவதுடன், நிலப்பகுதியில் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மக்களை நோக்கி விஷேட தொடரிலக்கங்கள் மற்றும் பிரத்தியேக குறியீட்டு அடையாளங்களைக் கொண்ட, கூப்பன்கள் 'கீழே போடப்பட' உள்ளன.

இதற்கமைய அம்பலாங்கொடை, அனுராதபுரம், பிலியந்தலை, காலி, கம்பளை, கம்பஹா, கண்டி, களுத்துறை, கிரிபத்கொடை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நாவலப்பிட்டி, நுகேகொடை, பொலன்னறுவை, மொரட்டுவை, புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்கள் இதில் உள்ளடக்கப்படும்.

ஏககாலப்பகுதியில் அதாவது அதே தினத்தில் (ஒக்டோபர் 22 சனிக்கிழமை) இலங்கை முழுவதிலும் உள்ள செலான் வங்கியின் 131 கிளைகளையும் சேர்ந்த 3000 இற்கும் அதிகமான பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், இலங்கை பொதுமக்களிடையே சேமிப்பு பழக்கத்தை மேலும் ஊக்குவிப்பார்கள். மும்மொழிகளிலுமான இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையானது, குறுங்காலத்திலும் நீண்டகால அடிப்பபடையிலும் சேமிப்புப் பழக்கத்தை தூண்டுவதனை நோக்காகக் கொண்டுள்ளது. அத்துடன் புவியியல் ரீதியான மற்றும் இனரீதியான அனைத்து வரையறைகளையும் கடந்து, வாழ்க்கையின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களில் பெரும்பாலானவர்களை சென்றடைவதற்கு இந்த முன்னெடுப்பு எதிர்பார்த்துள்ளது.

மகிழ்ச்சிகரமான தருணங்கள் ஒக்டோபர் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவும் தொடரும். அதாவது, அன்றிரவு 9.30 மணிக்கு ஐ.ரீ.என். தொலைக்காட்சியில் அதிர்ஷ்டசாலிகளை தேர்ந்தெடுப்பதற்கான சீட்டிழுப்பு இடம்பெறுவதுடன், 100,000 ரூபாவினை வெல்லும் பத்து அதிர்ஷ்டசாலிகளுக்கான தொடரிலக்கங்களும் அறிவிக்கப்படும்.

அனைத்து அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களும் அருகிலுள்ள செலான் வங்கிக் கிளைக்கு 2011 ஒக்டோபர் 25 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கோ அல்லது அதற்கு முன்னதாகவோ சென்று, செல்லுபடியாகும் அடையாள இலக்கத்தை காண்பித்து தமது பரிசினை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

செலான் வங்கியின் தலைவர் ஈஸ்ட்மன் நாரங்கொட கூறுகையில், 'முற்று முழுதாகவே புரட்சிகரமானதும் இவ்வகையான முதலாவது முயற்சியாகவும் திகழ்கின்ற இந்த ஊக்குவிப்பு நடவடிக்கையை முன்னெடுப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கின் றோம். இலங்கையில் வாழும் பொது மக்களிடையே விநோதமான மற்றும் மகிழ்ச்சிகரமான உணர்வினை ஏற்படுத்தும் வகையிலமைந்த அனைத்து முன்னெடுப்புக்களும், சேமிப்புக்களின் அவசியத்தை வலியுறுத்துவதையே கருப்பொருளாக கொண்டுள்ளன. செலான் வங்கியைச் சேர்ந்த நாம், இளையோர் மற்றும் முதியோர் மத்தியில் கரணப்படும் சேமிப்புப் பழக்கம் தொடர்பில் எப்போதும் அதிகபட்ச முக்கியத்துவத்தை செலுத்தி வருகின்றோம். எந்த வகையிலான சேமிப்பாக இருந்தபோதிலும் அது, ஒருவருக்கு எப்போதும் சிறந்த உறுதுணையாக இருக்கும்' என்றார்.  

'ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 31ஆம் திகதி உலக சிக்கன தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில், அந்த மாதத்திலேயே எமது ஊக்குவிப்பு நடவடிக்கை இடம்பெறுகின்றமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகெங்கும் சேமிப்புப் பழக்கத்தினை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட தினமாக அந்தத் தினம் திகழ்கின்றது. எதிர்காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு தொடர்ச்சியாக சேமிப்பை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை சர்வதேச அளவில் நினைவூட்டும் ஒரு தினமாக உலக சிக்கன தினம் காணப்படுகின்றது. உண்மையில், மிகப் பெரிய மற்றும் மென்மேலும் புரட்சிகரமான ஊக்குவிப்பு நடவடிக்கைக்கான ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்துள்ள இதனை, இம்மாதம் நிறைவுபெறுவதற்கு முன்னதாகவே செலான் வங்கியானது வெற்றிகரமாக முன்னெடுக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .