2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிராந்தியத்தில் இலங்கையிலேயே குறைந்த விலைக்கு மருந்து பொருட்கள்

A.P.Mathan   / 2011 நவம்பர் 23 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் சுகாதாரத்துறை அடிக்கடி பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றது. இத்தகைய நிலையில் மருந்துகளுக்கு கட்டுப்பாடு விலை அவசியம் என்ற கருத்து தற்போது வலுவடைந்துள்ளதுடன் இது தொடர்பில் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. மருந்துக்கு கட்டுப்பாடு விலையை நிர்ணயிப்பதன்மூலம் பாவனையாளர்கள் நன்மையடைவார்களா? என்ற கேள்வி எழுகின்றது. இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

அத்தியாவசிய மருந்து பொருட்களின் விலைகள் வருடத்துக்கு வருடம் குறைந்த வருகின்றதாகவும்  போட்டிதன்மை காரணமாகவே வலயத்தில் குறைந்த விலைக்கு இலங்கையில் மருந்துகள் கிடைப்பதாகவும் இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் விஷ் கோவிந்தசாமி குறிப்பிட்டார்.

2011 பெப்ரவரி மாதம் இந்தியாவில் வெளியான 'மருந்தாக்கல்' தொடர்பான சஞ்சிகையில் இலங்கையில் மருந்துகளின் விலைகள் குறைவாக உள்ளதாகவும் அதனை இலகுவாக கொள்வனவு செய்யக்கூடிய வகையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் மருந்துப் பொருட்களை மிக குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும் என மருத்துவ விஞ்ஞான மற்றும் மருந்தாக்க திணைக்களத்தின் பேராசிரியர் பி.எம்.ரோஹினி பெர்ணான்டோபுள்ளே உள்ளிட்ட நிபுணர்களின் கருத்துக்களும் அச்சஞ்சிகையில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தன.

அத்துடன் விலை கட்டுப்பாடு கடந்த ஆறு ஆண்டுகளில் இலங்கையில் நிலவாதபோதிலும் தனியார் துறையை சேர்ந்தவர்கள் மருந்துப் பொருட்களின் விலைகளை அதிகரிக்காமல் அதனை சமாந்தரமாக பேணி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கட்டுப்பாடு விலை நிர்ணயிக்கப்பட்டால் அது பல்வேறு வகையான பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதுடன் சந்தையில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டை தோற்றுவிப்பதற்கான சாத்தியக்கூறுகளும் நிலவும்.

விலை கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்படும். இதுதவிர நாட்டின் தேவைக்கேற்ப மருந்துப் பொருட்களின் இறக்குமதி நிலவாதபட்சத்தில் விலைகள் மேலும் அதிகரிக்குமென்பதுடன் இதனால் பாவனையாளர்களே மேலும் அசௌகரியத்துக்குள்ளாவார்கள்.  

விலை கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டால் மருந்துபொருட்கள் விநியோகிப்பவர்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும். இத்தகைய பாரதூரமான விளைவுகள் ஏற்படும்போது கறுப்பு சந்தைமூலம் இலங்கைக்கு மருத்துவ பொருட்கள் உள்நுழைவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். இதுதவிர தமக்கு தேவையான விதத்தில் பலர் தமது சூட்கேஸ் பெட்டிகளிலும் மருந்துப் பொருட்களை இலங்கைக்கு கொண்டுவர முற்படுவர். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இலங்கையின் மருந்து பொருட்கள் மத்தியில் போட்டித்தன்மை நிலவுவதற்கு பதிலாக பொருட்களின் விலைகள் அதிகரித்து அதன் சுமை மக்களையே சென்றடையும்.

உள்ளூர் மருந்து உற்பத்தியாளர்களுக்கான உரிய உற்பத்தி விலைகளின்மை காரணமாக அவர்களும் பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும். அத்துடன் இலங்கையின் பெரும் எண்ணிக்கையிலான மருந்தகங்கள் மூடப்படும் நிலைமை தோன்றும். இதன் காரணமாக அநேகர் தமது தொழில் வாய்ப்புக்களை இழக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையும் உருவாகும்.

உலகிலுள்ள பல்வேறு நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைவாகவே உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அண்டை நாடுகளான இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளை விட இலங்கையில் மருந்துகளின் விலைகள் குறைவு என்பதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

குடிசனம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்திற்கு அமைய உணவு தவிர்ந்த ஏனைய வீட்டு பாவனைகளுக்காக ஒரு வீதத்துக்கும் குறைவானதே செலவாகின்றது.

இலங்கையர்கள் மருந்துப் பொருட்களுக்கு செலவிடும் தொகையானது உணவு உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய பொருட்களை காட்டிலும் மிக,மிக சொற்பமானது. இலங்கையின் அனைத்து பொருட்களினதும் விலைகள் கடந்த 10 ஆண்டுகளில் துரிதமாக அதிகரித்துபோதிலும் மருந்து பொருட்களின் விலைகள் அதிகரிக்கவில்லை என்பதையும் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கையில் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக மூன்று வழிமுறைகளே உள்ளன. அவையாவன
1. அரசாங்க வைத்தியசாலைகள் இலவசமாகவும்  
2. அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (ஓசுசல)
3. தனியார் மருந்தகங்கள்

பெற்றுக்கொள்ள முடியும். விலை கட்டுப்பாடின்றி இத்தகை சிறந்த முறையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய பிரதிகூலங்களை தொடர்ச்சியாக வழங்குவதே இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனத்தின் நிலைப்பாடாகும்.

படவிளக்கம்
இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் தலைவர் விஷ் கோவிந்தசாமி (இடதுபுறமிருந்து மூன்றாவது) உரையாற்றும்போது எடுக்கப்பட்ட படம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .