2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

இரட்டை கௌரவத்தைப் பெறும் எக்ஸ்போ

A.P.Mathan   / 2012 நவம்பர் 08 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


பிரகாசமிக்க 'SLIM வர்த்தக குறியீட்டு சிறப்புத்துவ விருதுகள் 2012' (SLIM Brand Excellence Awards 2012) நிகழ்வில் எக்ஸ்போ ஃபிரைட் (EFL) நிறுவனமானது இரட்டை கௌரவங்களை பெற்றுக் கொண்டது. 'ஆண்டின் மிகச் சிறந்த வணிகத்திலிருந்து - வணிகம் வர்த்தக குறியீடு' (B2B Brand of the Year) பிரிவில் வெள்ளி விருதையும், 'ஆண்டின் மிகச் சிறந்த கூட்டாண்மை சமூகப் பொறுப்பு வர்த்தக குறியீடு' (CSR Brand of the Year) பிரிவில் வெண்கல விருதையும் தட்டிச் சென்றதன் மூலமே இந்த கௌரவங்களைப் பெற்றுள்ளது.

எக்ஸ்போ ஃபிரைட் (EFL) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜகத் பத்திரண கூறுகையில், 'சரக்கு அனுப்புதல் மற்றும் உபகரண வழங்கல் துறையில் மிக எளிதான அடிப்படையில் நடவடிக்கைகளை ஆரம்பித்த நாம், 16 நாடுகளில் எமது பிரிவுகளை பரப்பியுள்ள ஓர் உள்நாட்டுக் கம்பனியாக இன்று திகழ்வதையிட்டு நாம் பெருமிதம் கொள்கின்றோம். ஏனைய பல பிரபல்யமான உற்பத்தி மற்றும் சேவை வர்த்தக குறியீடுகளுக்கு மத்தியில், வணிகத்திலிருந்து வணிகம் (B2B) அடிப்படையிலான சேவைக் கம்பனியாக திகழும் பொருட்டு சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக குறியீடிடல் ஆகியவற்றில் நாம் மேற்கொண்ட முன்னெடுப்புக்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்களாக இருக்கின்றோம். இந்த வர்த்தகத் துறையில் நாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பினை தொடர்ச்சியாக பேணுவதற்கு இது எம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என்பதில் எந்த சந்தேகங்களும் இல்லை' என்றார்.

இத்துறையிலுள்ள தனது சக செயற்பாட்டாளர்களிடையே முன்னணியில் திகழும் அதேநேரம் 'குறிப்பிட்ட வரையறைக்கு அப்பால்' சிந்திக்கும் அதனது பண்பியல்புக்காக பிரபலமாக அறியப்பட்டதுமான எக்ஸ்போ ஃபிரைட் (EFL) நிறுவனமானது, 16 நாடுகளில் உள்ள 45 நகரங்களில் பணியாற்றும் 1200 இற்கும் அதிகமான ஊழியர்களின் பக்கபலத்துடன் இன்று உலகளவில் தனது கால்தடத்தைப் பதித்துள்ளது. அத்துடன் இந்திய துணைக் கண்டத்தில் உறுதிமிக்க பிரசன்னத்தையும் கொண்டியங்குகின்றது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் முதன்னிலை IATA முகவராக EFL நிறுவனம் செயற்படுகின்ற அதேநேரம் ஆசியா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு பிராந்தியங்களிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பிரதிநிதித்துவத்தை கொண்டியங்குகின்றது.

EFL நிறுவனம் வழங்கி வருகின்ற நெகிழ்ச்சித் தன்மையுள்ள தீர்வுகள், நுட்ப ரீதியான அணுகுமுறை போன்ற சிறப்பம்சங்களுடன் இணைந்த விதத்திலமைந்த கடல் மற்றும் வான் வழிகளிலான அதனது பல்வகை போக்குவரத்து மற்றும் உபகரண வழங்கல் சேவையானது – மிகப் பெரிய கடல்மார்க்க மற்றும் வான்வழி சரக்கு அனுப்புதல் சேவை வழங்கும் நிறுவனங்களுள் ஒன்றாக EFL இனை நிலைநிறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக தென்னாசியப் பிராந்தியத்தில் இவ்வாறான ஓர் அந்தஸ்தை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், கூட்டாண்மைத் தொடர்பாடல் மற்றும் கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டங்களுக்கான தலைமை அதிகாரி பெடி வீரசேகர கூறுகையில், 'வர்த்தக குறியீட்டைக் கட்டியெழுப்புவதிலும் அதேபோன்று கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்டங்களிலும் நிறுவனம் மேற்கொண்ட முன்னெடுப்புக்களுக்கு தெட்டத்தெளிவான ஓர் அங்கீகாரமாக இவ்விருதுகள் அமைந்துள்ளன' என்று சிலாகித்துக் கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், 'எக்ஸ்போ ஃபிரைட் (EFL) வர்த்தகக் குறியீட்டின் உறுதித் தன்மை மற்றும் பெறுமதி ஆகியவற்றுக்காகவும், நாடு முழுவதிலும் நாம் மேற்கொண்ட கூட்டாண்மை சமூகப் பொறுப்புத்திட்ட முன்னெடுப்புகளின் வெற்றிக்காகவும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதையிட்டு பெருமிதம் அடைகின்றோம். செயற்பாட்டு மேம்படுத்தல்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக குறியீட்டை கட்டியெழுப்புதல் போன்றவற்றில் தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொள்வதன் மூலம் எமது இணையற்ற வர்த்தக குறியீட்டு உறுதியுரை, எமது சேவையின் இணையற்ற தராதரம் மற்றும் சிறந்த பெறுமதிகளை உருவாக்குதல் ஆகியவற்றின் அடிப்படை பண்பாக நாம் இவற்றை உள்ளடக்கியுள்ளோம். இதற்கு மேலதிகமாக, நாம் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சமூகத்தைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையில் மாற்றமொன்றை ஏற்படுத்தும் வகையிலமைந்த தொடர்ச்சியான முன்முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். இந்த தேசிய ரீதியிலான அங்கீகாரத்தின் மூலம் எமது அணியானது மனமகிழ்ச்சியடைந்துள்ளது மட்டுமன்றி மிகுந்த பெருமிதமும் கொள்கின்றது. உண்மையிலேயே, எதிர்வரும் வருடங்களில் நாம் எம்மளவில் மேலும் சிறப்பாக செயற்படுவதற்கான உணர்வுத் தூண்டுதலை அளிப்பதாக இது அமைந்துள்ளது' என்றார்.

சரக்கு அனுப்புதல் மற்றும் உபகரண வழங்கல் துறையில் இணையற்ற தரத்தையுடைய இந்நிறுவனமானது வாடிக்கையாளர்களின் உபகரண வழங்கல் சம்பந்தமான தேவைப்பாடுகளை புரிந்துகொள்வதன் ஊடாகவும் அவற்றை எளியதாக்குவதன் ஊடாகவும் 'ஆரம்பம் முதல் – இறுதிவரை நேரிடையான' (End-to-End) அடிப்படையிலமைந்த விநியோக வழிமுறை முகாமைத்துவ தீர்வுகளை அளிக்கின்றது. அத்துடன் இத்துறையில் முதன்முதலான உற்பத்திகள் பலவற்றை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்பையும் மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் நிலையானதொரு பட்டியலின் அடிப்படையிலன்றி, தமக்கு மிகப் பொருத்தமான சரக்கு அனுப்புதல் மற்றும் உபகரண வழங்கல் தீர்வுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்வதற்கு வசதியளித்துள்ளது. அவற்றுள் Garments on Hanger மற்றும் Pick-n-pack போன்ற தீர்வுகளும் அதேபோல், வாடிக்கையாளர்கள் தமது உற்பத்திகள் தொடர்பில் பரிசீலனைகளை மேற்கொள்ளக் கூடிய விதத்தில் இந்நிறுவனம் நிறுவியுள்ள தர உறுதிப்படுத்தல் நிலையமும் உள்ளடங்குகின்றன.

'பொது விற்பனை முகவராக' (GSA) எக்ஸ்போலங்கா பிரதிநிதித்துவம் செய்யும் பதினான்கு முன்னணி சர்வதேச விமான சேவைகளூடான செயற்பாடுகள் தொடர்பிலும், மனதில் பதியத்த மற்றும் நீளமான பயணிகள் பெயர்ப்பட்டியலை வெளிப்படுத்தி உள்ளது. நிறுவனம் தனது விலையிடல் நுட்பத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் மேலும்; போட்டிகரமான நிறுவனமாக திகழ்வதற்கும் இது வழிவகுத்துள்ளது.

அதேநேரத்தில், எக்ஸ்போ ஃபிரைட் (EFL) நிறுவனமானது தனது கூட்டாண்மை சமூகப் பொறுப்புத் திட்ட செயற்பாடுகளில் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த மக்களையும் உள்வாங்கியுள்ளது. இவ்வருடத்தின் முற்பகுதியில் - உலகெங்கும் ஏழு கண்டங்களிலும் உள்ள 135 நாடுகள் மற்றும் ஆட்சி நிலப்பகுதிளைச் சேர்ந்த 5251 நகரங்களிலும் பட்டினங்களிலும் வாழ்கின்ற நூற்றுக் கணக்கான மில்லியன் மக்களுடன் ஒன்றிணைந்து 'Earth Hour' நிகழ்வினை இலங்கையும் அனுஷ்டிப்பதற்கு EFL நிறுவனம் வழி ஏற்படுத்திக் கொடுத்தது.

உலக சுற்றுச்சூழல் தினம் (WED) ஆனது பாடசாலை மாணவர்கள் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்களின் சிறப்பான பங்குபற்றுதலுடன் உள்நாட்டில் அனுஷ்டிக்கப்பட்ட மற்றுமொரு சர்வதேச நிகழ்வாக காணப்படுகின்றது. இந்நிறுவனத்தின் ஏனைய சூழல் நட்புறமிக்க செயற்பாடுகளுள் புவி வெப்பமடையும் விவகாரம் தொடர்பில் மாணவர்களுக்கு அறிவூட்டுதல் அத்துடன் சக்தி மற்றும் நீரினை சேமித்தல், காகிதக் கழிவுகளை மீள்-சுழற்சிக்கு உட்படுத்தல் மற்றும் இ-கழிவுகளை அழித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட தீவிரமான பிரசார நடவடிக்கை போன்றனவும் உள்ளடங்கும்.

சமுதாய சுகாதார அபிவிருத்தியை கருத்திற்கொண்டும் யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கத்தின் அடிப்படையில் நாட்டின் வட பகுதியில் வாழும் மக்களுக்கு தமது சகோதரத்துவத்தை விஸ்தரிக்கும் வகையிலும் எக்ஸ்போ ஃபிரைட் (EFL) நிறுவனமானது வடக்கிற்கு நடமாடும் மலசல கூடங்களை அன்பளிப்புச் செய்தது. மாற்றியமைக்கப்பட்ட கொள்கலன்கள் ஒவ்வொன்றும்; எட்டு மலசல கூடங்களையும் முகம் கழுவும் இரு அறைகளையும் உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

Expo Medix என்பது பொதுவான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு மருத்துவ மற்றும் சிகிச்சை நிலையமாகும். இலாப நோக்கற்ற இந்த செயற்பாட்டின் மூலம் நோயாளர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதுடன், மருந்துப் பொருட்கள் அதற்கான செலவின் அடிப்படையிலேயே விநியோகிக்கப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, ஒரு கிரமமான ஒழுங்குமுறையில் மருத்துவ முகாம்களையும் இந்நிலையம் நடாத்தி வருகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X