2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கொமர்ஷல் கிரெடிட் 'வருடத்துக்கான சேவை வியாபார குறியீடு' விருதை வென்றுள்ளது

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


SLIM வியாபார குறியீட்டு சிறப்புத்தன்மை 2012இல் கொமர்ஷல் கிரெடிட் இரட்டை வெற்றியைப் பெற்றுள்ளது. 'வருடத்துக்கான சேவை வியாபார குறியீட்டுக்கு' தங்க விருதையும் 'வருடத்துக்கான உள்ளூர் வியாபார குறியீட்டுக்கு' வெண்கல விருதையும் பெற்றுள்ளது. SLIM விருதின் வரலாற்றில் முதல் முறையாக ஒரு நிதி நிறுவனம் இலங்கையின் சிறப்பான வியாபார குறியீட்டுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பலம் மற்றும் நிலையான தன்மையின் அங்கீகாரமாக இதனை குறிப்பிட்ட கொமர்ஷல் கிரெடிட்டின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஷhன் எகொடகே 'இந்த விருதுகளுடன் எம்மை நாம் தாழ்மைப்படுத்துவதுடன், எமது மொத்தக் குழு மற்றும் இலங்கை முழுவதுமுள்ள 325,000 வாடிக்கையாளர்கள் சார்பில் இதனை பெற்றுக்கொள்கிறோம். நாம் ஆழமான அர்ப்பணிப்புடன் இந்த பயணத்தை மேற்கொண்டோம். கொமர்ஷல் கிரெடிட்டின் மானுட விழுமியங்கள் மற்றும் நாம் ஊக்கமளிக்கும் கொள்கை அடிப்படையிலான வியாபார பாரம்பரியம் ஆகியனவே எமது வெற்றியின் அடித்தளமாக உள்ளது. இதுவே கொமர்ஷல் கிரெடிட் வியாபார குறியீட்டை சிறப்பானதாக வைத்துள்ளது. இந்த வெற்றியை மேலும் மேம்படுத்தி எமது சேவைக் குறியீடு மற்றும் நிறுவன தலைமைத்துவத்தை இலங்கை முழுவதும் எடுத்துச் செல்லவுள்ளோம்' எனத் தெரிவித்தார்.

கொமர்ஷல் கிரெடிட்டின் வேகமான வளர்ச்சியானது அண்மைக்காலத்தில் மிகவும் பேசப்பட்ட வெற்றிக் கதைகளுள் ஒன்றாக காணப்படும் அதேவேளை, நிதிச் சந்தையை கவர்ந்தும் உள்ளது. இலங்கை மக்களின் நம்பிக்கையை அது தொடர்ந்தும் பெற்று வருகின்றது. தற்போது ரூ. 8.3 பில்லியனாக உள்ள அதன் நிலையான வைப்புத் தளத்தில், கடந்த நிதியாண்டின் 76 சதவீத வளர்ச்சியில் இது தெளிவாக புலப்படுகின்றது.

நிறுவனத்தின் கிளை அண்மையில் பொலன்னறுவை, கேகாலை மற்றும் வத்தளை உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளதுடன், பலதரப்பட்ட உற்பத்திகளையும் சேவைகளையும் வழங்குகின்றது. நிலையான வைப்பு, குத்தகை, வாடகைக் கொள்வனவு, தங்க கடன், காணி விற்பனை, தனிநபர் கடன், கல்விக் கடன் மற்றும் நுண் நிதி ஆகியன அவற்றுள் அடங்கும்.

இந்த விஸ்தரிப்பானது அதன் சிறப்பான சேவைகளையும் நிபுணத்துவத்தையும், இலங்கை முழுவதும் அதிகரித்துவரும் வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக வழங்க முன்வந்துள்ளது. புதிய கிளைகள் மற்றும் சேவை நிலையங்களுடன், நிறுவனம் நாடு முழுவதும் 30 இடங்களில் நிலை கொண்டுள்ளது. இது புதிய நிறுவன திட்டமிடலில் குறுகிய காலப்பகுதியில் சிறந்த வெற்றியாக உள்ளதுடன், நிறுவனத்தின் வெற்றிக்கு சாட்சியாகவும் உள்ளது.

மிகவுயர்ந்த சர்வதேச தராதரங்களிலான சேவைகள் மற்றும் செயற்பாடுகளை நிலைநிறுத்திச் செயற்படுகின்ற முதன்மையான நிதியியல் நிறுவனம் என்ற நற்பெயரினை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், கொமர்ஷல் கிரெடிட் நிறுவனமானது கடந்த ஒக்டோபரில் மலேசியாவில் இடம்பெற்ற UDC Business Awards 2011 நிகழ்வின்போது 'ஆசியாவின் மிகச் சிறந்த நிதிக் கம்பனி' என்ற விருதினைப் பெற்றுக் கொண்டது.

ஈடிணையற்ற வெற்றிகள் மற்றும் எதிர்காலத்திற்கான உறுதியானதொரு திட்டம் ஆகியவை தொடர்பில் நிரூபிக்கப்பட்ட வரலாற்றுப் பதிவுகளை கொண்டுள்ள இந்நிறுவனம் எதிர்காலத்தின் பொருட்டு தனக்குத்தானே வகுத்துக் கொண்டுள்ள இலட்சிய இலக்குகளை அடைந்து கொள்ளும் விடயத்தில் நிறுவன தலைமைத்துவம் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது. 'வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தில் நாம் வெளிப்பட்டது தொடக்கம், இலங்கையின் 75 வருட கால நிதித்துறையின் ஒரு மாபெரும் வெற்றியை பெற்றுள்ளோம். நாம் அடைவதற்கு திட்டமிட்டுள்ள வெற்றியானது இப்போது நாம் பெற்றுள்ள வெற்றியின் தொடர்ச்சியானது என்பதுடன் எமது பெறுமதிமிக்க பங்குதாரர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் எமது செயல் வல்லமை மீது வைத்துள்ள நம்பிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்ததுமாகும்' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .