2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

முதலரையாண்டில் பங்குமுகவர் நிறுவனங்கள், நம்பிக்கை அலகு நிதியங்களின் வருமானத்தில் வீழ்ச்சி

A.P.Mathan   / 2012 நவம்பர் 19 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்


(ச.சேகர்)

2012ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு பகுதியில் தொடர்ச்சியாக பங்குச்சந்தை சரிவான பாதையில் பெறுபேறுகளை வெளிக்காட்டியிருந்தமையால் பங்குமுகவர் நிறுவனங்கள், நம்பிக்கை அலகு நிதியங்கள் போன்றவற்றின் வருமானங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்நிறுவனங்களின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய வங்கியின் மூலம் பிறப்பிக்கப்பட்ட உயர் வட்டி வீதங்கள், முகவர்களின் கடன் வரையறைகளில் இறுக்கம் போன்றன இந்த வீழ்ச்சிக்கு மேலும் ஏதுவான காரணிகளாக அமைந்திருந்தன.

கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 5556.32 ஆகவும், மிலங்கா விலைச் சுட்டெண் 5144.32 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3028.68 ஆகவும் அமைந்திருந்தன.

நவம்பர் 12ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 1,439.192.028 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 19,574 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 18,846 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 728 ஆகவும் பதிவாகியிருந்தன.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் பிரவுண்ஸ் இன்வெஸ்ட்மென்ட், மிரமர், றிச்சர்ட் பீரிஸ் எக்ஸ்போர்ட்ஸ், சிலோன் பெவரேஜஸ் மற்றும் டங்கரீன் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

சம்சன் இன்டர்நட், இன்ஃப்ராஸ்ரைக்சர், சிலோன் பிரின்டர்ஸ், செலின்சிங் மற்றும் செரண்டிப் லான்ட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் மற்றும் வெள்ளி விலை
கடந்த வாரம் தங்கத்தின் விலை 24 கெரட் பவுணொன்று 57,250.00 ரூபாவை அண்மித்து காணப்பட்டதாக தங்கநகை வட்டாரங்களின் மூலம் அறிய முடிந்தது. 22 கெரட் பவுணொன்று சராசரியாக 52,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இந்தவாரம் தங்கத்தின் விலை குறைவடைந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

வெள்ளி 1 கிலோகிராமின் சராசரி விலை 1480.00 ரூபாவாக காணப்பட்டதாக சந்தை அறிக்கைகள் தெரிவித்திருந்தன.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 131.40 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 208.86 ஆக காணப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X