2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வீதிகள் புனரமைப்புக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி

A.P.Mathan   / 2012 நவம்பர் 20 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் வீதிகளை புனரமைப்பு செய்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 98 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க முன்வந்துள்ளது. சுமார் 200 கிலோமீற்றர் பாதைகளை புனரமைப்பு செய்ய தேவைப்படும் 112.9 மில்லியன் டொலர்கள் திட்டத்தின் ஒரு பகுதியை வழங்கவே ஆசிய அபிவிருத்தி வங்கி முன்வந்துள்ளது.

இலங்கை நிதி அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இவ்வாறு பெறப்படும் நிதி, வட மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களை சேர்ந்த 19 பாதைகளை மீளமைக்கவும், மதகுகள் மற்றும் பாலங்களை சீரமைக்கவும் பயன்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடன் வழங்கலுக்கான உடன்படிக்கையில் இலங்கை திறைசேரியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் றீட்டா ஓ.சுலைவான் ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர்.

இந்த திட்டம் 2017 டிசெம்பர் மாதம் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .