2024 மார்ச் 28, வியாழக்கிழமை

நெஸ்லே நிறுவனத்தின் இலங்கைக்கான முகாமைத்துவக் கட்டமைப்பு மாற்றம்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான அலொய்ஸ் ஹொவ்பவர் நெஸ்லே நிறுவனத்தின் மலேசியா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கான தொழிற்பாடுகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

சர்வதேசமட்டத்தில் இடம்பெற்றுவருகின்ற சிரேஷ;ட முகாமைத்துவக் கட்டமைப்பு மாற்றங்களுக்கு அமைவாக நெஸ்லே லங்கா பீஎல்சீ நிறுவனத்தின் தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளரான அலொய்ஸ் ஹொவ்பவர் - நெஸ்லே நிறுவனத்தின் மலேசியா மற்றும் சிங்கப்பூர் பிராந்தியத்தின் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நெஸ்லே குழுமம் அறிவித்துள்ளது. ஹொவ்பவர் 2013 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் தனது புதிய பணிகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.

தற்போது நெஸ்லே நிறுவனத்தின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான தலைமை விற்பனை அதிகாரியாகப் பணியாற்றிவருகின்ற மலேசியப் பிரஜையான கணேசன் அம்பலவாணர் 2013 ஜனவரி 1ஆம் திகதி முதல் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். 1991இல் நெஸ்லே நிறுவனத்தில் இணைந்த அம்பலவாணர் - வர்த்தகநாம முகாமைத்துவத் துறையில் பல்வேறு பதவிநிலைகளை வகித்துள்ளதுடன், தொடர்ந்து இனிப்புத் தின்பண்டங்கள் உற்பத்தித் தொழிற்துறையில் வர்த்தகத் தொழிற்பாட்டு முகாமையாளராகவும் பணியாற்றியிருந்தார். நெஸ்லே மலேசியா நிறுவனத்தின் விற்பனைத் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளராக 2003ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அவர் தனது முதலாவது சர்வதேசமட்டத்திலான நியமனமாக தற்போது வகித்துவருகின்ற பொறுப்பை 2008ஆம் ஆண்டில் ஏற்றிருந்தார்.

ஹொவ்பவர் 2010ஆம் ஆண்டு முதல் நெஸ்லே லங்கா நிறுவனத்தில் பணியாற்றிவந்துள்ளார். உலகளாவிய நெஸ்லே குழுமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்துவந்துள்ள அவர், உள்நாட்டு முகாமைத்துவத்தைப் பொறுத்தவரையில் மிகவும் உறுதியான தலைமைத்துவ வழிகாட்டல் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஆசியா நாடுகளின் வியாபாரக் கட்டமைப்புக்களைப் பொறுத்தவரையில் சிறந்த பரீட்சயத்தையும் கொண்டுள்ளார்.

நெஸ்லே லங்கா நிறுவனம் அவரது தலைமைத்துவத்தின் கீழ் 20 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதுடன், நிலைபேற்றியலுடனான பெறுபேற்றுத்திறன் மற்றும் தேசத்தின் கிராம அபிவிருத்தி மீதான பங்களிப்பு ஆகியவற்றிற்காக பல்வேறு பெருமதிப்புமிக்க விருதுகளை வென்று பாராட்டுக்களையும் சம்பாதித்துள்ளது. மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் 2011ஆம் ஆண்டில் நாட்டின் மிகச் சிறந்த வர்;த்தகக் குடிமகன் நிறுவனம் என்ற பட்டத்தை முடிசூடி தனது பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தது. அவர் பதவிவகித்த காலகட்டத்தில் நெஸ்லே லங்கா நிறுவனம் 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வரலாற்றில் முதற்தடவையாக அதியுச்ச அளவாக ஐந்து மில்லியன் லீற்றர்களுக்கும் அதிகமான பாலைக் கொள்வனவு செய்திருந்ததுடன், இந்த வருடத்தில் உள்நாட்டு பாற்பண்ணையாளர்களுக்கு நெஸ்லே லங்கா நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூபா 2.6 பில்லியன் தொகையை செலுத்தவும் வழிவகுத்துள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X