2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஒராக்கள் ஏற்பாடு செய்யும் திங்க்குவெஸ்ட்-2012 போட்டிகளுக்கு ஆக்கங்கள் கோரப்படுகின்றன

A.P.Mathan   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒராக்கள் நிறுவனத்தின் அங்கமான ஒராக்கள் கல்வி மையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்படும் திங்க்குவெஸ்ட் 2012ஆம் ஆண்டுக்கான போட்டிகளில் பங்குபற்றுவதற்காக இலங்கை மாணவர்களுக்கும் அழைப்புவிடுத்துள்ளது. இந்த போட்டியில் 22 வயது வரையிலான மாணவர்கள் அனைவரும் பங்குபற்ற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளை ஏற்பாடு செய்வதன் நோக்கம் மாணவர்களின் சிந்தனைத் திறன், தொடர்பாடல் திறன் மற்றும் தொழில்நுட்ப அறிவு போன்றவற்றை பயன்படுத்தி எவ்வாறு சிக்கலான பிரச்சினையொன்றை தீர்க்கும் ஆளுமையை விருத்தி செய்வது என்ற வகையில் அமைந்துள்ளது.

இந்த போட்டிகள் குறித்து ஒராக்கள் கல்வி மையத்தின் பதில் தலைவர் பிராட் சஃவ்வர் கருத்து தெரிவிக்கையில், 'திங்க்குவெஸ்ட் போட்டிகளின் மூலம் மாணவர்கள் சர்வதேச ரீதியில் தமது ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும். இதன் மூலம் அவர்களின் ஆளுமை விருத்தி செய்யப்படுகிறது. பாடசாலைகளில் மற்றும் வேலைத்தளங்களில் எவ்வாறு தமது செயற்பாடுகளில் சித்தியடைவது குறித்து இந்த போட்டிகள் மாணவர்களுக்கு சிறந்த முன் அனுபவங்களை வழங்குகின்றன' என்றார்.

இந்த போட்டியில் பங்குபற்ற விரும்பும் மாணவர்கள், திங்க் குவெஸ்ட் செயற்திட்டங்கள், டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஆப்ளிகேஷன் அபிவிருத்தி போன்ற பிரிவுகளின் கீழ் தமது ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான இறுதி திகதி 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் வெற்றிபெறுவோருக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்படவுள்ளதுடன், தெரிவு செய்யப்படும் ஆக்கங்கள் திங்க் குவெஸ்ட் வைப்பகத்தில் பேணப்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் 7600 குழுக்கள் 52 நாடுகளிலிருந்து பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் இலங்கை நாலந்தா கல்லூரியின் மாணவர்கள் குழுவுக்கும் வெற்றி கிட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்கள் http://www.thinkquest.org/competition எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .