2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

செலான் வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் நியமனம்

Kogilavani   / 2013 பெப்ரவரி 06 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனாதிபதி சட்டத்தரணியும் செலான் வங்கியின் சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளருமான நிஹால் ஜயமான்ன செலான் வங்கியின் புதிய தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இதேவேளை, செலான் வங்கியின் பிரதி தலைவராக இஷார நாணயக்கார பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியான நிஹால் ஜயமான்ன, பிரசித்திபெற்ற சட்டத்தரணியும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமாவார்.

சட்டத்துறையில் இவர் பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார். அவற்றுள் - இலங்கை சட்ட ஆணைக்குழுவின் தலைவர், கம்பனி சட்ட ஆலோசனை ஆணைக்குழுவின் தலைவர், இலங்கை சட்டக்கல்லூரி மன்ற தலைவர் மற்றும் சட்டத்துறை உட்கட்டமைப்பு பராமரிப்பு நிதிய நம்பிக்கைப் பொறுப்புச் சபையின் உறுப்பினர் போன்ற பதவிகளை இவர் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், SAARCLAW

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Tamil Mirror

Tweets by Tamilmirror

X

X