2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

முதலாவது சர்வதேச தங்கப்பதக்கத்தை வென்ற சன்சில்க் ரமணி பெர்ணான்டோ கல்விக்கூடத்தின் பேராசிரியர்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 13 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


UK City & Guilds இன் சிகையலங்காரப் பிரிவில் கீழ் முதற்தடவையாக ரமணி பெர்ணான்டோ பயிற்சி கூடத்தின் நிர்வாகப் பணிப்பாளரான லக்கி லெனகலவிற்கு சிறப்பு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கையில் சிகையலங்கார டிப்ளோமா பாடத்திட்டத்தில் பேராசிரியராக வெளிப்படுத்திய செயல்திறனை அடையாளப்படுத்தும் நோக்கில் இப்பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இவர் கற்பித்தலில் சிறப்பு உயர் டிப்ளோமாவையும், பயிற்சி மற்றும் மதிப்பீடு, சிகையலங்காரப் பிரிவில் உரிமைச்சான்றாளர் விருதினையும் பெற்றுள்ளார்.

City & Guilds நிறுவனத்தினால் பேராசிரியர் பிரிவின் கீழ் பதக்கங்கள்; வழங்கப்படுவது இதுவே முதற்; தடவையாகும். ரமணி பெர்ணான்டோ கல்விக்கூடத்திற்கு மாத்திரமன்றி தமது தாய்நாட்டிற்கும் லக்கி பெருமை சேர்த்துள்ளார்.

சன்சில்க் - ரமணி பெர்னான்டோ கூந்தல் மற்றும் அழகுக்கலை கல்விக்கூடமானது, யுனிலீவர் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் கூந்தல் பராமரிப்பு வர்த்தக நாமமான சன்சில்க் மற்றும் ரமணி பெர்னான்டோ கல்விகூடத்திற்கிடையேயான பங்காண்மையாகும்.

ஐக்கிய இராச்சியத்தை தளமாக கொண்டியங்கும் City & Guilds நிறுவனமானது முன்னணி தொழில்முறைப் பயிற்சி நிலையமாக திகழ்வதுடன், 80 நாடுகளுக்கும் மேலாக செயற்படுகிறது. City & Guilds நிறுவனத்தினால் தனிச்சிறப்புக்கு வழங்கும பதக்கமானது ஓர் சர்வதேச நிகழ்ச்சித் திட்டமாக 100 வருடங்களுக்கும் மேலாக முன்னெடுக்கப்படுகிறது. இந்நிலையத்தின் ஊடாக தமது இலக்குகளை அடைய பல்வேறு பிரிவுகளில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் சாதனைகள் அடையாளப்படுத்தப்படுகிறது. 2005 ஆம் ஆண்டு சன்சில்க் - ரமணி பெர்னான்டோ கூந்தல் மற்றும் அழகுக்கலை கல்விக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது முதல் சிகையலங்கார பாடத்திட்டங்களுக்கு City & Guilds இன் அங்கீகாரத்தை பெற்றுள்ளதுடன், கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச சான்றுகளை கொண்ட சுமார் 3000 பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது. இலங்கையின் முன்னணி கூந்தல் பராமரிப்பு வர்த்தகநாமமான சன்சில்க் மற்றும் ரமணி பெர்னான்டோ கல்விக் கூடத்திற்கிடையேயான பங்காண்மை 2005ஆம் ஆண்டு தொடக்கம் காணப்படுகிறது.

'பல ஆண்டுகளாக லக்கி எனக்கு பக்கபலமாக செயற்பட்டார் எனக்கூறிக் கொள்வதில் பெருமையடைகிறேன். மேலும் எமது நிலையத்தின் இன்றைய அபார வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினை வழங்கியுள்ளார். அவர் கடின உழைப்புடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார். என்னால் இவ்விருதுக்கு பொருத்தமான வேரொருவரை நினைத்துக்கூட பார்க்க முடியாது' என ரமணி பெர்னான்டோ தெரிவித்தார். 'மேலும் கடந்த 8 ஆண்டுகளாக எமது வர்த்தகநாம பங்காளராக செயற்பட்ட சன்சில்க்கிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்பங்காண்மை ஊடாக கல்விக்கூடம் மற்றும் வர்த்தகநாமத்தின் நம்பகத்தன்மையை கட்டியெழுப்ப முடிந்துள்ளது' என தெரிவித்தார்.

சன்சில்க் - ரமணி பெர்னான்டோ அழகுக்கலை கல்விகூடத்துடனான பங்காண்மை குறித்து யுனிலீவர் நிறுவனத்தின் கூந்தல் பராமரிப்பு பிரிவின் தலைமை அதிகாரியான வத்சலா அலுத்கெதர கருத்து தெரிவிக்கையில், 'ஆரம்பத்தில் இருந்து யுனிலீவர் நிறுவனமானது எதிர்கால தலைமுறையினரின் சிகையலங்காரம் மற்றும் அழகுக்கலை நிபுணர்களுக்கு கல்விப்பயிற்சி வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தினர். மேலும் நிபுணத்துவம் வாய்ந்தவர்களை உருவாக்கும் இந் நிறுவனத்துடனான பங்காண்மை குறித்து பெருமையடைவதுடன், இலங்கையிலுள்ள இளம் பெண்களின் கனவுகளை லக்கியை போல நனவாக்கிக் கொள்ள சன்சில்க் வர்த்தக நாமத்தின் மூலம் அனுசரணை மற்றும் ஆதரவு வழங்கப்படுகிறது' என்றார்.

ரமணி பெர்னான்டோ கல்விக்கூடத்தில் கல்வியை தொடர்ந்த பழைய மாணவர்களில் பலர் சர்வதேச பதக்கங்களை வென்றுள்ளனர். அண்மையில் சிகையலங்காரப் பிரிவில் 2012 UK City & Guilds இன் சிறப்பு பதக்கத்தை நிஷா வௌகம வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .