2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிங்கப்பூர் வரை தனது சேவையை விஸ்தரித்துள்ள ஒரெஞ்ச்

A.P.Mathan   / 2013 பெப்ரவரி 14 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கையின் மின் உதிரிப்பாக உற்பத்தியில் முன்னிலை நிறுவனமாக விளங்கும் ஒரெஞ்ச் இலக்ரிகல் நிறுவனம் தமது உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு விஸ்தரிக்கும் நோக்கில் சிங்கப்பூர் நிறுவனமொன்றுடன் கைகோர்த்துள்ளது.

ஷிரகாவா டென்கி தனியார் நிறுவனத்தின் 49 வீதமான பங்குகளை கொள்வனவு செய்துள்ள ஒரெல் பா ஈஸ்ட் (தனியார்) நிறுவனம் ஊடாக தமது உற்பத்திகளை தென் கிழக்கு ஆசிய சந்தையில் விஸ்தரிக்க ஒரெஞ்ச் தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பில் ஒரெஞ்ச் இலெக்ரிகல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் குஷான் எஸ். கொடிதுவக்கு கருத்து தெரிவிக்;கையில், 'ஒரெஞ்ச் உற்பத்திகள் சர்வதேச கவனத்தை ஈர்த்தெடுக்க வேண்டும் என்பதை கருத்திற்கொண்டு சிங்கப்பூர் சந்தை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் சந்தை வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்றது. இந்த கூட்டு வர்த்தகம் சிறந்தது. சந்தைக்கு தேவையான பொருட்களை சிங்கப்பூர் பங்குதாரர்கள் விநியோகிக்கும் அதேநேரம், உற்பத்திகளை இலங்கையிலுள்ள ஒரெஞ்ச் நிறுவனம் முன்னெடுக்கும். இதுவரையில் நாம் எமது வர்த்தக நடவடிக்கைகளை உள்ளுரில் மாத்திரமே மேற்கொண்டோம். எமது உற்பத்திகள் சர்வதேச சந்;தைக்கு கொண்டு செல்வதற்கான பாதைகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் எதிர்காலத்தில் புரூனை, கம்போடியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கும் எமது சேவையை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளோம்' என குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் ஒரெல் பா ஈஸ்ட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் லிம் ஷியேன் சியோங் கருத்து தெரிவிக்கையில், 'சிங்கப்பூர் மக்கள் நல்ல உற்பத்திகளை மாத்திரமே எதிர்பார்க்கின்றனர். அது ஆசியாவில் தயாரிக்கப்படுகின்றதா அல்லது ஐரோப்பாவில் தயாரிக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தமாட்டார்கள். அத்தகைய நிலையில் சிறந்த உற்பத்தியை வழங்கும் சவாலை ஒரெஞ்ச்  நிறுவனம் ஏற்றுள்ளது. தமது உற்பத்திகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்ல தயாராகும் ஒரு நிறுவனமாகும். அவர்களால் சந்தைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை போன்ற தரத்தை கொண்டுள்ளது. ஏனைய நிறுவனங்களை போலல்லாது ஒரெஞ்ச் நிறுவனம் தமது தயாரிப்புக்கள் தொடர்பில் அதிக அக்கறையுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகின்றது. உலக பொருளாதாரத்தின் கவனம் ஆசியாவின் மீது திரும்பியுள்ள இக்காலகட்டத்தில் தமது உற்பத்தியை சர்வதேசத்துக்கு கொண்டு செல்ல எம்மால் முடியும்' என குறிப்பிட்டார்.

உயர்ரகத்தை இலக்கு வைத்து உற்பத்தி செய்யப்பட்டுள்ள ஒரெஞ்ச் உற்பத்திகளுக்கு தற்போது சர்வதேச சந்தையில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இவை அனைத்தையும் உற்பத்தி செய்யும் ஒரெஞ்ச் நிறுவனத்தின்  கைத்தொழிற்சாலை மீகொடையில் அமைந்துள்ளது.

அத்துடன்  சிஎப்எல் மின்குமிழ்களை மீள்சுழற்சி செய்யும் கைத்தொழிற்சாலையொன்றையும் நிறுவனம் கொண்டுள்ளமை விசேட அம்சமாகும். சுற்றாடலுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் நிறுவனம் தெளிவாக உள்ளது.    

நான்கு கண்டங்களில் 10 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தமது உற்பத்திகளை விநியோகிக்கும் ஒரெஞ்ச் நிறுவனத்தின் வருடாந்த புரள்வு ஆறு பில்லியன் ரூபா வரை பதிவாகியுள்ளதுடன் 1000 இற்கும் அதிகமான ஊழியர்களை தம்வசம் நிறுவனம் கொண்டுள்ளமையும் விசேட அம்சமாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X