2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அதிகளவு பங்கு விற்பனையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம்

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


- பங்குச்சந்தை மற்றும் தங்கம், வெள்ளி விலை நிலைவரங்கள்
 
-ச.சேகர்
 
கடந்த வார இறுதிப்பகுதியில் உள்நாட்டு சிறு முதலீட்டாளர்களின் அதிகளவு சந்தை ஈடுபாட்டின் காரணமாக பங்குச்சந்தையின் பிரதான சுட்டிகள் உயர்வடைந்த நிலையில் பதிவாகியிருந்தன. ஆனாலும் கடந்த வெள்ளிக்கிழமை, வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் பிரதான சுட்டெண் 0.78 புள்ளிகள் சரிவடைந்து எதிர்பெறுமதியில் நிறைவடைந்திருந்ததுடன், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 13 புள்ளிகள் அதிகரித்து நிறைவடைந்திருந்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்கு விற்பனையில் கடந்தவாரம் ஆர்வம் செலுத்தியதை அவதானிக்க முடிந்ததுடன், சிலோன் டுபாக்கோ, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், வட்டவளை பிளான்டேஷன், கொமர்ஷல் வங்கி, சம்பத் வங்கி, சன்சைன் ஹோல்டிங்ஸ், எயிட்கன் ஸ்பென்ஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகளின் கடந்தவாரம் பெருமளவு ஆதிக்கம் செலுத்தியிருந்தன. 
 
கடந்த வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நடவடிக்கைகள் நிறைவடையும் பொழுது, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,155.82 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3490.57 ஆகவும் அமைந்திருந்தன. 
 
ஜூலை 29ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 4,005,800,509 அமைந்திருந்தது. கடந்தவாரம் மொத்தமாக 18,125 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 16,917 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,208 ஆகவும் பதிவாகியிருந்தன.
 
கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிலோன் டொபாக்கோ, குட் ஹோப், செரன்டிப் லான்ட், சிட்ரஸ் ஹிக்கடுவ மற்றும் ஹியுஜே போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன. 
 
மெட்.ரெஸ்.ஹொ, மொரிசன்ஸ், ஃபின்லேஸ் கொலம்போ, அனிலங்கா ஹோட்டல்ஸ் மற்றும் ஆசிரி சென்ரல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.

தங்கம் மற்றும் வெள்ளி விலை 
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 44,000 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 40,500 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. 
 
நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 133.22 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 201.82 ஆக காணப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .