2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

கிரவுண் மற்றும் ஜோன்கீல்ஸ் அமைதி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த இரு மெகா பில்லியன் ரூபா பெறுமதியான சொகுசு கசினோ விடுதிகள் நிர்மாணிப்பு தொடர்பான விவாதங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக குறித்த திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்களான கிரவுண் மற்றும் ஜோன்கீல்ஸ் ஆகியன அமைதி காத்து வருகின்றன.
 
இது தொடர்பாக கிரவுண் குழுமத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரவுண் றிசோர்ட்ஸ் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு பூரண மதிப்பளிக்கிறது. தொடர்ந்தும் இலங்கை அரசின் தொடர்புடைய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு செயற்பாடுகளை முன்னெடுக்க எம்மை அர்ப்பணித்துள்ளோம். வெகுவிரைவில் குறித்த நாடாளுமன்ற விவாதம் இடம்பெறும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு பங்குபரிவர்த்தனையில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குதாரர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “குறித்த விவாதம் பிற்போடப்பட்டுள்ளமை குறித்து தாம் அறிந்துள்ளதாகவும், ஆனாலும் குறித்த திட்டம் நிறுவுவது தொடர்பில் எவ்விதமான மாற்றத்தையும் கம்பனி கொள்ளவில்லை” என தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X