2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கொழும்பு மோட்டர் கண்காட்சி 2013 இன் உத்தியோகபூர்வ காப்புறுதி பங்காளராக ஜனசக்தி

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி நிறுவனமானது கொழும்பு மோட்டர் கண்காட்சியின் உத்தியோகபூர்வ காப்புறுதி பங்காளராக  இணைந்திருந்தது. இந் நிகழ்வானது செப்டெம்பர் மாதம் 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி கூடத்தில் நடைபெற்றது. ஆசிய கண்காட்சி மற்றும் மாநாட்டின் மூலம் 6ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மோட்டர் கண்காட்சியானது தொழிற்துறை நாட்காட்டியின் மிக முக்கிய நிகழ்வாக அமைந்திருந்தது. மோட்டார் கார் மற்றும் மோட்டர் வாகன பாகங்கள் காட்சிப்படுத்தப்பட்ட இந் நிகழ்வில் 60,000 ற்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.
 
இந்த நிகழ்வில் தொழிற் துறைசார் நிபுணர்கள், நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு தற்போதைய அபிவிருத்திகள் குறித்த தகவல்கள் மற்றும் எதிர்கால தொழிற்துறையை தீர்மானிக்கக்கூடிய நவீன தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்தியிருந்தனர்.
 
'இலங்கையின் மிகப்பெரிய மோட்டர் நிகழ்வாக கொழும்பு மோட்டர் கண்காட்சி விளங்குகிறது. இக் கண்காட்சியானது இலங்கையின் மிக முக்கிய மோட்டர் தொழில்சார் பங்காளர்களை ஒன்றிணைத்து மோட்டர் ஆர்வலர்களின் மத்தியில் பொருட்கள் மற்றும் சேவைகளை காட்சிப்படுத்தும் வகையிலான தொடர்பாடல் தளத்தை உருவாக்குகிறது. இதில் பங்காளராக செயற்பட்டதையிட்டு மகிழ்ச்சியடைகிறோம்' என ஜனசத்தி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் உதவி பொது முகாமையாளர் ஷெனாலி விக்ரம ஆராச்சி தெரிவித்தார்.  
 
ஜனசக்தி நிறுவனமானது இலங்கையின் மோட்டார் வாகனப் பிரியர்கள் மற்றும் உரிமையாளர்கள் தங்களது மோட்டார் வாகனங்களுக்கான பராமரிப்பு வழிகாட்டல்களையும், இலவச வாகன பரிசோதனைகளையும் செய்து கொள்ளும் வகையில் மாதந்தோறும் 'மோட்டர் கிளினிக்' இனை முன்னெடுத்து வருகின்றது. இந் நிறுவனத்தின் முன்னணி காப்புறுதி திட்டங்களில் ஒன்றான ஃபுல் ஒப்ஷன் மூலம், 24 மணிநேர வாடிக்கையாளர் சேவை, உடனடி பண மீளப்பெறுகைக்கான அங்கீகாரம், பணம் மீளப்பெறா போனஸ் (No Claim Bonus), நாடுபூராகவும் உள்ள கராஜ் வலையமைப்பின் ஊடாக வைத்தியசாலை செலவுப் பணத்தை பெறும் வசதி போன்ற பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .