2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

புதிய கட்டிடத் தொகுதியில் நகைக்கடைகள் அமைக்க கோரிக்கை

A.P.Mathan   / 2014 மார்ச் 31 , பி.ப. 12:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னர் மீன்சந்தையாக விளங்கிய புறக்கோட்டை சென்.ஜோன்ஸ் மொத்த மீன் வியாபார பகுதி, பாலியகொட பகுதிக்கு சுமார் ஒரு வருட காலப்பகுதிக்கு முன்னர் இடம்மாற்றப்பட்டதை தொடர்ந்து, அந்த பகுதியில் காணப்பட்ட ஐந்து மாடிக்கட்டடம் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.

இந்த பணிகளை இலங்கை இராணுவம் முன்னெடுப்பதுடன், நவீன வசதிகள் கொண்டு நிர்மாணிக்கப்படும் இந்த புதிய கட்டிடத் தொகுதியில் கொழும்பு செட்டியார் தெருவைச் சேர்ந்த நகை வியாபாரிகளை தமது காட்சியறைகளை நிறுவுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை கோரிக்கை விடுத்திருந்தது. ஆயினும் இவ்வாறு தமது காட்சியறைகளை புதிய கட்டிடத்தில் நிறுவும்பட்சத்தில், தமது பழைய விற்பனையகங்களை விட்டு வெளியேற வேண்டிய தேவை இல்லை என அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது.

டுபாய் நாட்டில் காணப்படும் நகை வியாபார முறையை போன்றதொரு கட்டமைப்பை உருவாக்குவதே இந்த புதிய கட்டிடத்தின் நோக்கம் என நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. ஆயினும் இந்த செயற்பாடானது தங்க நகை வியாபாரிகளிடையே கடும் போட்டிகரமான தன்மையை ஏற்படுத்தி, நீண்ட கால போக்கில் அவர்களின் வியாபாரத்தை பாதிப்பதாக அமைந்துவிடும் என கொழும்பு மொத்த வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கே.பழனியாண்டி தெரிவித்திருந்தார்.

இந்த புதிய கட்டிடத்தில் 100 கடைகளை மட்டுமே அமைக்கக்கூடிய வசதிகள் காணப்படுகின்றன. செட்டியார் தெரு பகுதியில் 150க்கும் அதிகமான நகைக்கடைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .