2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பங்குச்சந்தை மற்றும் தங்கம் விலை நிலைவரங்கள்

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 15 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ச.சேகர்


பங்குச்சந்தை கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்ந்தும் உயர்வான பெறுமதிகளை கடந்த வாரம் பதிவு செய்திருந்தது. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீதான ஈடுபாடு பெருமளவு சந்தை உயர்ந்த பெறுமதிகளில் பங்களிப்பு செலுத்தியிருந்தன. வெளிநாட்டவர்கள் பங்குகள் கொள்வனவில் அதிகளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். வெள்ளிக்கிழமை நடவடிக்கைகள் நிறைவடைந்த போது அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 6,092.34 ஆகவும், S&P ஸ்ரீலங்கா 20 சுட்டி 3346.92 ஆகவும் பதிவாகியிருந்தன.

ஏப்ரல் 07ஆம் திகதியுடன் ஆரம்பமான கடந்த வாரத்தின் இறுதியில் மொத்த பங்கு புரள்வு பெறுமதியாக ரூ. 3,401,982,240 அமைந்திருந்தது. கடந்த வாரம் மொத்தமாக 23,564 பங்கு கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றன. இதில் உள்நாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 22,436 ஆகவும் வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் 1,110 ஆகவும் பதிவாகியிருந்தன.

திங்கட்கிழமை
சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் ஏற்றத்தாழ்வுகளை பதிவு செய்திருந்ததுஇ சுட்டிகள் மறைபெறுமதிகளை பதிவு செய்திருந்ததுடன், புரள்வு பெறுமதி 500 மில்லியன் ரூபாவை கடந்திருந்தது. கொமர்ஷல் வங்கி பங்குகள் மொத்தமாக கைமாறியிருந்தன. இது புரள்வு பெறுமதியின் 38 வீதத்தை பங்களிப்பு செய்திருந்தது. லங்கா ஐஓசி பங்குகள் மீது உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு காணப்பட்டது. ஏசியா அசெட் ஃபினான்ஸ் பங்குகள் மற்றும் எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாடு காண்பித்திருந்தனர். வெளிநாட்டவர்கள் கொமர்ஷல் வங்கி, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் போன்ற பங்குகளை கொள்வனவு செய்வதில் அக்கறை செலுத்தியிருந்தனர்.

செவ்வாய்க்கிழமை
ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் கொமர்ஷல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பங்குகளின் காரணமாக பங்குச்சந்தை நேர் பெறுமதிகளை பதிவு செய்திருந்தது. புரள்வு பெறுமதி 645 மில்லியன் ரூபா பெறுமதியை எய்தியிருந்தது. கொலம்போ லான்ட் அன்ட் டிவலப்மன்ட், களனி டயர்ஸ் மற்றும் லங்கா ஐஓசி ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். கொமர்ஷல் வங்கி, டோக்கியோ சீமெந்து மற்றும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்குகள் மீது மொத்தக் கொள்வனவாளர்கள் ஆர்வம் செலுத்தியிருந்தனர். வெளிநாட்டவர்கள் அதிகளவு பங்கு கொள்வனவில் ஈடுபட்டிருந்தனர்.

புதன்கிழமை
சுட்டிகள் நேர்பெறுமதிகளை பதிவு செய்து நிறைவடைந்திருந்தன. புரள்வு பெறுமதி 1.3 பில்லியன் ரூபாவை கடந்திருந்தது. செலான் வங்கி மீதான சந்திப்பு புரள்வு பெறுமதியின் 44 வீத பங்களிப்பை வழங்கியிருந்தது. ஈஸ்ட் வெஸ்ட் புரொப்பர்டீஸ் பங்குகள் மீது சிறியளவிலான ஈடுபாடு காணப்பட்டது. கொமர்ஷல் வங்கி பங்குகள் மீது கலப்பு ஈடுபாடு பதிவாகியிருந்தது. தொடர்ச்சியாக உறுதியான வெளிநாட்டு ஈடுபாடு பதிவாகியிருந்தது. வெளிநாட்டு கொள்வனவு 811 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

வியாழக்கிழமை
ஸ்ரீலங்கா டெலிகொம், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ஆசிரி ஹொஸ்பிட்டல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் விலைச்சரிவுகள் காரணமாக சுட்டிகள் விலைச் சரிவுகளை பதிவு செய்திருந்தன. லங்கா ஐஓசி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்ததுடன், புரள்வு பெறுமதியில் 15 வீத பங்களிப்பை இது வழங்கியிருந்தது. புரள்வு பெறுமதி 340 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது. வெளிநாட்டவர்கள் ஈடுபாடு அதிகளவு பதிவாகியிருந்தது. இதேவேளை, ஜனசக்தி இன்சூரன்ஸ் மற்றும் எஸ்எம்பி லீசிங் ஆகிய பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை செலுத்தியிருந்தனர்.

வெள்ளிக்கிழமை
ஸ்ரீலங்கா டெலிகொம், லங்கா ஐஓசி மற்றும் சிலோன் டொபாக்கோ கம்பனி ஆகியவற்றின் விலை உயர்வின் காரணமாக சுட்டிகள் உயர்வடைந்திருந்தன. ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் சிலோன் டொக்கோ கம்பனி பங்குகள் மீது சந்திப்புகள் பதிவாகியிருந்தது. புரள்வு பெறுமதியில் 20 வீத பங்களிப்பை இவை வழங்கியிருந்தன. லங்கா ஐஓசி மற்றும் டெக்ஸ்ச்சர்ட் ஜேர்சி பங்குகள் மீது உயர் நிகர பெறுமதி வாய்ந்த ஈடுபாடு பதிவாகியிருந்தது. டோக்கியோ சீமெந்து, லோஃவ்ஸ் காஸ் வாக்குரிமை மற்றும் வாக்குரிமையற்ற பங்குகள் மீது சிறியளவிலான முதலீட்டாளர்கள் ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

கடந்த வார கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளில் சிலோன் லெதர் (உரிமை), PDL, ஹியுஜே, பான்செ றிசோர்ட்ஸ் மற்றும் ஒரியன்ட் கார்மன்ட்ஸ் போன்றன முதல் ஐந்து சிறந்த இலாபமீட்டிய பட்டியலிடப்பட்ட கம்பனிகளாக பதிவாகியிருந்தன.

லங்கா சென்ச்சரி (உரிமை), மிரமர், பிம்புத் ஃபினான்ஸ், ப்ளு டயமன்ட்ஸ் (சாதாரண) மற்றும் ஆசிரி போன்ற நிறுவனங்களின் பங்குகள் அதிகளவு நஷ்டமீட்டியதாக பதிவாகியிருந்தன.



தங்கம் விலை நிலைவரம்
கடந்த வாரம் 24 கெரட் தங்கத்தின் சராசரி விலை 44,700 ரூபாவாகவும், 22 கெரட் தங்கத்தின் விலை 41,600 ரூபாவாகவும் அமைந்திருந்ததாக தங்க நகை வியாபார வட்டாரங்களிலிருந்து அறிந்து கொள்ள முடிந்தது. கடந்த வார பெறுமதியை விட இந்த வாரம் தங்கத்தின் விலை சற்று உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாணய மாற்று விகிதம்
கடந்த வாரம் டொலருக்கு நிகரான ரூபாவின் சராசரி விற்பனை பெறுமதி 132.20 ஆக பதிவாகியிருந்தது. ஐக்கிய இராச்சிய பவுணுக்கு நிகரான சராசரி விற்பனை பெறுமதி 222.60    ஆக காணப்பட்டிருந்தது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .