2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஜனசக்தி ஊழியர்கள் பிரகாசிப்பு

A.P.Mathan   / 2015 பெப்ரவரி 11 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் ஊழியர்களுக்கான அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், பொது உரிமைக்கோரல் பிரிவின் சிரேஷ்ட உதவி முகாமையாளர் அயோத்யா என். பெரேரா அண்மையில் இடம்பெற்ற பட்டயக் காப்புறுதி நிறுவகத் தேர்வு 2013 இல் மிகச் சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இலங்கை பட்டயக் காப்புறுதி நிறுவகம் (CII) என்பது காப்புறுதி மற்றும் நிதி சேவைகள் துறையில் உள்ள முன்னணி நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனமாகும். UK தேர்வுகள் ஒழுங்குபடுத்துநர், QCA (தகுதிகள் மற்றும் பாடத்திட்ட ஆணையகம்) மூலம் ஆய்வு அடிப்படையிலமைந்த நிறுவகமான CII அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

வெற்றியாளர்களை கௌரவிக்கும் வகையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற கண்கவர் நிகழ்வில் அயோத்யா ACII தகுதியை பெற்றுக்கொண்டதுடன், நிஹால் செனரத்ன சவால் கிண்ணத்தையும் வென்றெடுத்தார். 1999 ஆம் ஆண்டில் காப்புறுதி பயிலுநர் அதிகாரியாக ஜனசக்தியுடன் தம்மை இணைத்துக் கொண்ட அயோத்யா ஒரு தசாப்தத்திற்கும் மேலான அனுபவத்தை கொண்டுள்ளார். 

'ஜனசக்தி எமக்கு குறிப்பாக கல்வியை பொறுத்தவரை நிறைய ஆதரவளித்துள்ளது. அவர்கள் எமக்களிக்கும் கடன் திட்டம் மிகவும் கவர்ச்சிகரமானதாக உள்ளதுடன், எமது பாடத்திட்டத்தை முழுமையாக பூர்த்தி செய்ய போதுமானதாக அமைந்துள்ளது' என அயோத்யா குறிப்பிட்டார். 

ஜனசக்தியின் விசேட ஊழியர் கடன் திட்டத்தின் மூலம் பரீட்சை தேர்வின் ஒரு பகுதி தவணை அடிப்படையில் செலுத்தப்படுவதுடன், ஊழியர் அப் பரீட்சையில் தேர்வானதும் முழுமையான தொகை மீள செலுத்தப்படக் கூடியதாக உள்ளது. 

'எமது நிர்வாகம் தகைமைகளை பெறுவதற்காக எம்மை ஊக்குவிப்பதில் பெரும் ஆதரவாக இருந்துள்ளதுடன், அவசியமான தருணங்களில் விடுமுறையை எடுப்பதற்காகவும் எம்மை அனுமதிப்பதால் எம்மால் வகுப்பறைகளில் கலந்து கொள்ள முடிந்துள்ளது. இவ் விருதை பெறுவதற்கு ஆதரவினை வழங்கிய ஜனசக்தியின் நிர்வாகத்தினருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். கல்வி ஊக்குவிப்பை பொறுத்தவரை இத் துறையிலுள்ள மிகச்சிறந்த நிறுவனங்களுள் ஒன்றாக இந் நிறுவனம் திகழ்கிறது என நம்புகிறேன்' என அயோத்யா தெரிவித்தார்.

ஜனசக்தி நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவில் சிரேஷ்ட காப்புறுதி நிர்வாகியாக பணியாற்றும் மற்றுமொரு ஊழியரான சந்திமா சுபாஷினி டிப்ளோமா மட்டத்தில் இடம்பெற்ற இலங்கை பட்டயக் காப்புறுதி நிறுவகத்தின் தேர்வுகளில் 2013 வருடத்திற்கான ஒட்டுமொத்த சிறந்த மாணவராக  கௌரவிக்கப்பட்டார்.

'மிகவும் திறமை வாய்ந்த ஊழியர்கள் காப்புறுதி துறைக்கு அத்தியாவசியமாகும். இந்த செயல்முறைக்கு தொழில்நுட்ப ரீதியில் தகுதியான காப்பீட்டு ஏற்பாளர்கள் (underwriters) அவசியமாகும். ஜனசக்தி நிறுவனமாகிய நாம், ஊழியர்கள் அபிவிருத்தியில் நாம் மேற்கொள்ளும் முதலீடுகள் நிறுவனத்தின் நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை செலுத்தும் என்பதை நாம் நன்குணர்ந்துள்ளோம். ஊழியர்கள் மீதான எமது அர்ப்பணிப்பினை இந்த விருதுகள் சான்று பகர்வதாக அமைந்துள்ளது' என இவ் விருதுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த மனித வளங்கள் மற்றும் நிர்வாகப் பிரிவின் பொது முகாமையாளர் காமினி பீரிஸ் தெரிவித்தார்.

ஜனசக்தி நிறுவனம் வெளிநாட்டு பயிற்சிகள் உள்ளடங்கலாக ஊழியர்களுக்காக ஆண்டொன்றிற்கு 50 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது. இந் நிறுவனம் ஒவ்வொரு மாதமும் 60 முதல் 80 வரையான புதிய ஊழியர்களை இணைத்து கொள்வதுடன், அவர்களை நிறுவனம் மற்றும் துறையினுள் ஒருங்கிணைக்கும் வகையில்; சிறந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கற்பதற்கு ஏதுவான கலாச்சாரத்தை உருவாக்குவதற்கான எமது அர்ப்பணிப்பு, அண்மையில் இடம்பெற்ற SLITAD மக்கள் அபிவிருத்தி விருதுகள் விழாவில் வெள்ளி விருதை வென்றெடுக்க வழிவகுத்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .