2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒடாரா மன்றம்

A.P.Mathan   / 2015 ஜூலை 30 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓடெல் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தின் ஸ்தாபகரும், பிரபல தொழில் அதிபரும், நவநாகரிக உலகின் அடையாளச் சின்னமும், மிருக நலன் ஆர்வலருமான ஒடாரா குணவர்தன தனது இதயத்துக்கு நெருக்கமான விடயங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்துள்ளார். இவர் தற்போது இலாப நோக்கற்ற மன்றம் ஒன்றைத் தொடங்கியுள்ளார். சகல மிருகங்களினதும் மேம்பாட்டுக்காக அர்ப்பணத்தோடு பணி புரிவதும், சமூக மற்றும் சுற்றாடல் நலத் திட்டங்களை மேற்கொள்வதும் இதன் நோக்கமாகும்.

ஓடாரா மன்றம் (www.otarafoundation.com) அவருடைய பெரு விருப்பம் மற்றும் மதிநுட்பம் ஆகிய இரண்டையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது. மிருக நலனிலும் நவ நாகரிக துறையிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த அவர் இவை இரண்டையும் மிகப் பிரபலமாக இணைத்த பெருமைக்குரியவர். பல்வேறு வடிவங்களில் கொடுமைகளுக்கு ஆளாகும் மிருகங்களுக்காக ஒவ்வொருவரும் குரல் கொடுக்க வேண்டும் என்பதை அவர் பெரிதும் விரும்பினார். அத்தோடு ஒவ்வொரு நபரும் சுற்றாடல் பாதுகாப்புக்கான முகவராக இருக்க வேண்டும் என்ற நாட்டத்தையும் அவர் கொண்டுள்ளார். 

இந்த மன்றத்தின் பணியானது இலங்கையினதும் அதேபோல் உலகின் ஏனைய பாகங்களினதும் காலநிலை மாற்றத்தை எதிர்த்து முகம் கொடுத்தல், அறிவூட்டல், நல்லாட்சி மற்றும் கொள்கை மாற்றம் என்பன மூலம் மிருகங்களையும் மற்றும் தாவர வகைகளையும் பேணிப் பாதுகாத்தல் போன்ற செயற்பாடுகளில் நிலையான மாற்றத்துக்கான வினை ஊக்கியாக இருக்க வேண்டும் என்பதாகும்.

ஓடாரா மன்றத்தை முறைப்படி பதிவு செய்து அறிமுகம் செய்து வைக்கும் போது 'எமது சுற்றாடல் மூலம் நாம் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். அதை பேணிப் பாதுகாப்பதை விட வேறு எந்த வர்த்தகமும் எமக்கு முக்கியம் ஆகிவிட முடியாது' என்று கூறினார் ஒடாரா குணவர்தன. 'இது என்றுமே எனது நம்பிக்கையாகும். கடந்த காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி இந்த விடயத்துக்கு நான் எனது வர்த்கத்தில் முக்கியத்தவம் அளித்து வந்துள்ளேன். மக்கள் என்ற வகையிலும் நாடு என்ற வகையிலும் உலகம் என்ற வகையிலும் இயற்கையோடும் மிருகங்களோடும் இணக்கபூர்வமாக அவற்றைப் பாதுகாத்து வாழ்வதற்கான முக்கியத்துவத்தை அளிக்க நாம் தவறி விட்டோம். எமது அன்றாட தேவைகளுக்கும் அப்பால் உலகளாவிய வஸ்த்துக்கள் மீதான எமது அதிகரித்த ஆர்வம் காரணமாக எம்மிடமுள்ள ஒரு பெறுமதிமிக்க சொத்தை நாம் இழந்து வருகின்றோம். அத்தோடு தமக்காக குரல் கொடுக்க முடியாத அப்பாவி உயிர்களை நாம் துன்புறுத்தியும் வருகின்றோம். இந்த தொடர்பினை மீள புதுப்பிப்பது இன்னமும் கால தாமதம் ஆகிவிடவில்லை. இதன் மூலம் அபிவிருத்திக்கும் சுற்றாடலுக்கும் இடையில் ஒரு சிறந்த சமநிலையையும் நாம் பேண முடியும்' என்று அவர் மேலும் கூறினார்.

இந்த மன்றத்தின் பிரதான கொள்கைகளாக சகல மிருகங்களினதும் துன்பங்களைப் போக்குதல், மிருக நலனை மேம்படுது;தல், மிருக நலன் சம்பந்தப்;பட்ட விடயங்களில் குரல் கொடுப்பதில் முன்னணி வகித்தல், கொள்கை திருத்தங்கள் மற்றும் நல்லாட்சி, துஷ்பிரயோகம் செய்யப்பட்ட மிருகங்களை பிரதிநிதித்துவம் செய்து அவற்றுக்காக குரல் கொடுத்தல், சுற்றாடல் பேணல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள் மற்றும் நுண் அமைப்புக்களை ஊக்குவித்தல், இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களுடன் கைகோர்த்தல், மிருக நலன் பற்றி விழிப்புணர்வை பரப்புதல், மிருகங்களை கொடுமைகளில் இருந்து பாதுகாத்தல், இந்த விடயங்கள் தொடர்பாக சமூகத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தல், நிலையான சுற்றாடல் பாதுகாப்பை நோக்கிய அர்ப்பண செயற்பாடு கொண்ட மிகவும பொறுப்பு வாய்ந்த ஒரு தலைமுறையை உருவாக்கல் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த மன்றம் அதன் பணிப்பாளர்களால் மேலும் வலுவடைந்துள்ளது. அன்டொரன் முதலீட்டாளர் மற்றும் பொமோஸா மன்றத்தின் ஸ்தாபகர் டூரி மொரா, பிரிட்டன் கோடீஸ்வரரும் நவநாகரிக உலகின் அடையாளச் சின்னமுமாகிய ஸ்டீபன் ஜோன்ஸ், சுவீடிஸ் தொழில் அதிபர் கார்ள் ஹொவர்ஸ்ஜோ பிரபல வழக்கறிஞர் அரித்த விக்கிரமநாயக்க அகியோர் இதன் பணிப்பாளர்கள் ஆவர்.

இந்த மன்றத்துக்கான நிதியை ஒடாரா குணவர்தன் வழங்குவார். இதே சிந்தனை கொண்ட நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து நன்கொடைகளும் பெற்றுக் கொள்ளப்படும். எம்பார்க் வர்த்தக முத்திரை உற்பத்திகளின் சில்லறை விற்பனை வருமானம் மற்றும் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் என்பன மூலமும் நிதி உதவிகள் பெறப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X