2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தண்ணீரைக் கொண்டு செல்வதற்குகண்ணாடி போத்தல்களை உபயோகிக்கவும்

Gavitha   / 2016 ஜூலை 17 , பி.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தண்ணீரை வைத்துப் பேணுவதற்கு Believers in Glass இயக்கம் கண்ணாடிப் போத்தல்களை வழங்கியுள்ளது.
‘Believers in Glass’ இயக்கம் Piramal Glass Ceylon PLC (PGC) நிறுவனத்துடன் இணைந்து வாகனங்களில் தண்ணீரை வைத்துப் பேணுவதற்காகக் கண்ணாடிப் போத்தல்களை இலவசமாக வழங்கியுள்ளது. 2016 ஜுலை 2ஆம் திகதியன்று தெரிவுசெய்யப்பட்ட லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவற்றை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

'நச்சுத் தண்ணீரை அருந்திய பின்னர் வாகனத்தைச் செலுத்த வேண்டாம்' என்ற தலைப்பிலான பிரச்சாரத்தின் கீழ் பிளாஸ்திக் போத்தல்களில் தண்ணீரை எடுத்துச் செல்வதையோ அல்லது அவற்றை நீண்ட நேரத்திற்கு வைத்துப் பேணுவதையோ தவிர்க்குமாறு மக்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

பிளாஸ்திக் போத்தல்களில் ஏற்படுகின்ற இரசாயனக் கசிவுகள் தண்ணீரில் கலப்பதால் நச்சுத்தன்மை ஏற்படுகின்றது.
கண்ணாடிப் போத்தல்களை உபயோகிப்பதால் எமக்கு கிடைக்கும் நன்மைகளை Believers in Glass இயக்கம் மேலும் விளக்கியுள்ளது.

ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில் கண்ணாடியிலானப் பாத்திரங்கள் மற்றும் போத்தல்களை உபயோகிப்பதால் தனிப்பட்ட ஆரோக்கியத்திற்குப் புறம்பாக சுற்றுச்சூழல் சார்ந்த நற்காரணங்களும் உள்ளன.

உலகளாவில் 5 இற்கு 1 என்ற அடிப்படையிலேயே பிளாஸ்திக் போத்தல்கள் மீள்சுழற்சி செய்யப்பட்டு பாவனைக்கு விடப்படுகின்றன. எஞ்சியவை எரியூட்டப்படுகின்றன அல்லது மண்ணில் புதைக்கப்படுகின்றன.

இந்த பிளாஸ்திக் போத்தல் ஒவ்வொன்றும் இயற்கையாகவே உக்கிப் போவதற்கு 700 வருடங்கள் வரையான காலம் தேவைப்படுகின்றது.

பிளாஸ்திக் போத்தல்கள் வனசீவராசிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், சூழலையும் மாசுபடுத்துகின்றன. இதனால் நாம் வாழும் உலகின் அழகுக்கும் குந்தகம் ஏற்படுகின்றது. ஆனால் கண்ணாடியானது 100மூ மீள்சுழற்சி செய்யப்படக்கூடியதாக உள்ளதுடன், இதனால் சூழலுக்கு தீங்கு ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.

கண்ணாடியானது 100மூ மீள்சுழற்சி செய்யப்படக்கூடியதாக உள்ளமையால், உபயோகிக்கப்பட்ட கண்ணாடிப் போத்தல் ஒன்றை எப்போதும் மீள்சுழற்சி செய்து புதிதாக்கிக் கொள்ள முடியும். மீள்சுழற்சி செய்யப்படுகின்ற ஒவ்வொரு தொன் கண்ணாடியும் புதிய கண்ணாடியை உற்பத்தி செய்வதற்கு தேவைப்படுகின்ற ஒரு தொன் மூலப்பொருட்களை சேமிக்க உதவுகின்றன.

இது நிலத்தினுள் சென்றடையாது, எரிசக்தியைப் பாதுகாத்து, எமது சூழலுக்கு தீங்கு ஏற்படாமல் இருப்பதற்கு கண்ணாடி உதவுகின்றது என்பதை நிரூபிக்கின்றது.

பொதுமக்கள் மத்தியில் பொதியிடலுக்கு மிகச் சிறந்த வடிவத்தை உபயோகிப்பது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களுக்கு அறிவூட்டுவதற்காக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட 'டீநடநைஎநசள in புடயளள' என்ற இயக்கத்தின் மற்றுமொரு முயற்சியே இதுவாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X