2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

50 ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் 'மோதா'

A.P.Mathan   / 2010 நவம்பர் 17 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் அனைத்து வயதுப் பிரிவினரையும் சேர்ந்த பல மில்லியன் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட 'மோதா ஜெலி' 50ஆண்டுகள் பூர்த்தியை இவ்வருடம் கொண்டாடுகின்றது.

கடந்தகால வரலாற்றினை திரும்பிப் பார்த்தால், 1960ஆம் ஆண்டில் சூடாக்கப்பட்ட இனிப்புகள் மற்றும் டொபி வகைகளை உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான குடும்ப வர்த்தகமாக காணப்பட்ட இது, பின்னர் ஜெலி உற்பத்தி நிறுவனமாக மாற்றம் பெற்றது. இப்போது இந்த ஜெலி, ஒவ்வொரு வீடுகளிலும் பிரபலமான ஒரு வர்த்தகக் குறியீடாக திகழ்கின்றது.

'மோதா' வர்த்தக குறியீடானது அன்றிலிருந்து புகழ்பெற்ற பல்வேறு உற்பத்திகளையும் உள்வாங்கிக் கொண்டது. அதாவது டயட் ஜெலி, பலூடா மிக்ஸ் போன்ற விரைவாக தயாரிக்கக்கூடிய 'குயிக் செற் ஜெலி' (மொஸ் ஜெலி) வகை மற்றும்  சீனிப்பாகு, சொக்லேட் புடிங் போன்ற புடிங்கிற்காக கலவை செய்யும் உற்பத்திகள் மற்றும் ஐசிங் சீனி, பேக்கிங் பவுடர், ஜெலடீன், சோளம் மா, மணமூட்டிகள் (எசன்ஸ்), நிறமூட்டிகள் போன்ற கலவைப் பொருட்கள் போன்றவற்றை அதனது உற்பத்திப் பொருட்களின் வகைகளுள் உள்ளடக்கியுள்ளது.

இப்போது இந்த உற்பத்திகள் புவியியல் ரீதியான அனைத்து எல்லைகளையும் கடந்து இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல மில்லியன் கணக்கான நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சந்தைப்படுத்தப்படுகின்றன.  

1920ஆம் ஆண்டு அதாவது இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரான காலப்பகுதியில், இனிப்பு வகைகள் மற்றும் ஜெலி வகைகளை ஐக்கிய இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யும் வர்த்தக நடவடிக்கைககளை ரிபேர்டியஸ் மோதா ஆரம்பித்தார். அத்துடன் உள்நாட்டு நுகர்வோர் மத்தியில் அவற்றை வெற்றிகரமாக சந்தைப்படுத்தினார். நான்கு தசாப்தங்களுக்குப் பின்னர் அதாவது 1960களின் ஆரம்பத்தில் நாட்டில் அமுலுக்கு வந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகள், மோதாவின் இந்த வர்த்தகப் பயணத்தை எதிர்பாராத விதத்தில் மாற்றியமைத்தது.  

அவ்வேளையில்தான், 'மோதா கொன்பக்சனரி வேர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட்' நிறுவனத்தின் தற்போதைய தலைவரான ஜூலியஸ் மோதா, தனது சகோதரனுடன் இணைந்து குடும்ப வர்த்தக முயற்சி ஒன்றினை ஸ்தாபித்து, டொபி மற்றும் ஜெலி வகைகளை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளையும் ஆரம்பித்தனர். முதலாவது மோதா ஜெலியானது, 'மோதா ஸ்டோபரி ஜெலி' என்ற பெயருடன் அறிமுகமானது. அன்று முதல் அவ்வுற்பத்தி சந்தையில் பிரபலமாகத் தொடங்கியது. இவ்வுற்பத்திகளுக்கான கிராக்கி ஒருபோதும் சந்தையில் குறைவடைந்ததில்லை. அது சந்தையில் உடனடியானதொரு வெற்றியை பெற்றுக் கொண்டது மட்டுமன்றி, புத்தாக்கமான சுவையின் மூலம் இலங்கையர்களை தம்வசப்படுத்தியது.

நாடளாவிய ரீதியில் நுகர்வோரிடம் இருந்து சிறந்த வரவேற்பு கிடைக்கப்பெற்றதையடுத்து மோதா சகோதரர்கள் தமது உற்பத்தித் பொருட்களின் தொடரில் Custards, Blancmanges ஆகிய உற்பத்திகளை புதிதாக இணைத்துக் கொண்டனர். இந்த வர்த்தகக் குறியீடானது வாடிக்கையாளர்கள் மத்தியில் மேலும் மேலும் பிரபலமனதால், அவர்கள் புதிய புதிய சுவைகளையும் வகைகளையும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டனர். புதிய சுவை மற்றும் வகைகளிலான உற்பத்திகளை இணைத்துக் கொள்வதற்கும் மேற்படி வர்த்தகக் குறியீட்டினை புதிய மட்டங்களுக்கு உயர்த்துவதற்கும் உந்து சக்தியாக அமைந்தது.

1985ஆம் ஆண்டில் 25 வருடங்களை பூர்த்தி செய்தபோது 'மோதா' குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றிருந்தது. இந்நிலையில், மிகச் சிறந்த தொழில் நிபுணத்துவம் கொண்ட சந்தை அமைப்பொன்று தேவையென நிறுவனம் கருதியது. எனவே கம்பனி தனது உற்பத்திகளை சிறப்பாக விநியோகம் செய்யக்கூடிய மிகவும் பொருத்தமான விநியோகஸ்தர் ஒருவரை தேடியது. அதற்கமைய நாடெங்கிலும் பரந்தளவான விற்பனை வலையமைப்பு, வாடிக்கையாளர்களை சென்றடையும் தன்மை மற்றும் நிபுணத்துவம் போன்றவற்றைக் தன்னகத்தே கொண்ட 'டெல்மேஜ்' நிறுவனம் விநியோகஸ்தராக தெரிவு செய்யப்பட்டது.

இப்போது 2010ஆம் ஆண்டு, மோதா தனது பொன் விழாவை கொண்டாடும் அதேநேரம், டெல்மேஜ் டிஸ்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்துடனான வெற்றிகரமான பங்காளித்துவத்தின் 25 வருட பூர்த்தியையும் கொண்டாடுகின்றது.

அரை நூற்றாண்டுகால வெற்றி தொடர்பாக மோதா கொன்பக்சனரி வேர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் தலைவர் ஜூலியஸ் மோதா கூறுகையில், ''இலங்கையருக்கு சொந்தமான வர்த்தக குறியீடான இதனை கடந்த பல வருடங்களாக வெற்றிகரமாக வளர்த்து வந்துள்ளதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். 50 வருட பூர்த்தியை கொண்டாடும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இலங்கை வர்த்தக குறியீடுகளுள் இதுவும் ஒன்றாக திகழ்கின்றது. அத்துடன் மோதா ஜெலி உற்பத்தியானது அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலம் சந்தையில் ஸ்திரமாக உள்ளது என்பது நிதர்சனமாகும். மோதா, இன்றுவரை வீடுகள் தோறும் உச்சரிக்கப்படும் பெயராக காணப்படும் அதேநேரம், வெளிப்படைத் தன்மை கொண்ட சிறந்த உற்பத்தி வகைகளையும் கொண்டுள்ளது'' என்றார்.

டெல்மேஜ் டிஸ்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டினேஸ் நல்லையா, ''இலங்கையின் அனைத்து மூலைகளுக்கும் மோதா உற்பத்திகளைக் கொண்டு சென்று சேர்ப்பதில் நிறுவனம் சிறந்த வெற்றியைக் கண்டுள்ளது'' என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், 'நுகர்வோரின் மாறுபட்ட கேள்விகள் மற்றும் அவர்களது விருப்பங்களில் ஏற்படும் மாற்றங்களை மோதா ஜெலி நிவர்த்தி செய்யும் அதேவேளை, உற்பத்தித் தொடருக்கு மீளசக்தியூட்டும் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் (FMCG) சந்தையில் முன்னணியிலுள்ள வர்த்தகக் குறியீடுகளில் ஒன்றாக திகழும் அதேவேளை, அதிகமான பொருட்களின் பிரிவில் சந்தையில் முன்னணி வகிக்கும் வர்த்தகக் குறியீடாகவும் இது காணப்படுகின்றது. சந்தையில் முன்னணியில் திகழ்கின்றமையால், எமது பணி மேலும் கடினமானதாகவும் அதேநேரம் சவால்மிக்கதாகவும் மாறியுள்ளது என கருதுகின்றோம். டெல்மேஜ் டிஸ்ரிபியூட்டர்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்துடனான எமது நிறுவனத்தின் 25 வருடகால உறவு, பயன்மிக்க பங்காளித்துவமாக அமைந்தது. இந்நிலையில் மேலும் அடுத்துவரும் 25 வருடங்களில் சிறப்பான வெற்றியை நாம் எதிர்பார்க்கின்றோம்'' என்று குறிப்பிட்டார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சந்தைகள் தொடர்பாக நல்லையா கருத்துத் தெரிவிக்கையில், ''யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் எமது மோதா உற்பத்திகள் பிரத்தியேகமான விநியோக மார்க்கங்களின் ஊடாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலுள்ள நுகர்வோரை சென்றடைந்தன. எவ்வாறிருந்தபோதிலும் யுத்தம் முடிவடைந்தததையடுத்து அப்பகுதிகளில் கேள்வி அதிகரித்துள்ளதுடன் விற்பனையிலும் குறிப்பிடத்தக்கதொரு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது...'' என்றார்.

மோதா உற்பத்திகள் தற்போது ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்க இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, இத்தாலி, மாலைதீவுகள், இந்தியா, மத்திய கிழக்கு நாடுகளின் சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

At the headtable (L to R) are Dinesh Nalliah, CEO - Delmege Distributors (Pvt) Ltd, Shamil Mendis – Chairman Delmege Distributors (Pvt) Ltd, Julius Motha, Chairman - Motha Confectionary Works (Pvt) Ltd, Nihal Wijeratne – CEO –Motha Confectionary Works (Pvt) Ltd and Dilhan de Silva – Group CEO - Delmege Forsythe (Pvt) Ltd.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .