2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ACL கேபிள்ஸ் மூத்த ஊழியருக்கு கௌரவம்

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

  ACL கேபிள்ஸ், நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது முதல் இணைந்துள்ள மூத்த ஊழியரான பேர்ஸி அபேசேகரவை கௌரவித்துள்ளது.

1962ஆம் ஆண்டு ACL கேபிள்ஸ் ஸ்தாபிக்கப்பட்ட போது, நிறுவனத்துடன் இணைந்து கொண்ட அவர், நிறுவனத்தில் இடைவிடாமல் 56 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.

மேலும், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடும் போது, அவற்றில் பங்கேற்று அணிக்கு முழு ஆதரவையும் வழங்கி கிரிக்கெட் விளையாட்டில் தாம் கொண்டுள்ள பற்றை வெளிப்படுத்தும் ஒரு நபராவார்.

ACL கேபிள்ஸ் மற்றும் இலங்கை ஆகியவற்றுக்கு ஆவர் ஆற்றி வரும் பெறுமதி வாய்ந்த சேவைகளை கௌரவிக்கும் வகையிலும், அவரின் 82வயதை குறிக்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.    
அமைச்சரும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான அர்ஜுன ரணதுங்க இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தமைக்காக ACL கேபிள்ஸ் நிறுவனத்துக்கு தனது பாராட்டுதல்களை வெளிப்படுத்தியிருந்தார்.

70 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை கிரிக்கெட் அணி விளையாடிய உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளின் போது இலங்கை அணிக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தமையை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது.

சுமார் மூன்று - நான்கு தசாப்த காலப்பகுதிக்கு முன்னர் இலங்கை அணிக்கு ஆதரவு வழங்க பெருமளவான ரசிகர்கள் இருக்கவில்லை. எமது கிரிக்கெட் வீரர்களை பேர்ஸி ஊக்குவித்திருந்தார் எனக் குறிப்பிட்டார்.
ACL கேபிள்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் சுரேன் மதநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “தமது 56 வருட கால வரலாற்றில் ACL கேபிள்ஸ் நிறுவனத்துக்கு பேர்ஸி அபேசேகர வழங்கியிருந்த பங்களிப்பு அளப்பரியது. பொது மக்கள் மத்தியில் ACL கேபிள்ஸ் நாமத்தை கொண்டு செல்ல பேர்ஸி பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தார். எனது குழந்தை பராயம் முதல் நான் அறிந்திருந்த ‘பேர்ஸி அங்கிள்’ அவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான நீண்ட கால வாழ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X