2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

AMW அறிமுகம் YAMAHA NMAX 125 Premium Scooter அறிமுகம்

Editorial   / 2020 ஜனவரி 07 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

Associated Motorways (Private) Limited புதிய YAMAHA NMAX 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்வதோடு புத்தாக்கங்களுடன் தொடர்ந்தும் ஊக்குவித்து வருகிறது. பண்டாரநாயக்க ஞபாபகார்த்த சர்வதேச மகாநாட்டு மண்டபத்தில் அண்மையில்; நடைபெற்ற கொழும்பு மோட்டார் கண்காட்சியின் போது இந்த புதிய ஸ்கூட்டர் AMW, இன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரான்டன் மொறிஸ், AMW Passenger Vedhicles பணிப்பாளர் யொஹான் டீ சொய்சா, யமஹா பிரதி பொதுமுகாமையாளர் சஹரான் சியாவுதீன் ஆகியோரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. 

தற்கால ஜப்பானிய தொழில்நுட்பத்துடனான உயர்தர முதல் நிலை ஸ்கூட்டரான Yamaha NMAX 125 நகர்ப்புற ஓட்டுநர்களுக்காக பல அம்சங்களை கொண்ட- தாகவும் நவீன தொழிநுட்ப வசதிகளை தரக்கூடியதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிசக்தி வாய்ந்த செயற்பாடுகளையும் சிக்கன ஓட்டத்தையும் கண்கவர் வடிவமைப்பையும் கொண்டதாகவும் சந்தையில் உள்ள எந்தவொரு சக்திவாய்ந்த ஸ்கூட்டரிலும் பார்க்க சகல துறை ஆற்றல் மிக்கதாகவும் இது விளங்குகிறது. ‘ஸ்போட்டிவ் செசிஸ் உடன் கம்பீரமான தோற்றத்துடனும் வனப்புடனும் ஓட்டுவததற்கும் கையாள்வதற்கும் இலகுவாகவும் Yamaha NMAX 125 காணப்படுகிறது. என்ஜினானது மிகவும் முன்னேற்றமான 125cc blue core tech, liquid-cooled, 4-stroke, EU4-compliant engines, துரித செயற்பாட்டையும் அதிசிறந்த உந்துசக்தியையும் தருகிறது. விசேடமாக வடிவமைக்கப்பட்ட என்ஜின் எரிசக்தி கட்டுப்பாட்டுடன் புகை வெளியிடுவதை குறைக்கிறது என்று யமஹாவின் பிரதி பொதுமுகாமையாளர் சஹ்ரான் சியாவுதீன் விளக்கி கூறினார். மேலும், 13 அங்குல சக்கரங்களும் அகன்ற டயர்களும் வீதி எத்தகைய நிலையில் இருந்தாலும் ஈரலிப்பான சந்தர்ப்பங்களிலும் மிதமான குலுக்கலற்ற ஓட்டத்தை உறுதிப்படுத்துகிறது. 

The Yamaha NMAX 125 இன்னும் பல நவீன அம்சங்களை கொண்டுள்ளது. இவை யாவும் அதனை மற்றவற்றிலிருந்து மிகைப்படுத்துகின்றன. LED லைட்டுகளும் LCD கருவிகளும் அதற்கு கம்பீரமான தோற்றத்தை கொடுப்பதுடன் அவை கண்கவர் கறுப்பு, வெள்ளை, நீல வர்ணங்களில் வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .