2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

JAT அனுசரணையில் இடம்பெற்ற Wood International Expo

A.P.Mathan   / 2015 ஒக்டோபர் 04 , பி.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டு மரப்பலகைத் துறையை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் நோக்கில், JAT ஹோல்டிங்ஸ் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் வருடாந்த விற்பனை கண்காட்சி நிகழ்வான 'Sri Lanka Wood International Exhibition 2015' வெற்றிகரமாக பூர்த்தியடைந்திருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்து கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கண்காட்சியில் பெருமளவான தளபாட மற்றும் ஹார்ட்வெயார் உற்பத்தியாளர்கள், மரவேலையாளர்கள், ப்ளைவுட் மற்றும் துகள் பலகைகள் உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், மர இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், கட்டிடக் கலைஞர்கள், ஆலை உரிமையாளர்கள், உள்ளக அலங்கார நிபுணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மர துறையில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பம் மற்றும் நுட்ப பொறிமுறைகள் போன்றன இந்த நிகழ்வில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. இவற்றை சர்வதேச தரங்களுக்கமைய, உயர் தரம் வாய்ந்த பொருட்களில் குறைந்த காலப்பகுதியில் பயன்படுத்தி வெவ்வேறு தேவைகளுக்கான பொருட்களை உற்பத்தி செய்வது பற்றிய விளக்கங்களும் வழங்கப்பட்டிருந்தன.

JAT ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏலியன் குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், 'Sri Lanka Wood International Exhibition 2015 இன் பிரதான அனுசரணையாளராக கைகோர்த்துள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வின் மூலமாக, உலகளாவிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு புதிய விநியோகஸ்த்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை பெற்றுக் கொடுக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருந்தது' என்றார்.

'எமது வெற்றிகரமான பயணத்தின் மூலமாக, இலங்கையின் மரப்பலகைகளுக்கான மேற்பூச்சு வகைகளை விநியோகிப்பதில் நாம் முன்னோடிகளாக திகழ்கிறோம். நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த கண்காட்சியின் மூலமாக வெளிக்கொணர்வதன் மூலமாக எமது நிறுவனத்தின் ஆழமான துறையுடனான ஈடுபாடு மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றார்.

இந்த கண்காட்சியின் மூலமாக, இலவச பயிற்சிகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் போன்றன மர வேலைப்பாடு சாதனங்கள் மற்றும் கருவிகளின் செயற்பாடுகள் பற்றிய நேரடி விளக்கங்களுடன் இடம்பெற்றன. இது JAT ஹோல்டிங்ஸ் மூலமாக மேற்கொள்ளப்பட்டிருந்த மற்றுமொரு செயற்பாடு என்பது குறிப்பிடத்தக்கது. கண்காட்சியில் காணப்பட்ட வௌ;வேறு தெரிவுகளிலிருந்து வாடிக்கையாளர்கள் தமக்கு பொருத்தமான தெரிவுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

மதிப்பீடு செய்வதற்கு உதவுதல், தொடர்பாடல்களை பேணல் மற்றும் புதிய வியாபார தொடர்புகளை ஏற்படுத்தி புதிய இயலுமைகளை இனங்காணல், நவீன தொழில்நுட்ப பொறிமுறைகள் மற்றும் பல அம்சங்களை கொண்டதாக இந்த கண்காட்சி அமைந்திருந்தது. 

JAT ஹோல்டிங்ஸ், புகழ்பெற்ற தனது தெரிவுகளில், இத்தாலியின் SAYERLACK மரப்பூச்சு வகைகள், அமெரிக்காவின் ஹேர்மன் மில்லர் அலுவலக தீர்வுகள், பிரித்தானியாவின் க்ரவுண் மற்றும் பேர்மோகிளேஸ் அலங்கார உள்ளக மற்றும் வெளிப்புற சுவர் பூச்சுகள், இத்தாலியின் Borma Wachs பராமரிப்பு தீர்வுகள் பிரான்ஸ் நாட்டின் Norton Abrasives (Saint Gobain) மற்றும் பிரஷ் வகைகள் போன்றன உள்ளடங்கியுள்ளன. குழுநிலைச் செயற்பாடு மற்றும் கூட்டாண்மை குடியுரிமை ஆகியவற்றில் கம்பனி அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளது. இதற்கமைய தனது அர்ப்பணிப்பான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன், தனது தொழில்நுட்பவியலாளர்களுக்கு சர்வதேச பயிற்சிகளை பெற்றுக் கொடுப்பதற்கான முதலீடுகளையும் மேற்கொண்டு வருகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .