2024 மார்ச் 28, வியாழக்கிழமை

MDRTஇன் வதிவிடத் தலைவியாக சேபாலிகா பனாகொட மீண்டும் தெரிவு

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

மில்லியன் டொலர் ரவுண்ட் டேபிள் (MDRT) இன் வதிவிட தலைவியாக, நான்காவது தடவையாகவும் செலிங்கோ லைஃப்பின் நிதி ஆலோசகர்களில் ஒருவரான திருமதி. சேபாலிகா பனாகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

2008 முதல் MDRT இன் தகுதிவாய்ந்த உறுப்பினராகவுள்ள அவர், இதற்கு முன்னர் 2012 முதல் தொடர்ந்து மூன்று வருடங்கள், இந்த அமைப்பின் வதிவிடத் தலைவியாக நியமிக்கப்பட்டிருந்தார். 

இந்த அமைப்பில் எட்டுத்தடவை Court of the table (COT) தகுதியைப் பெற்றுள்ள திருமதி. பனாகொட, கடந்த ஆண்டு MDRTஇன் ஆயுள் கால உறுப்பினரானார். இலங்கை, மலேஷியா, பிலிப்பீன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் அவர் MDRT உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் உரையாற்றி உள்ளார்.

வதிவிட தலைவி என்ற ரீதியில் திருமதி. பனாகொட நாட்டில் MDRT அங்கத்துவ ஊக்குவிப்பு மற்றும் தொடர்பாடல் என்பனவற்றுக்குத் தலைமை தாங்குவார். பிராந்திய உள்ளூர் மற்றும் கம்பனி மட்டங்களில் இந்தப் பிரிவில் பணியாற்ற உரியவர்களை நியமித்தல் மற்றும் அவர்களுக்கானக் கடமைகளை வகுத்தல் ஆகிய பணிகளிலும் அவர் ஈடுபடுவார்.

உறுப்பினர்களை அடையாளம் கண்டு MDRT தலைமைத்துவத்துவத்தைத் தொடருவதற்கானப் பயிற்சிகளையும் அவர் வழங்குவார். MDRT வலயத் தலைமைத்துவம் மற்றும் தலைமையகம் என்பனவற்றுக்கான புதிய யோசனைகள் மற்றும் கருத்துக்களையும் அவர் முன்வைப்பார்.

MDRT உறுப்பினர்களுக்கான ஒன்று கூடல், MDRT ஆர்வலர்களை அதன் உறுப்பினர்களாக்குவதற்கான ஊக்குவிப்புக்கள் என்பனவற்றையும் அவர் மேற்கொள்வார். MDRT ஊக்குவிப்புக் கருவிகளை கம்பனிகளிடையே ஊக்குவித்தல், அதன் வருடாந்த அமர்வில் பங்கேற்றல், MDRT அனுபவ மற்றும் உலகளாவிய மாநாட்டில் பங்கேற்றல், வதிவிட தலைமைத்துவ அறிக்கையை தலைமையகத்துக்கு சமர்ப்பித்தல், MDRT அங்கத்துவ தொடர்பாடல் குழுவின் வலய மட்டக் கூட்டங்களில் பங்கேற்றல், MDRT மதிப்பீடுகளை மேற்கொள்ளல், தேவைக்கேற்ப அதன் ஆதரவு செயற்பாடுகளில் ஈடுபடல் என பல கருமங்களை இவர் முன்னெடுப்பார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X