2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

SDB வங்கிக்கு வெள்ளி விருது

Gavitha   / 2016 டிசெம்பர் 20 , பி.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த நிதி அறிக்கைகளுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வின் போது, SDB வங்கியின் 2015ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைக்கு நிதி நிறுவனங்கள் பிரிவில் வெள்ளி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.  

இந்த வருடாந்த அறிக்கைகளுக்கு கௌரவிப்புகள் வழங்கும் போது, நிறுவனத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை போன்றன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு வரலாற்றில், புதிய சாதனையைப் படைத்த வண்ணம், இந்த ஆண்டின் போட்டியில் 140 நிறுவனங்கள் பங்கேற்றிருந்தன. விரிவான முறையிலும் கவர்ச்சிகரமான வகையிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டமை, செயற்றிறன் மதிப்பிடல், வெளிப்படைத்தன்மை போன்றன வெற்றியாளர் தெரிவின் போது முக்கிய விடயங்களாகக் கவனம் செலுத்தப்பட்டிருந்தன. போட்டிக்கு வெளிப்படுத்திய விண்ணப்பங்களைத் தகைமை வாய்ந்த 200க்கும் அதிகமானக் கணக்கியலாளர்கள் மதிப்பாய்வுச் செய்திருந்தனர். ஒரு அறிக்கையை ஆகக்குறைந்தது ஐந்து கணக்கியலாளர்கள் மீளாய்வு செய்திருந்தனர். அளவு, தகவல் மூலம் மற்றும் செயல்முறை போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டிருந்தன. மேலும், இந்த விருதுகள் வழங்கப்படும் போது, நிறுவனத்தில் காணப்படும் நெறிமுறைகள், பெற்றுக்கொண்ட வெற்றிகள் மற்றும் நிறுவனத்தில் எதிர்கால செயற்பாடுகள் பற்றி காண்பிக்கும் அக்கறை போன்ற விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.  

“இம்முறை SDB வங்கியின் வருடாந்த நிதி அறிக்கை, இரண்டாவது தடவையாகவும் (Global Reporting Index (GRI) சர்வதேச குறியீட்டுக்கிணங்கத் தயாரிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும். மேலும், இந்த அறிக்கையின் தகவல்களை வெளிப்படுத்துவதற்கு பொருத்தமாக இலங்கை மத்திய வங்கியின் விதிமுறைகள், பங்குப்பரிவர்த்தனையின் விதிமுறைகள், கம்பனிகள் சட்டத்தின் வெவ்வேறு உள்ளம்சங்களின் பிரகாரம், நிதி அறிக்கைத் தயாரிக்கப்பட்டுள்ளமை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

மேற்படி விவரங்களுக்கு மேலதிகமாக, வங்கியின் 2015ற்கான செயற்றிறன் தொடர்பில் தகவல் பலதைச் சாராம்சப்படுத்தித் தெளிவாக சமர்ப்பித்திருந்தமையால், அது பரிபூரண வருடாந்த அறிக்கையாக அமைந்துள்ளது. மேலும், முதலீடுகளுக்காகத் தகவல்கள் கவர்ச்சிகரமானவையாகவும், முழுமையாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த விடயங்கள், வெள்ளி விருதை வென்றெடுப்பதற்கு உதவியாக அமைந்திருந்தது” என SDB வங்கியின் பிரதி பொது முகாமையாளர் ஹேமால் லொகுகீகன தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .