2024 மார்ச் 28, வியாழக்கிழமை

Samsung Galaxy S20 series பல சலுகைகளுடன் அறிமுகம்

Editorial   / 2020 மார்ச் 06 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

Samsung Sri Lanka புதிய கவர்ச்சிகரமான Galaxy S20 Ultra, S20+ மற்றும் S20 ஆகிய திறன்பேசிகளை  அறிமுகப்படுத்தியுள்ளது.  

 இப்புதிய திறன்பேசிகள் திறன்மிக்க சாதனங்களைக்  கொண்டுள்ள காரணங்களால் பல ஆச்சரியமான அனுபவங்களை அனுபவித்திட முடியும். குறிப்பாக, நாம் இவ்வுலகினை படம் எடுத்து காணும் விதத்தை மாற்றியமைத்திடும். 

இந்த அற்புதமானதும் அடுத்த தலைமுறைக்கானதுமான சாதனங்களான Galaxy S20, S20+ மற்றும் S20 Ultra ஆகியவற்றை இலங்கையில் முதலாவதாக பெற்றுக்கொள்ள விரும்பும் சம்சுங் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் முன்பதிவுகளைச் செய்து பல சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். 

தற்போது, எப்போதும் இல்லா அளவில் நாம், வாழ்க்கையைப் படம் பிடித்து, எம்மைப் பற்றிய கதைகளைத் திறன்பேசி ஊடாகச் சொல்லி வருகின்றோம்.  அதனாலேயே, புதிதாகத் திறன்பேசி ஒன்றைக் கொள்வனவு செய்திடும் நுகர்வோருக்கு, கமெரா முக்கியமான அம்சமாகக் காணப்படுகிறது. 

எமது வாழ்க்கைக்கு ஏற்ற விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள Galaxy S20 முற்றும் முழுதுமான புதிய கமெரா முறைமையை அறிமுகப்படுத்துகிறது. AI இன் வலுவூட்டலுடன் மிகப் பெரிய image sensor ஐயும் இது கொண்டுள்ளது. இதன் மூலம் எத்தருணத்திலும் எடுத்திடும் எல்லாப் படங்களும் சிறந்தவையாக விளங்கிடும்.   

கண்கவரும் துல்லியம்:

Galaxy S20 series இல் கிடைக்கப்பெறும் மிகப்பெரிய Image sensor உடன், கமெராவின்  resolution ஆனது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. S20 Ultra, 108MP camera வினையும்,S20, S20+ 64Mp கமெராவையும் கொண்டுள்ளன. இதன் இன்னோர் அனுகூலம் என்னவெனில், larger sensors அதிகப்படியான வெளிச்சத்தை உள்ளே இழுக்கிறது.   

எனவே, உயர்தரத்திலான படங்களை குறைவான வெளிச்சத்தில் பெற்றுக் கொள்ள முடியும். இந்த S20 Ultra வின் 108MP mode மற்றும்  12MP mode  ஆகியவற்றுக்கிடையில் மாற்றமடையும் high resolution தன்மையானது அனைத்தையும் ஒருபடி முன்னோக்கிக் கொண்டு செல்கிறது. அதற்கு உதவிடும் 9 பிக்சல்களை, சென்சர் மட்டத்தில் ஒன்றாக இணைப்பதற்கு nona-binning technology உதவிபுரிகின்றது.    

Space Zoom செய்திடும் திறன்: 

Galaxy S20 யின் apd; Space Zoom தொழில்நுட்பம் Hybrid Optic Zoom மற்றும் Super Resolution Zoom  ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து பயன்படுத்துகின்றது. இது, நீங்கள் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அருகில் இருப்பதைப் போல் காட்சியை Zoom செய்திடக்கூடிய AI-powered digital zoom இனை உள்ளடக்கியுள்ளது. இது Galaxy S20  மற்றும் S20+ யில் 30X வரையிலான zoom இனைக் கொண்டுள்ளது.  

அத்தோடு S20 Ultra வில் உள்ள புரட்சிகரமான மடிக்கக்கூடிய லென்ஸ்கள் AI வலுவூட்டலுடன் multi-image processing இனைக் கொண்டுள்ளது. இது அதிகூடிய அளவில் Zoom செய்திடும் போது, அப்படத்தின் தரம் குன்றாமல் பாதுகாக்கிறது. எனவே பயன்படுத்துபவருக்கு 100X வரையான Super Resolution Zoom இனை அனுபவித்திட முடியும். இது என்றுமில்லாத அளவிலான மிகவும் துல்லியமான காட்சியை வழங்கக் கூடியதாகும்.   

ஒரே தடவையில் பல இயலுமைகள்(Single Take): 

இந்த Single Take ஆனது, நீங்கள் ஒரு தருணத்தைப் படம் எடுத்திடும் போது, அதில் சற்று நேரத்துக்கு நிலைத்திருக்க உதவுகிறது. அதற்கு AI camera தொழில்நுட்பம் உதவுகிறது.  Galaxy S20யின் மூலம், பல எண்ணிக்கையிலான படங்களையும் வீடியோக்களையும் எடுத்திட முடியும். Live focus, cropped, Ultra Wide போன்றவை நிகழ்வுகள், தருணங்களைக் காட்சிகளைச் சிறப்பாகப் படம் பிடித்திட பெரிதும் உதவுகின்றது.   

Pro-Grade படம் பிடித்திடும் இயலுமை:

Galaxy S20 கண்கவர் 8K video shooting இனை வழங்குகிறது. எனவே, பயன்படுத்துபவர்கள், அவர்களது உலகத்தை உண்மையான நிறங்களிலும் தரத்திலும் படம் எடுத்திட உதவுகிறது.   
வீடியோ படம் எடுத்து முடித்த பின்னர், வீடியோவை ஸ்ட்ரீம் செய்திட Samsung QLED 8K மற்றும் அதன் அதிசிறந்த பார்வை அனுபவத்தையும் அதனுடன் கூடவே, 8K  வீடியோவிலிருந்து ஒரு ‘ஸ்டில்’ படத்தைப் பிடித்து, உயர் தரத்திலான புகைப்படமாக மாற்றிடவும் முடியும். 

Galaxy S20 series ஆனது Damro, Singer, Singhagiri, Softlogic சில்லறை நிலையங்கள்  நாடு முழுதும் உள்ள அனுமதிக்கப்பட்ட Softlogic Mobile Distribution மற்றும் John Keells Office Automation ஆகிய இடங்களிலும் மற்றும்  online பங்காளிகளான  Daraz, Clicknshop.lk, My Softlogic, Takas.lk மற்றும்  வலையமைப்பு பங்காளிகளான Dialog  மற்றும் Mobitel என்பன ஊடாகவும் முற்பதிவுகள் செய்து கொள்ளலாம்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X