2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பட்டியலிடலுடன் பாரிய விஸ்தரிப்புக்கு CDB ஆயத்தம்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிட்டிஸன்ஸ் டெவலப்மென்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் (CDB), கொழும்பு பங்குச் சந்தையிலுள்ள 'திரி சவி' அட்டவணையில் நிறுவனத்தை பட்டியலிடுவதை அறிவித்துள்ளது.

CDB 39,685,048 பங்குகளை பட்டியலிட எதிர்பார்க்கின்றது. Ernst & Young கணக்காய்வு நிறுவனம் பங்கு பரிமாற்ற ஆலோசகர்களாகவும் Nithya Partner சட்ட ஆலோசகர்களாகவும் செயற்படுகின்றனர்.

CDB இன் பட்டியலிடல் நிகழ்வானது, இலங்கை முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள சந்தர்ப்பத்திலும் சாதகமான ஒரு வியாபாரச் சூழல் காணப்படுகின்ற சூழ்நிலையில் இடம் பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

CDB இன் தலைவர் ராஜ்குமார் ரெங்கநாதன் 'இதுபோன்ற பட்டியலிடலுக்கு இந்த நேரம் உகந்ததாகும்' எனத் தெரிவித்தார். 'யுத்தம் முடிவடைந்தது தொடக்கம் இலங்கையின் பொருளாதாரம் வளர்ச்சியைக் கண்டு வருகின்றது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் ஒருமைப்பாட்டின் காரணமாக ஆரோக்கியம் நிறைந்த சாதகமான சூழ்நிலை காணப்படுகின்றது. எமது எதிர்கால இலக்குகளை அடைய இந்த பட்டியலிடல் உதவும் என நாம் எதிர்பார்க்கிறோம்'.

CDB இன் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி/பணிப்பாளரான மஹேஷ் நாணயக்கார தெரிவிக்கையில், 'கொழும்பு பங்கு பரிவர்த்தணையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் சட்டத் தேவைப்பாடுகளை சந்திக்கவும், எமது பங்குதாரர் கட்டமைப்பை விஸ்தரிக்கவும், எதிர்கால வளர்ச்சிக்கான மூலதனம் திரட்டும் ஆற்றலை பலப்படுத்தல் மற்றும் பொது பட்டியலிடப்பட்ட நிறுவனம் என்ற வகையில் வெளிப்படைத்தன்மையை மேலும் அதிகரித்தல் ஆகியன எமது பட்டியலிடலின் முக்கிய நோக்கங்களாகும்' எனத் தெரிவித்தார்.

நாணயக்கார தொடர்ந்து தெரிவிக்கையில், '2010ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டுக்கான வரிக்குப் பின்னரான இலாபம் ரூ.100 மில்லியனை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 670% அதிகாரிப்பாக காணப்படும். எமது மொத்த சொத்துக்களின் பெறுமதி 30% வளர்ச்சியுடன் ரூபா 7.5 பில்லியனாக அதிகரித்துள்ளது ஒரு சிறப்பான அடைவாகும். 2010 ஓகஸ்ட் 31ஆம் திகதியில் எமது மொத்த வைப்புத் தளம் ரூபா 5773 மில்லியனாக இருந்த அதேவேளை, ஒட்டுமொத்த செயற்பாடற்ற கடன் விகிதம் 5.84% ஆக இருந்தது' எனத் தெரிவித்தார்.

Ernst & Young  நிறுவனத்தின் பங்காளர் அர்ஜுன ஹேரத் தெரிவிக்கையில், 'CDB இன் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் நிறுவன முகாமைத்துவம் செயற்படும் நிபுணத்துவத்தைக் கருத்திற் கொண்டு, CDB இன் பங்குகள் கொழும்பு பங்குச் சந்தையில் சிறப்பான விளைவுகள் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது' எனத் தெரிவித்தார்.

வடக்கு பிராந்தியத்தில், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியாவில் இரண்டு சேவை நிலையங்கள் உள்ளடங்களாக நாடு முழுவதும் 32 கிளைகளை CDB தற்போது கொண்டுள்ளது. நகை அடகு, வெளிநாட்டு நாணய மாற்றம் (உத்தியோகபூர்வ நாணய மாற்றுனர்), பணப் பரிமாற்றம் போன்ற புதிய சேவைகளை தற்போது கொண்டுள்ளதுடன், இஸ்லாமிய நிதியியல் மற்றும் சேமிப்புக் கணக்குகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. CDB 'மணி கிராம்' மூலம் வெளிநாட்டு பணப்பரிமாற்றத்துக்கான ஒப்பந்தத்தை HNB வங்கியுடன் அண்மையில் கைச்சாத்திட்டது.

CDB இன் தனித்துவம் வாய்ந்த வியாபார திட்டமானது கிராமிய மற்றும் நகர பிரிவுகளை ஒருமுகப்படுத்தும் நிதியிடல் மற்றும் கடன் வழங்கல் திட்டமானது, CDB நிறுவனத்தை கிராமிய பொருளாதாரத்துக்கான நிகர வழங்குனராக நிலை நிறுத்தியுள்ளது. மேலும் இத்திட்டமானது கிராமிய மற்றும் நகர பிரிவுகளில் உள்ள வியாபார வளர்ச்சி சாத்தியங்களை ஒன்றிணைக்க வழிவகுக்கும். CDB இலங்கை மத்திய வங்கியில் நிதி நிறுவன சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்குள், மொத்த சொத்துக்களின் அடிப்படையில் 7ஆவது இடத்தில் உள்ளது.


You May Also Like

  Comments - 0

  • wasantha kumar david Saturday, 02 October 2010 10:55 PM

    நல்லது. மிக நல்லது.

    வசந்த குமார் டேவிட்
    கொழும்பு 15

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .