2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

புதிய DOVE சிகை சேத பராமரிப்பு தயாரிப்புகள் அறிமுகம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

யுனிலீவர் நிறுவனத்தின் முன்னணி சர்வதேச தயாரிப்புகளில் ஒன்றான டவ், சிகை பராமரிப்புக்கான புதிய உயர் ரக தயாரிப்புகளை உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள சலோன் நயனா நிலையத்தில் அறிமுகம் செய்தது. 'புதிய டவ் டமேஜ் தெரபி ரகங்கள், ஃபைபர் அக்டிவ்கள் மற்றும் மைக்குரோ மொயிஷ்சர் சேரம் தொழில்நுட்ப முறைகள் போன்றன கூந்தலை ஆறு மடங்கு உறுதியாக்கி கூந்தலை இறுதி முனைவரை பராமரிக்கிறது.

சர்வதேச ரீதியில் காணப்படும் சிறந்த 50 அழகியல் வர்த்தக நாமங்களில் டவ் எட்டாம் இடத்தை வகிக்கிறது. அத்துடன், யுனிலீவரை பொறுத்தமட்டில் முதல் தரத்தில் டவ் காணப்படுகிறது. ஒவ்வொரு பெண்ணிலும் மறைந்திருக்கும் அசல் எழிலை வெளிக்கொணரும் வகையிலும், அவர்களின் தோற்றப்பொலிவு தொடர்பில் தன்னம்பிக்கையையும் வழங்குகிறது.

சர்வதேச ரீதியில் டவ் தனது வர்த்தக நாமத்தை சிகை பாதுகாப்பு மற்றும் சரும பாதுகாப்பு தயாரிப்புகளான குளியல் சவர்காரங்கள், பொடி வொஷ், சாம்பு வகைகள், கண்டிஷனர்கள், உயர்தர சிகை பாதுகாப்பு நுட்பங்கள் மற்றும் டியோட்ரன்ட் வகைகள் போன்றன உள்ளடங்குகின்றன. டவ் தயாரிப்புகள் ஆர்ஜன்டீனா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, ஜேர்மனி, இந்தியா, அயர்லாந்து, நெதர்லாந்து, தாய்லாந்து, துருக்கி மற்றும் ஐக்கிய அமெரிக்கா போன்ற 35க்கும் அதிகமான நாடுகளில் விற்பனைக்குள்ளன.  

நிகழ்வில் கலந்துகொண்ட யுனிலீவர் நிறுவனத்தின் டவ் வர்த்தகநாம முகாமையாளர் கங்கா ஹேவகே கருத்து தெரிவிக்கையில், 'அழகியற்கலை வர்த்தகத்துக்கு இலங்கை யுனிலீவர் நிறுவனம் அதிகளவு முக்கியத்துவம் வழங்குகிறது. நவீன யுக நங்கையர்களின் சிகை பராமரிப்பை வழங்கும் உயர் ரக தயாரிப்பாக டவ் திகழ்கிறது. ஒவ்வொரு நங்கையினதும் கனவாக கவர்ச்சியான ஆரோக்கியமான கூந்தலை கொண்டிருத்தல் அமைந்துள்ளது.

அழகிய கூந்தல் என்பது ஒவ்வொரு பெண்ணிலும் முதலாவதாக கவனத்தை ஈர்க்கும் விடயமாக அமைந்துள்ளது. உலகிலுள்ள ஒவ்வொரு 10 பெண்களில் 8பேர் சேதமடைந்த கூந்தலை கொண்டுள்ளனர். அதில் இருவர் மட்டுமே தமது கூந்தல் சேதமடைந்துள்ளதை உணர்ந்து சிகை பராமரிப்பு தயாரிப்பை கொள்வனவு செய்கின்றனர். ஏனைய ஆறு பேரும் சேதமடைந்த கூந்தலை பராமரிக்க எவ்விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை. டவ் என்பது சேதத்திலிருந்து பாதுகாத்து அழகை சேர்த்திடும் தயாரிப்பாகும்.

கூந்தல் சேதம் என்பது பல வழிகளில் இடம்பெறக்கூடும், அவற்றில் சில எம்மை அறியாமலே இடம்பெறக்கூடும், பெரும்பாலான பெண்களிடையே நாளாந்த வாழ்க்கை செயற்பாடுகளின் போதே இவை பெரிதும் நிகழ்கின்றன. இந்த சேதத்தை ஏற்படுத்தும் காரணிகள் சூழல் காரணிகள் (சூரிய பாதிப்பு, குளிர்மை மற்றும் ஈரப்பதன்), எந்திரவியல் பாவனை (கழுவல், டவல் டிரையிங் மற்றும் கூந்தலை சீவுதல்), வெப்பமாக்கல் மூலம் உலர்த்துதல், இரசாயன பதார்த்தங்களின் பாவனை (கலரிங், பேர்மிங்) போன்றன அமைந்துள்ளன.

சூரிய ஒளியின் UV கதிர்கள் கூந்தலை மெலிவடைய செய்வதுடன், வளியில் காணப்படும் புகை மற்றும் டொக்சின்கள் போன்றன கூந்தலை அழுக்காகவும், ஒட்டும் தன்மை கொண்டதாகவும் சுகாதார தன்மையற்றதாகவும் மாற்றுகின்றன. புதிய டவ் சேத பராமரிப்பு ரகங்களானவை ஃபைபர் அக்டிவ் தொழில்நுட்பம் மூலம் கூந்தலில் காணப்படும் புரோடீன் மூலம் கூந்தலை 6 மடங்கு வரை உறுதியடையச் செய்கிறது' என்றார்.

இந்த தயாரிப்பு குறித்து ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தெற்காசிய பிராந்தியத்துக்கான தொழில்நுட்ப முகாமைத்துவ பணிப்பாளர் நிராஜ் மிஸ்ட்ரி கருத்து தெரிவிக்கையில், 'டவ் சேத பராமரிப்பு என்பது விஞ்ஞான ரீதியில் ஏற்புடைய சாம்பு மற்றும் கண்டிஷனர் வகைகளை கூந்தலை சீராக்கவும் உள்ளக அமைப்புகளையும் கட்டியெழுப்ப உதவுகிறது.

இந்த தயாரிப்புகளில் அடங்கியுள்ள தொழில்நுட்ப ரீதியிலான சேர்மானங்களின் மூலம் உலர்ந்த, பொலிவற்ற மற்றும் கடுமையான கூந்தலை பளபளப்பாகவும், மிருதுவாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. புதிய தொழில்நுட்பத்தின் மூலம் டவ் தயாரிப்புகளில் உள்ளடக்கப்பட்டுள்ள 'பைபர் அக்டிவ்ஸ்' மூலம் சேதமடைந்த கூந்தல் மற்றும் முனைகள் உடைந்த கூந்தல் போன்றவற்றில் ஊடுருவி புத்துணர்ச்சி வழங்கி ஆரோக்கியமானதும் உறுதியானதுமான கூந்தலை வழங்குகிறது' என்றார்.

அழகியற்கலை நிபுணரான நயனா கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'கூந்தல் இழைகள் சிறிய துணிக்கைகளால் ஆனது. இவை நீர், துப்பரவாக்கும் பொருட்கள் அல்லது இதர வெளி பதார்த்தங்களுடன் தொடுகைக்கு உள்ளாகும் போது கூந்தலை உலர்வாகவும், கடினமானதாகவும் மாற்றமடைய செய்கிறது. இதனால் கூந்தல் சேதமடைகிறது. இதன் விளைவாக நாம் முறையான கூந்தல் பராமரிப்பு தீர்வைகளை நாம் பெறத் தூண்டுகிறது.  

டவ் இன்டென்ஸ் ரிபெயார், டவ் டிரைனஸ் கெயார் மற்றும் டவ் டெய்லி சைன் போன்ற 3 ரகங்களில் டவ் சேத பராமரிப்பு சாம்பு மற்றும் கன்டிஷனர் வகைகள் அறிமுகமாகியுள்ளன. டவ் இன்டென்ஸ் ரிபெயார் சாம்பு மற்றும் கன்டிஷனரில் அடங்கியுள்ள ஃபைபர் ஆக்டிவ்கள் மற்றும் மைக்குரோ மொயிஸ்சரைசர் சேர்மானங்கள் அதிகம் உலர்ந்த மற்றும் சேதமடைந்த கூந்தலுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இவை கூந்தலில் ஊடுருவி சேதத்தை தவிர்த்து பராமரிக்க உதவுகிறது. இதன் மூலம் கூந்தல் சிதைவும், முனைகள் முறிவடைதலும் தவிர்க்கப்படுகிறது. டவ் டிரைனஸ் கெயார் சாம்பு மற்றும் கன்டிஷனர் உலர்ந்த கூந்தலை பாதுகாப்பதுடன், மைக்குரோ மொயிஸ்;சரைசர் சேர்மானமானது கடினமான உலர் கூந்தலை பாதுகாத்து பராமரிக்க உதவுகிறது. டவ் டெய்லி சைன் சாம்பு மற்றும் கண்டிஷனர் போன்றவற்றில் அடங்கியுள்ள மைக்குரோ மொய்ஸ்சரைசர் சேர்மானமானது கூந்தலுக்கு சிறந்த தோற்றத்தை வழங்குகிறது.

புதிய டவ் சேத பராமரிப்பு தயாரிப்புகள் மூன்று ரகங்களில் காணப்படுகின்றன. நவீன நுட்பங்களை கொண்டு வெள்ளை பொதிகளில் இவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், சாதாரண விலையில் இந்த 3 புதிய ரகங்களும் அனைத்து முன்னணி சுப்பர் மார்க்கட்களிலும், பார்மசிகளிலும், குரோசரிகளிலும் மற்றும் இதர சரும பராமரிப்பு விற்பனை நிலையங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .