2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

எடிசலாட் - hSenid அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் மென்பொருள் சமர்ப்பித்தலுக்கான இணையத்தள போட்டி

Super User   / 2010 செப்டெம்பர் 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altஎடிசலாட் மற்றும் hSenid இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள கையடக்கத் தொலைபேசிகளில் மென்பொருள் சமர்ப்பித்தலுக்கான, இணையத்தளத்தில் மென்பொருள் சமர்ப்பித்தல் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த போட்டி எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளது.

இலங்கையின் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதன் மூலம் தமது திறமைகளை வெளிக்கொண்டுவருவதற்கு சிறந்த சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எடிசலாட் நிறுவனம் hSenid உடன் இணைந்து Appzone இணையத்தளத்தை அறிமுகம் செய்திருந்ததன் மூலம், முதன் முதலாக இலங்கையில் கையடக்க தொலைபேசி மென்பொருள் வடிவமைப்பு வல்லுநர்களுக்கு மாத்திரமன்றி அனைத்து வடிவமைப்பாளர்களுக்காகவும் தமது திறமைகளை வெளிக்காட்ட ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது.
 
இந்த இணையத்தளம் குறித்த விளக்க கருத்தரங்குகளை எடிசலாட் மற்றும் hSenid நிறுவனங்களை சேர்ந்த நிபுணர்கள் இலங்கையின் முன்னணி அரச மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களான கொழும்பு பல்கலைக்கழகம், மொரட்டுவை பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், பேராதனை பல்கலைக்கழகம், இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வியகம் (SLIIT) மற்றும் ஆசிய பசுபிக் தகவல் தொழில்நுட்ப கல்வியகம் (APIIT) போன்றவற்றில் மேற்கொண்டிருந்தனர்.

இந்த கருத்தரங்குகளின் மூலம், மாணவர்களுக்கு தமது ஆக்கங்களை எவ்வாறு சமர்ப்பிப்பது மற்றும் அவற்றின் மூலம் எவ்வாறு வருமானம் ஈட்டிக் கொள்வது போன்ற விடயங்களை வழங்கியிருந்தனர்.

இந்த போட்டியானது இரு பிரிவுகளில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முதற்பிரிவு தகவல் தொழில்நுட்ப பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களுக்கும் இரண்டாம் பிர்வு தகவல் தொழில்நுட்ப பிரிவில் தொழில் புரிவோருக்கும் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மட்டத்தில் நடைபெறும் போட்டியில் தெரிவு செய்யப்படும் முதல் 3 வெற்றியாளர்களுக்கு பணப்பரிசில்கள், ரிசேட்டுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

பின்னர் இவ்வாறு தெரிவாகும் போட்டியாளர்கள் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டியில் இரண்டாம் சுற்றுக்கு உள்ளடக்கபட்டு, இதன் மூலம் தெரிவு செய்யப்படும் முதலாவது வெற்றியாளருக்கு பெறுமதியான ஆப்பள் ஐபொட் (Apple ipod) பரிசாக வழங்கப்படவுள்ளது.

இரண்டாம் பிரிவான தொழில்நுட்ப துறையில் பணியாற்றுவோருக்கான போட்டியில் ஐந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு பிளாக் பொரி கையடக்க தொலைபேசி, கேடயம் மற்றும் சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்படவுள்ளன.
 
மென்பொருள் விருத்தியாளர்கள் செய்தி, விளையாட்டு, தகவல் மற்றும் களியாட்டம் போன்ற தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பின் கீழ் தமது ஆக்கத்தை வடிவமைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து எடிசலாட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி துமிந்திர ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில், க்ளுநன்னை வழங்கும் மென்பொருள் அடிப்படைத் தளத்தில் தமது ஆக்கங்களை சமர்ப்பிக்க அனைத்து இலங்கையர்களையும் தாம் அழைப்பதாகவும், சர்வதேச ரீதியில் தமது ஆக்கங்களை சமர்ப்பிக்கக் கூடிய ஒரு சிறந்த சந்தர்ப்பம் எனவும் அவர் கூறினார்.
 
hSenid நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தினேஷ் சப்ரமாது, பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுய வருமானத்தை தேடிக்கொள்ள இது ஒரு சிறந்த வாய்ப்பு. இந்த துறையில் ஆர்வமுள்ளோருக்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என்றார்.

மென்பொருள் வடிவமைப்பாளர்கள் www.appzone.lk எனும் இணையத்தளத்துக்கு விஜயம் செய்வதன் மூலம் மென்பொருள்களை சமர்ப்பிக்கும் பொழுது எவ்வாறான வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும், பரிட்சித்தல் மற்றும் விற்பனைக்கான அனுமதியை பெறல் போன்ற விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன் வடிவமைப்பாளர்கள் தமது ஆக்கங்களை சர்வதேச ரீதியில் பகிர்ந்து கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு சிறந்த கீர்த்தி நாமமும் கிடைக்கும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .