2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

HUTCH வழங்கும் ஸ்வர்ண அபிஷேக பரிசளிப்பு நிறைவு விழா

A.P.Mathan   / 2011 ஜூலை 18 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

HUTCH நிறுவனம் தனது வர்த்தக சந்தைப்படுத்தல் பிரதிநிதிகளை ஊக்குவிக்கும் முகமாகக் கடந்த பெப்ரவரி மாதம் முதல் 4 மாதங்கள் 'ஸ்வர்ண அபிஷேக' பரிசளிப்பு ஊக்குவிப்புத் திட்டத்தை நடத்தியது. இப்பரிசுத் திட்டத்தில் கலந்துகொண்ட வர்த்தக சந்தைப்படுத்தல் பிரதிநிதிகள் தமக்குத் தேவையான பரிசினைத் தாமே தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த ஊக்குவிப்புத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தமை முக்கிய அம்சமாகும்.

HUTCH தொலைபேசி ரீலோட் அட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தக சந்தைப்படுத்தும் பிரதிநிதிகள் தமக்குரிய தரகுத் தொகையை 'மசுரன்' எனப்படும் பரிசுப் புள்ளிகளாக மாற்றிக் கொள்வதோடு, பின்னர் பரிசுப் புள்ளிகளை தமக்குத் தேவையான பரிசுகளாக மாற்றிக்கொள்வதே இத் திட்டத்தின் அடிப்படையாகும்.

4,000 இற்கும் அதிகமான ர்ருவுஊர் வர்த்தக சந்தைப்படுத்தும் பிரதிநிதிகள் ஸ்வர்ண அபிஷேகப் போட்டியில் கலந்துகொண்டதுடன் இவர்களில் 450 இற்கும் அதிகமானோர் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு தாம் சேகரித்த 'மசுரன் புள்ளிகளை'த் தமக்குரிய பரிசுகளாக மாற்றிக்கொண்டனர்.
தமது வர்த்தக சந்தைப்படுத்தும் பிரதிநிதிகளை தமது உற்பத்தி தொடர்பாக விசுவாசமுள்ளவர்களாக மாற்றுவதுடன் தனியே ஒரு சிலருக்குப் பரிசுகளை வழங்காமல் நூற்றுக் கணக்கானோருக்குப் பரிசு வழங்கும் இத்திட்டத்திற்கு சந்தைப்படுத்தும் பிரதிநிதிகளிடமிருந்து பேராதரவு கிடைத்துள்ளதாக HUTCH நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி ஆனந் பிரகாஷ் தெரிவித்தார்.

'தங்க நகைகள், வீட்டு மின் உபகரணப் பொருள்கள், அலுவலகத்திற்குத் தேவையான மின்சார, இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றுடன் மோட்டார் சைக்கிள்வரை தமக்கு விரும்பிய பொருள்களைத் தேர்ந்தெடுக்கக் கூடிய வகையில் இத் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே வர்த்தக சந்தைப்படுத்தும் பிரதிநிதிகள் ஐவர் மோட்டார் சைக்கிள்களைத் தெரிவுசெய்துள்ளனர். அத்துடன் 17 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளையும் போட்டியாளர்கள் தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்' என்றார் ஆனந் பிரகாஷ்.

இத்திட்டத்தில் கலந்துகொண்ட களனிய பிரதேசத்தைச் சேர்ந்த பவ கொம்யூனிக்கேஷன் நிறுவனத்தின் உரிமையாளர் பிரதீப் குமார் இத்திட்டத்தில் கலந்துகொண்டோருள் அதிகப்படியான மசுரன் புள்ளிகளான 251,000 புள்ளிகளைப் பெற்றுள்ளார். அதிகப்படியான மசுரன் புள்ளிகள் பெற்றவர்களில் களனிய பபா கொம்மியூனிக்கேஷன் நளின் தர்ஷன 2ஆவது இடத்திலும் கண்டி கம்பொல நில்மினி தில்ருக்ஷி 3ஆவது இடத்திலும் உள்ளனர்.

வர்த்தக சந்தைப்படுத்தும் பிரதிநிதிகள் கடந்த 4 மாதங்களாகத் தாம் சேகரித்த மசுரன் புள்ளிகளைத் தமக்கு விருப்பமான பரிசுகளாக மாற்றிக்கொள்ளும் நிகழ்வு கடந்த 13ஆம் திகதி கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டல் லோவர் கிறிஸ்டல் மண்டபத்தில் இடம்பெற்றது.

பரிசுகளுக்குத் தகுதிபெற்றிருந்த சந்தைப்படுத்தும் பிரதிநிதிகள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமக்குத் தேவையான பரிசுகளைத் தாமே தெரிவு செய்ததுடன் மதிய போசன விருந்திலும் கலந்துகொண்டனர்.

தொலைத் தொடர்புச் சேவைகளிலும் ஊக்குவிப்பு நடவடிக்கைகளிலும் என்றும் புதுமைகளையே புகுத்தி வரும் HUTCH நிறுவனத்தின் ஸ்வர்ண அபிஷேக ஊக்குவிப்புத் திட்டத்தைப் பாராட்டிய சந்தைப்படுத்தல் பிரதிநிதிகள், எதிர்காலத்திலும் இதுபோன்ற ஊக்குவிப்புத் திட்டங்களை HUTCH நடத்துமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தனர். அத்துடன் இத்தகைய நிகழ்வு சந்தைப்படுத்தல் பிரதிநிதிகள் ஒருவரை ஒருவர் சந்தித்து அவர்களுடன் ஒன்றாகக் கூடி மகிழவும் இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததெனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இத்திட்டத்தில் கலந்துகொள்ள விரும்பாத சந்தைப்படுத்தல் பிரதிநிதிகள் தமக்குரிய தரகுப் பணத்தை HUTCH அட்டைகளாக மாற்றிக் கொள்ளவும் வசதிசெய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஹட்சிசன் டெலிகொமினிகேஷன்ஸ் லங்கா ( பிரைவேட்) லிமிட்டட் தொடர்பாக

ஹட்சிசன் டெலிகொம்யூனிகேஷன்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிட்டட் (ஹட்சிசன் டெலிகொம் லங்கா) கையடக்கத் தொலைபேசிச் சேவை ர்ருவுஊர் அடையாளக் குறியூடான தனது சேவையை வழங்குகின்றது. நாடுமுழுவதற்கும் தனது வலையமைப்பை விஸ்தரிப்பதற்கான  திட்டங்களில் ஈடுபட்டுள்ள ஹட்ச் டெலிகொம் லங்கா நிறுவனம் பல்வேறு தனித்துவமான சேவைகளையும் வழங்கிவருகிறது. ஹட்சிசன் டெலிகொம் லிமிட்டட் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள www.hutch.lk என்ற இணையத்தளத்தை அணுகுங்கள்.

ஹட்சிசன் டெலிகொம் சர்வதேச நிறுவனத்தின் உறுப்பினரான ஹட்சிசன் டெலிகொம் லங்கா நிறுவனம், ஹட்சிசன் வாம்போவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தோனேஷியா, வியட்நாம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தொலைத்தொடர்பு நடவடிக்கைளை அது மேற்கொள்வதுடன், 3G நடவடிக்கைகளை அவுஸ்திரேலியா, ஒஸ்திரியா, டென்மார்க், ஹொங்கொங், அயர்லாந்து, இத்தாலி, மக்கோவ், சுவீடன், இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு வழங்குகின்றது. ஹட்சிசன் வாம்போவா நிறுவனம் தொடர்பாக அறிந்துகொள்வதற்கு www.hutchison-whampoa.com என்ற இணையத்தளத்தைப் பார்வையிடவும்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .