2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எக்ஸ்போலங்கா ஃபிரயிட் தனது காபன்நியுட்ரல்®, காபன் வெளியீட்டை 10 வீதத்தால் குறைத்துள்ளது

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


காபன் கொன்சல்டிங் கம்பனி (CCC) மூலம் 2013/14 வருட காலப்பகுதிக்கான காபன்நியுட்ரல® மீள்சான்றளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது. நிறுவனத்தின் காபன் வெளியீட்டை குறைக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், இலங்கையின் காபன்நியுட்ரல்® சான்றை பெற்ற முதலாவது ஃபிரயிட் மற்றும் சரக்கு கையாள்கை கம்பனி எனும் பெருமையை பெற்ற எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) கம்பனி, 2012ஃ13 காலப்பகுதியில் வெளியிடப்படும் காபன் அளவை 10 வீதத்தால் குறைத்திருந்தது. 
 
இந்த சாதனை குறித்து எக்ஸ்போ ஃபிரயிட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜகத் பத்திரன கருத்து தெரிவிக்கையில், 'நாம் காபன்நியுட்ரல்® சான்றை மீள பெற்றுள்ள நிறுவனம் என்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சாதனையின் மூலம் இலங்கையின் சரக்கு போக்குவரத்து கையாள்கை துறையில் முன்னணி நிறுவனம் என்பதை உறுதி செய்துள்ளதுடன், ஆசியாவின் முன்னணி சரக்கு கையாள்கை நிறுவனம் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது'
 
'சமூக பொறுப்புணர்வு என்பது எமது செயற்பாடுகளில் முக்கியத்துவத்தை பெறுவதுடன், உலக புவி வெப்பமாதலை கட்டுப்படுத்தும் வகையில் எமது பங்களிப்பை வழங்குவதுடன், வாழ்க்கை மற்றும் வர்த்தக செயற்பாடுகளை முன்னெடுப்பது போன்றவற்றை சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் முன்னெடுப்பதும் உறுதி செய்யப்படுகிறது. நிலையாண்மை குறித்து அதிகம் கவனம் செலுத்தும் எக்ஸ்போ ஃபிரயிட் (EFL), எதிர்காலத்தில் காபன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகளையும், கொள்கைகளை மேற்பார்வை செய்யும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்' என்றார். 
 
காபன் கொன்சல்டிங் கம்பனி மூலம் வெளியிடப்பட்டிருந்த மதிப்பீட்டு அறிக்கையில் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.28 வீதமான அதிகரிப்பை மட்டுமே அதிகரித்திருந்தது. கடந்த ஆண்டு 21.7 வீத அதிகரிப்பு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. கம்பனியின் மொத்த வெளியீட்டில் அதிகரிப்பு ஏற்படக் காரணமாக, மூன்றாம் தரப்பு போக்குவரத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும், கம்பனி கடன் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கான 10 வீதத்தால் குறைக்கும் வகையில் ஈடுபட்டிருந்தது. (மொத்த குறைப்பு 11 வீதமாகும்)
 
இந்த மதிப்பீட்டு அறிக்கையில், எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) நிறுவனத்தின் பிரதான வினைத்திறன் குறிகாட்டிகளில் காபன் வெளியீடுகளில் குறிப்பிடத்தக்களவு குறைவு அவதானிக்கப்பட்டிருந்தது. கம்பனியின் 'அலகு ஒன்றின் தூரத்துக்கு அமைவான வெளிப்பாடு' 11 வீத சரிவை பதிவு செய்திருந்தது. அத்துடன், 'முழு நேர ஊழியருக்கு சமமான வெளிப்பாடு' 19 வீத சரிவையும் பதிவு செய்திருந்தது. 
 
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் சந்தைப்படுத்தல் பிரிவு, கூட்டாண்மை தொடர்பாடல்கள் மற்றும் சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளின் தலைமை அதிகாரி பெடி வீரசேகர கருத்து தெரிவிக்கையில், 'காபன்நியுட்ரல்® மீள் சான்றளிப்பானது, வர்த்தக நிறுவனம் எனும் வகையில், நாட்டின் பச்சை சரக்கு போக்குவரத்து கையாள்கை கம்பனி எனும் நிலைப்பாட்டை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது'
 
'மேலும், சூழல் பாதுகாப்பான வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக நாம் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறோம். பொறுப்புணர்வு வாய்ந்த கூட்டாண்மை குடிமகன் எனும் வகையில், சூழலுக்கு எம்மால் வெளியிடப்படும் காபன் அளவை கட்டுப்படுத்துவதற்கு எம்மை அர்ப்பணித்துள்ளோம். சூழல் பாதுகாப்பான வர்த்தக நிறுவனமாக நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம்' என்றார்.
 
கடந்த மூன்று ஆண்டுகளில், எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) தனது காபன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு, கடுமையான பரிசோதனைகள், சீராக்கங்கள் மற்றும் முன்னேற்றும் செயற்பாடுகளை ஒவ்வொரு பிரிவிலும் மேற்கொண்டிருந்தது.
 
காபன் கொன்சல்டிங் கம்பனியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி சனித் விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில், 'எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) நிறுவனத்தின் நிலையாண்மை தொடர்பான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களுடன் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்பதையிட்டு பெருமையடைகிறோம். காபன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்த அவசியமான தேவையான உள்ளக மாற்றங்களை மேற்கொள்வதற்கு கம்பனி குறிப்பிடத்தக்களவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருடமொன்றில் 10 வீதத்துக்கும் அதிகமான காபன் வெளிப்பாடுகளை கொண்டிருப்பது என்பது அதிகளவு வருவேற்கத்தக்கது. இந்த இலக்கை எய்த அர்ப்பணிப்புடன் செயலாற்றிய எக்ஸ்போ ஃபிரயிட் (EFL) குழுவினரின் செயற்பாடு வரவேற்கத்தக்கது. நாட்டின் அதிகளவு நிலையாண்மையை கொண்ட சரக்கு போக்குவரத்து மற்றும் கையாள்கை நிறுவனம் என திகழ்வதில் மேலும் காரணங்களை நிறுவனம் உறுதி செய்துள்ளது. எக்ஸ்போ ஃபிரயிட் நிறுவனத்தின் காபன் வெளிப்படுத்தல்களில் ஏற்பட்டுள்ள குறைப்பானது, அவர்களின் வாடிக்கையாளர்களின் காபன் வெளிப்படுத்தல்களிலும் குறைப்பை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.
 
இலங்கையில் காணப்படும் மிகப்பெரிய ஃபிரயிட் போக்குவரத்து கையாள்கை நிறுவனமாக எக்ஸ்போ ஃபிரயிட் திகழ்கிறது. நவநாகரீக துறையின் முன்னணி சேவை வழங்குநராக தன்னை பதிவு செய்துள்ளது. ஆபிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியா ஆகிய பிராந்தியங்களில் மொத்தமாக 17 சொந்த செயற்பாடுகளை எக்ஸ்போ ஃபிரயிட் கொண்டுள்ளதுடன் இந்திய உப கண்டத்திலும் பல முகவர்களை கொண்டுள்ளது.  
 
காபன்நியுட்ரல்® சான்று என்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட காபன் வெளிப்பாட்டை கட்டுப்படுத்தும் அறிக்கையாக அமைந்துள்ளது. காபன்நியுட்ரல் கம்பனி® தற்போது 32 நாடுகளில் தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், Avis, BBC Worldwide, Tata Steel மற்றும் The Westine மற்றும் மேலும் பல நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .