2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

றிச்சர்ட் பீரிஸ் டயர் நிறுவனத்தின் Reaching Heights – Top Dealer Awards 2011

A.P.Mathan   / 2011 ஜூன் 09 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

புன்னல ஹிருனி டயர் ஹவுஸ் ஐ.ஏ.கருணாதிலக, ரம்புக்கன சிசிர டயர் ஹவுஸ் டபிள்யு.ஏ.டபிள்யு.டபிள்யு. சிசிர குமார, கண்டி சுபிரி டயர் ஹவுஸ் ஏ.எம்.கித்சிரி பண்டார, றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் தலைவர், நீர்கொழும்பு ஆசிரி டயர் டிரேடர்ஸ் எச்.எம்.வசந்த குமார, அம்பலாந்தோட்ட ஜயந்த பிரதர்ஸ் எஸ்.ஐ.வின்னி மற்றும் றிச்சர்ட் பீரிஸ் டயர் கம்பனியின் பொது முகாமையாளர் பிரதீப் சமரதுங்க ஆகியோரை படத்தில் காணலாம்.

இலங்கையின் முன்னணி டயர் வகைகள் தயாரிப்பாளர்களும், றிச்சர்ட் பீரிஸ் குழுமத்தின் பிரதான நிறுவனமுமான றிச்சர்ட் பீரிஸ் டயர் நிறுவனத்தின் விநியோக்கத்தர்களை கொளரவிக்கும், விருது வழங்கும் நிகழ்வு (Reaching Heights – Top Dealer Awards 2011) அண்மையில் ஹபரண சாயா விலேஜ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வை றிச்சர்ட் பீரிஸ் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் சேன யதஹெத்திகே மற்றும் றிச்சர்ட் பீரிஸ் டயர் நிறுவனத்தின் பணிப்பாளரும் பொது முகாமையாளருமான பிரதீப் சமரதுங்க ஆகியோர் தலைமையேற்று நடத்தியிருந்தனர்.

வடக்கு கிழக்கு பகுதிகள் உள்ளடங்கலாக நாடு பூராகவும் பரந்து காணப்படும் 1300இற்கும் அதிகமான விநியோகத்தர்களிடையே மிகவும் சிறப்பாக செயற்பட்ட 60 விநியோகத்தர்கள் தமது குடும்பத்தினர் சகிதம் இந்த வருடாந்த விருது வழங்கும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

றிச்சர்ட் பீரிஸ் டயர் நிறுவனத்தின் விநியோகத்தர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, இம்முறை மீள் நிரப்பிய டயர் (Retrading) மற்றும் விநியோகம் (Trading) எனும் இரு பிரிவுகளில், பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளும், சான்றிதழ்கள், பணப்பரிசுகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.

மீள் நிரப்பிய டயர்களுக்கான பிரிவில் சுமார் 6 வருடங்களுக்கு மேல் சிறப்பாக பணியாற்றிய விநியோகத்தர் ஒருவருக்கு வழங்கப்படும் பிளாட்டினம் விருது இம்முறை நீர்கொழும்பைச் சேர்ந்த ஆசிரி டயர் ரேடர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எச்.எம்.வசந்த குமாரவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

மீள் நிரப்பிய டயர்களுக்கான பிரிவின் இரண்டாமிடமான தங்க விருதை ரம்புக்கன சிசிர டயர் ஹவுஸ் உரிமையாளர் டபிள்யு.ஏ.டபிள்யு.டபிள்யு.சிசிர குமார வென்றிருந்தார். இந்த பிரிவின் மூன்றாம் இடத்துக்கான தங்க விருதை கண்டி சுபிரி டயர் ஹவுஸ் (பிரை) லிமிட்டெட்டின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்.கித்சிரி பண்டார பெற்றுக் கொண்டார். விநியோக பிரிவில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை முறையே பன்னல ஹிருனி டயர் ஹவுஸ் உரிமையாளர் ஐ.ஏ.கருணாதிலக மற்றும் அம்பலாந்தோட்டை ஜயந்த சகோதரர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் ஜே.வினி ஆகியோர் பெற்றுக் கொண்டார்.
நாவின்ன, குருநாகல், கண்டி மற்றும் வலிகம ஆகிய நகரங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளிலிருந்து தயாரிக்கப்படும் ஆர்பிடக், ஆர்பிகோ மற்றும் ஆர்பி றேடியல் போன்ற மீள் நிரப்பக்கூடிய டயர்களை சிறப்பாக விநியோகித்த 50 விநியோகத்தர்கள் மற்றும் பிர்லா (Birla – India), கோர்சா (Corsa – Indonesia), கசுமினா (Casumina – Vietnam) போன்ற இறக்குமதி செய்யப்பட்ட டயர்கள் மற்றும் டியுப்களை சிறப்பாக விநியோகம் செய்த 10 விநியோகத்தர்களையும் இந்த விருது வழங்கும் நிகழ்வில் பங்குபற்றுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விநியோகத்தர் ஒன்றுகூடலில் கலந்து கொண்ட அனைவர் முன்னிலையில் றிச்சர்ட் பீரிஸ் டயர் நிறுவனத்தின் பொது முகாமையாளர் பிரதீப் சமரதுங்க உரையாற்றுகையில், 'இந்த விருது வழங்கும் நிகழ்வு இந்நாட்டின் டயர் விநியோக துறையின் மிகவும் முக்கியமான நிகழ்வாகும். இலங்கையின் மிகப்பெரும் மீள்நிரப்பக்கூடிய டயர் தயாரிக்கும் நிறுவனம் எமது நிறுவனமாகும். அதுபோன்றே மீள்நிரப்பக்கூடிய டயர் விநியோகத்திலும் அதிகளவு சந்தை வாய்ப்பை நாமே கொண்டுள்ளோம். எனவே இந்த நிலைக்கு எம்மை உயர்த்த எமக்கு பங்களிப்பு வழங்கும் எமது விநியோகத்தர்களை கௌரவிப்பது எமது கடமையாகும். எமது நிறுவனம் டயரின் தரத்தை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் அதிசிறந்த தயாரிப்பை வழங்குவது குறித்து அதிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. எமது இந்த முயற்சியால் எமது விநியோகத்தர்களின் வர்த்தக நடவடிக்கைகளும் சுமூகமாக நடைபெறுகிறது. எமது விநியோகத்தருக்கும் எமக்குமிடையே சிறந்த பிணைப்பு ஏற்பட்டுவிட்டது, அதை மேலும் கௌரவிக்கும் வகையிலேயே வருடாந்தம் நாம் இந்த ஒன்றுகூடல் நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறோம்' என்றார்.

1932ஆம் ஆண்டு ஆரம்பமான றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம் -மீள் நிரப்பக்கூடிய டயர் தொழிற்சாலையை 1942ஆம் ஆண்டு ஆரம்பித்தது. இது இலங்கையின் முன்னணி மீள்நிரப்பக்கூடிய டயர் தயாரிப்பு தொழிற்சாலையாக அமைந்ததுடன், 1991இல் அமெரிக்காவின் பாக்டெக் நிறுவனத்துடன் இணைந்து ஆர்பிடெக் நாமத்தை இலங்கையில் அறிமுகம் செய்தது. மாதாந்தம் 50,000இற்கும் அதிகமான மீள்நிரப்பக்கூடிய டயர்களை இலங்கையில் விநியோகிக்கும் றிச்சர்ட் பீரிஸ் நிறுவனம், இலங்கையின் முன்னணி; மீள்நிரப்பக்கூடிய டயர்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .