2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

புதிய ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான SKYFALLஇல் CAT இயந்திரம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


இரண்டு முன்னணி வர்த்தக நாமமான ஜேம்ஸ் பொண்ட் மற்றும் கட்டபிலர் ஆனது 23ஆவது பொண்ட் சாகசத்தொடரான 'SkyFall' திரைப்படத்திற்காக ஒன்றிணைந்துள்ளது. 'SkyFall' திரைப்படத்தின் ஆரம்பக் காட்சியானது லண்டன் நகரில் ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்டதுடன், இப்பொழுது சர்வதேச ரீதியிலும் இலங்கையிலும் திரையிடப்பட்டுள்ளது.

'SkyFall' திரைப்படத்தின் ஜேம்ஸ் பொண்ட் (secret agent, 007) கதாபாத்திரத்தில் பிரபல நடிகரான Daniel Craig நடித்திருந்ததுடன், துருக்கி கிராமப்பகுதிகளில் படமாக்கப்பட்ட ரயில் மீது இடம்பெற்ற சண்டை காட்சிகளில் CAT இயந்திரங்கள் (320D L Cat hydraulic excavator) பயன்படுத்தப்பட்டிருந்தன.

'பெரிய திரையில் எமது இயந்திரத்தை பார்க்கும் போது பிரமிப்பாக இருந்தது'. 'உலகின் மிக நீண்டகாலமாக ஓடும் திரைப்படத்தில் எமது இயந்திரத்தின் விசேட கூறுகளை காணும் போது வியப்பாக உள்ளது' என கட்டபிலர் சர்வதேச வர்த்தக நாம சந்தைப்படுத்தல் முகாமையாளர் டயான் லான்ட்ஸ் ரிக்கார்ட் தெரிவித்தார். '1927ஆம் ஆண்டு முதல் எமது வர்த்தக நாமமானது பல திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 1999ஆம் ஆண்டு ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான 'THE WORLD IS NOT ENOUGH' இல் இணைந்து பணியாற்றியுள்ளோம். 'சர்வதேச ரீதியில் பிரபல்யம் வாய்ந்த வர்த்தக நாமத்துடன் இணைந்து செயற்படுவது குறித்து பெருமையடைகிறோம்' என்றார்.

'கட்டபிலர் வர்த்தக நாமத்தின் இலங்கைக்கான விற்பனை பங்காளாரான UTE குழுமமாகிய நாம் SkyFall திரைப்படத்தில் 320D L Cat hydraulic excavator இயந்திரத்தின் காட்சிகளை கண்டு பிரமிப்படைந்தோம். மேலும் இலங்கைத் திரையரங்குகளில் கண்டுகளிக்க ஆவலுடன் காத்துக்கிடக்கின்றோம்' என UTE நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ரியாட் இஸ்மையில் தெரிவித்தார்.

'கட்டபிலர் வர்த்தக நாமமானது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப இயந்திரங்களை வடிவமைத்து வழங்குவதை குறித்து பெருமையடைகிறது'. இவ்விடயத்தில், ஜேம்ஸ் பொண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் EON Productions இன் வேண்டுகோளுக்கு அமைய 320D L இயந்திரத்தின் எதிர்ப்பக்கமாக அதன் இயக்குநர் கூண்டை அமைத்து காட்சிகள் படமாக்கப்பட்டது.

'இக்காட்சிகளில் படமாக்கப்பட்ட இடங்களுக்கு அமைய இயக்குநர் கூண்டின் ஆழி மற்றும் கதாபாத்திரத்திற்கிடையிலான தொடர்பு குறித்து பல மாதங்களாக திட்டமிட்டு படமாக்கப்பட்டிருந்தது' என ஐரோப்பா, ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் CIS இற்கான கட்டபிலர் தொடர்பாடல் முகாமையாளர் ரொபர்ட் வூட்லி தெரிவித்திருந்தார். இயக்குநர் கூண்டு மற்றும் இயந்திரத்தின் எதிர் பக்கத்தின் மின்னணு மற்றும் நீரியல் விடயங்களை மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

Skyfall திரைப்படத்தின் காட்சிகளுக்காக ஜப்பானின் கட்டபிலர் அகாசி தொழிற்சாலை இரண்டு விதமான 320D L இயந்திரங்களை உருவாக்கியிருந்தது. இச் செயற்பாட்டில் CAT இயந்திரத்தின் ஏக விற்பனையாளர்களான Finning UK மற்றும் Borusan Makina போன்ற நிறுவனங்கள் இணைந்து செயற்பட்டிருந்தன. Finning UK யானது Special Effects (SFX) பிரிவுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கியிருந்துடன், இயந்திரத்திற்கு தேவையான உதிரிப்பாகங்களையும் வழங்கியிருந்தது. மேலும் Borusan Makina நிறுவனமானது காட்சி ஒளிப்பதிவுகளின் போது களத்தில் தேவைப்பட்ட ஜெனரேட்டர்கள், skid steer loader மற்றும் mini hydraulic excavator போன்றவற்றை வழங்கியிருந்தது.

திரைப்படத்தின் ட்ரெய்லரை கண்டுகளிக்க http://www.007.com/videos என்ற இணையத்தள முகவரிக்கு பிரவேசியுங்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .