2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

SLIIT ஷெவ்ஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் புதிய கல்வி வாய்ப்புகள்

Super User   / 2011 ஜூன் 23 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் (SLIIT) , பிரித்தானியாவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஷெஃவ்பீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாணவர்களுக்கு மேலும் பல புதிய கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளது.

கற்கைகளை வழங்குவதில் அதியுயர் தரத்தையும், மாணவர்களுக்கு சிறந்த கற்றல் அனுபவத்தையும் வழங்கும் வகையில் ஷெஃவ்பீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் முன்னிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இன்றைய நவீன தொழில்துறைசார் சவாலகைளை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகளை ஷெஃவ்பீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருவதுடன், சர்வதேச அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்துடன் இணைந்து ஷெஃவ்பீல்ட் ஹலாம் பல்கலைக்கழகம் இலங்கை மாணவர்களுக்கு பிரித்தானியாவில் அதியுயர் தரத்தில் தமது கற்கைகளை தொடர வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், வணிக முகாமைத்துவம் மற்றும் இலத்திரனியல் பொறியியல் போன்ற கற்கைகளில் உயர்நிலை கற்கைகளை ஷெஃவ்பீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் சான்றிதழுக்காக அதே தரத்தில் இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்திலும் தொடர்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு இலங்கையில் தமது இளமாணிப்பட்டத்தை பூர்த்தி செய்யும் மாணவர்கள் மாஸ்டர்ஸ் கற்கைகளுக்காக பிரித்தானியா செல்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் தலைவர் பேராசிரியர் எஸ்.கருணாரத்ன கருத்து தெரிவிக்கையில், 'இலங்கையில் தகவல் தொழில்நுட்பத்துறையானது மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வரும் நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் இலங்கையர்களுக்கு பிரித்தானியாவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஷெஃவ்பீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தின் கற்கைகளை வழங்க முன்வந்தமையையிட்டு நாம் பெருமையடைகிறோம்' என்றார்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான பேராசிரியர் லலித் கமகே கருத்து தெரிவிக்கையில் 'மாணவர்களின் சிறந்த எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தரம்மிக்க கற்கைகளை வழங்கும் நோக்கத்தில் ஷெஃவ்பீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்துடன் நாம் இணைந்துள்ளோம்' என்றார்.

இலங்கையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் நிலவும் வேலைவாய்ப்பு வெற்றிடங்களை நிவர்த்தி செய்யும் வகையில் பல துறைசார் வல்லுநர்களை இலங்கை தகவல் தொழில்நுட்ப கல்வியகம் உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .