2024 மார்ச் 28, வியாழக்கிழமை

பொருட்தொகுதியை விஸ்தரிக்கும் UTE

A.P.Mathan   / 2014 ஏப்ரல் 07 , பி.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


முன்னணி பொருட்களை கையாளும் சாதனங்களை விநியோகிக்கும் UTE தனது பொருட்கள் தொகுதியினுள் Towmotor forklift ட்ரக்களை அறிமுகம் செய்துள்ளது. சினமன் லேக்சைட் ஹோட்டலில் மார்ச் மாதம் 20ஆம் திகதி இடம்பெற்ற விசேட கருத்தரங்கின் போது இந்த அறிமுகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

Towmotor®, என்பது Cat® லிப்ட் ட்ரக்கள் உற்பத்தி செய்யப்படும் அதே தொழிற்சாலையில் முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன் Towmotor® என்பது சிக்கல் இல்லாத செயன்முறைகளுக்கு இலகுவான முறையில் பயன்படுத்தக்கூடிய இயந்திரமாக அமைந்துள்ளது.

இந்த புதிய சாதனம் அறிமுகம் தொடர்பில் UTE நிறுவனத்தின் பொருட்கள் கையாள்கை பிரிவின் பொது முகாமையாளர் மஞ்சுள விதானகே கருத்து தெரிவிக்கையில், 'Towmotor® என்பது சிறந்த தொழிற்படும் இயந்திரமாகும். மிகவும் கடினமான ஒரு நாளின் செயற்பாட்டுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட இயந்திரமாக இது அமைந்துள்ளது. நம்பக்கூடிய இயந்திரம் என்பதுடன், செலுத்தும் பணத்துக்கும் பெறுமதி வாய்ந்ததாக அமைந்திருக்கும். Towmotor® என்பது forklift ட்ரக்களின் அசல் கண்டுபிடிப்பாளராக அமைந்துள்ளது. தற்போது no-frills machine ஆக கட்டபில்லரின் பின்னணியையும் கொண்டுள்ளமையால், செயற்பாடுகள் இலகுவான முறையில் முன்னெடுக்கப்படும்' என தெரிவித்தார்.

Towmotor forklift ட்ரக் வகைகள் எரிவாயு மற்றும் டீசல் ஆகிய மாதிரிகளில் அமைந்துள்ளன. 2 – 3 டொன்கள் வரையிலான பாரத்தை சுமக்கும் ஆற்றல் கொண்டவை. கையிருப்பில் இருப்பதை பொறுத்து 2.5 டொன்கள் மாதிரியும் அமைந்துள்ளது.

சந்தைப்படுத்தல் மற்றும் நிர்வாக பொது முகாமையாளர் நலின் மனோரட்ன கருத்து தெரிவிக்கையில், 'UTEஐ சேர்ந்த நாம் விற்பனைக்கு பிந்திய சேவைகளை வழங்குவது தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்துகிறோம். Forklift வகைகளை பொறுத்தமட்டில் விற்பனைக்கு பிந்திய சேவை என்பது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. எமது உயர்ந்தரம் வாய்ந்த பொருட்கள் உதவி சேவைகள் என்பது எமது மாபெரும் பலமாகும். எமது சேவை பிரிவில் பிரத்தியேகமான பொருட்கள் கையாள்கை பகுதியும் உள்ளது. மேலும் நடமாடும் சேவை வழங்கும் பகுதியையும் கொண்டுள்ளது. எமது உதிரிப்பாகங்கள் பகுதி எமது கிளை வலையமைப்பில் காணப்படுகிறது. இந்த சேவை பிரிவுகள் நாடு முழுவதும் காணப்படும் கேந்திர நகரங்களை உள்ளடக்கி அமைந்துள்ளது' என்றார்.

அசல் Towmotor forklift என்பது முன்னணி தயாரிப்பாகும். 1933 ஆம் ஆண்டு அமெரிக்காவின் Towmotor® கோர்ப்பரேஷனை சேர்ந்த லெஸ்டர் எம்.சியர்ஸ் அவர்களால் வடிவமைக்கப்பட்டது. முப்பது நபர்களின் மூலம் செய்யக்கூடிய செயற்பாடுகளை இந்த கழசமடகைவ சாதனம் செய்யும் ஆற்றல் கொண்டது. Towmotor என்பது மிகவும் பிரபல்யம் வாய்ந்தது, அனைத்து கழசமடகைவ வகைகளும் அந்நாளில் Towmotors என்று அழைக்கப்பட்டன.

Towmotor® கோர்ப்பரேஷன் 1965 ஆம் ஆண்டு கட்டர்பில்லர் நிறுவனத்தால் பொறுப்பேற்கப்பட்டது. இரு நிறுவனங்களின் இணைந்த நிபுணத்துவத்தின் மூலம் இந்த வர்த்தக நாமத்தின் சிறப்பை அமெரிக்க பாரம்பரிய தரத்துக்கு மீண்டும் உயர்த்த உதவியிருந்தன.

Towmotor வகையை இலங்கையில் UTE அறிமுகம் செய்திருந்தாலும், தொடர்ந்தும் CAT  ஃலிப்ட் ட்ரக் வகைகளை சந்தைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது. விசேட செயற்திறன் வாய்ந்த, உயர் தர தயாரிப்புகளை நாடும் வாடிக்கையாளர்களுக்கு உகந்த வகையில் அமைந்துள்ளது.

இலங்கையில் கட்டபில்லர் forklift வகைகளின் அங்கீகாரம் பெற்ற விநியோகத்தராக UTE இயங்கி வருகிறது. தயாரிப்பு தெரிவுகளில், டீசல், பெற்றோல் மற்றும் எரிவாயு மற்றும் இலத்திரனியல் முறையில் இயங்குவது போன்றன உள்ளடங்கியுள்ளன.

நிர்மாணத்துறையில் முன்னோடியாக திகழ்வது எனும் கம்பனியின் நிலைக்கு அமைய, Towmotor அறிமுக கருத்தரங்கில் பலர் பங்குபற்றியிருந்தனர். குறிப்பாக UTE நிறுவனத்தின் நீண்ட கால வாடிக்கையாளர்கள் அதிகளவு பங்கேற்றிருந்தனர்.

UTE இன் தற்போது பொருட்கள் கையாளும் தொகுதியில் முன்னணி வர்த்தக நாமங்கள் ஃ சாதனங்கள் உள்ளடங்கியுள்ளன. இதில் CAT forklift ட்ரக் வகைகள், JLG Aerial work platforms, BT/Raymond களஞ்சிய ட்ரக்கள், Dexion racking and shelving, Enerpac hydraulic equipment மற்றும் DID தொழிற்சாலை சார் செய்ன்கள் போன்றன அடங்குகின்றன. புதிய உள்ளடக்கமாக Towmotor அமைந்துள்ளதுடன், அதன் உயர் தரம், நீண்ட காலம் உழைக்கும் ஆற்றல் மற்றும் பணத்துக்கான பெறுமதி போன்றன அமைந்துள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X