2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அநுராதபுரத்தில் மொபிடெல் காஷ் பொனன்ஸா கார்னிவல்

Editorial   / 2018 செப்டெம்பர் 28 , மு.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொபிடெல் காஷ் பொனான்ஸா, அண்மையில் அநுராதபுரம் நகரில் இடம்பெற்றது. தேசிய தொலைத்தொடர்பாடல் வழங்குநரான மொபிடெல் ஒழுங்கு செய்திருந்த இந்நிகழ்வின் வெற்றிக்கு சாட்சியாக, சல்காது மைதானம் முழுதும் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் குழாமினால் நிறைந்து காணப்பட்டது. 

அநுராதபுரத்தில் நடைபெற்ற கார்னிவெல், காஷ் பொனான்ஸா முன்னெடுப்பின் ஓர் அங்கம் ஆகும். விசுவாசமிக்க வாடிக்கையாளர்களுக்கான வெகுமதிகளை வழங்குவதற்காக நாடெங்கும் பயணிக்கும் இந்த அதிர்ஷ்டசாலி தெரிவு நடத்தப்படுவதோடு, இந்நிகழ்வு குடும்பத்தினர், குதூகலம் மற்றும் ஒன்றுகூடல் ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு கொண்டாட்டமாக அமைந்தது. இவையே மொபிடெல்லின் வாசகமான ‘என்றும் உங்களுடன்’ என்பதற்கு அடித்தளமாகக் காணப்படுகின்றன.   

சகல வயதினருக்கும் ஏற்ற விதத்தில் கொண்டாட்டங்களை இக் கார்னிவல் கொண்டிருந்தது. இளம் வயதினர் அதிவேக 4G துணையுடனான கேமிங் வலயத்தில் குவிந்ததோடு, அங்கு மணித்தியால கணக்கில் இலவச கேமிங்கில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக சித்திரம் தீட்டும் போட்டிகள், திரைப்பட அனுபவம் மற்றும் கோமாளிகளைக் கொண்ட இசை நிகழ்ச்சி என பல அம்சங்கள் உள்ளடங்கியிருந்ததோடு, கொண்டாட்டத்தை மேலும் குதூகலமாக்கிட வேடிக்கை பொம்மைகளும் சேர்க்கப்பட்டிருந்தன. 

மேலும், அநுராதபுரம் மாவட்ட மக்களின் நலனையும், வசதியையும் கருத்திற்கொண்டு மிக அரிதானதொரு செயற்பாடாக நிகழ்வு நடைபெற்ற 8 மணித்தியால நேரத்தில் மக்கள் தங்கள் அடையாள அட்டைகள் மற்றும் பிறப்பு அத்தாட்சிப் பத்திரங்களுக்காக விண்ணப்பித்து அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்வின் மிக முக்கியமான விடயமாக, பிரபல கண் பரிசோதனையாளர்கள் பங்குபற்றிய கண் சிகிச்சை நிலையம் அமைந்ததோடு, மாவட்டத்திலுள்ள பிரஜைகளுக்கு 1,500 வாசிப்புக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டதோடு, சிறுநீரக பரிசோதனையும் நடைபெற்றது. நிகழ்வின் இறுதியாக, இசை நிகழ்ச்சி அரங்கேறியது. “ஸநிதப” இசைக் குழுவினர், வருகை தந்திருந்து, விருந்தினர்களை இசை மற்றும் நடன நிகழ்வுகளின் மூலம் மகிழ்ச்சியில் ஆழ்த்தி ஓர் மகிழ்ச்சிகரமான நாளாக மாற்றினர். 

அத்தோடு, மொபிடெல் ஒரு விசேட இணையத்தள செயலமர்வையும் நடத்தியது. இதில் இணையத்தைப் பயன்படுத்தி, எவ்வாறு சிறந்த உற்பத்தி ஆக்கங்களை மேம்படுத்துவது என்பது பற்றி பிரதேசத்தின் இளம் வயதினருக்கு எடுத்துரைக்கப்பட்டது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .