2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

‘அவர்களின் வாழ்க்கைக்காக ஓடுங்கள்’ அறக்கட்டளைக்கு AIA Vitality பங்களிப்பு

Editorial   / 2018 ஜனவரி 11 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘அவர்களின் வாழ்க்கைக்காக ஓடுங்கள்’ (Run for Their Lives - RFTL) அறக்கட்டளைக்கு AIA தனது அனுசரணையின் பின்னர், Vitality உறுப்பினர்களை ஊக்குவிக்கும் முகமாக மஹரகமயில் அமைந்துள்ள அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்குப் பங்களிப்புச் செய்வதற்காக தனது கூட்டாண்மை முயற்சியை மேற்கொள்கின்றது.

AIA Vitality இல் உள்ள சமீபத்தைய அறக்கட்டளை வெகுமதித் தெரிவானது, வைத்தியசாலைக்கு நன்கொடைகளை வழங்கும் முகமாக Vitality பயனர்களை அனுமதிக்கின்றது. 

இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், தொடர்ந்தும் செயற்பாட்டில் இருப்பதாகும். மேலும், உங்களுடைய வாராந்த இலக்கை எய்துவதற்கு AIA Vitality உடன் தொடர்பிலிருப்பதாகும், அத்துடன் உங்களுடைய வெகுமதியைக் கோரும் போது ‘நன்கொடை’ (donation) எனும் தெரிவைத் தெரிவு செய்யுங்கள்.

இதன் பிறகு மஹரகமயில் அமைந்துள்ள அபெக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு ரூ. 500 ஐ AIA நன்கொடையாக வழங்கும். உங்களுடைய நன்கொடைகள் அனைத்தும் இலங்கையில் உள்ள புற்றுநோயாளிகள் தங்களது புற்றுநோய்க்கு எதிராகப் போராடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றை வழங்கி, அவர்கள் தங்களது வாழ்க்கையில் மிகவும் நீண்ட தூரம் செல்வதற்கு உதவி செய்யும்.  

இலங்கையில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்காகக் கொண்ட ‘அவர்களின் வாழ்க்கைக்காக ஓடுங்கள்’ முயற்சியினால் இப்பெறுமதியான நோக்கம் எளிதாகவே சாத்தியமாக்கப்பட்டுள்ளது. 

கொழும்பு நகரின் ரோட்டரக் கழகத்தினால் (Rotaract Club) ஏற்பாடு செய்யப்பட்ட, மஹரகமயில் அமைந்துள்ள அபெக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு உதவி செய்யும் முகமாக, இந்த ஆண்டினுடைய 5 கிலோமீற்றர் தூரத்தை ஓடுவதற்கு உதவி செய்த அனுசரணையாளரானதில் AIA பெருமையடைகின்றது.  

AIA இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி நிகில் அத்வானி கருத்துத் தெரிவிக்கையில், “புற்றுநோயானது இலங்கையில் அதிகரித்து வருகின்ற ஒரு துயரமாகும். மக்கள் நீண்ட ஆரோக்கியத்துடனும் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும், எங்களுடைய வாக்குறுதிகளை உண்மையாக்குவதற்கும், மற்றும் அவர்களுக்கு உதவி செய்வதற்கும் AIA மிகவும் அர்ப்பணிப்புடனேயே செயற்படுகின்றது.

இலங்கையில் புற்றுநோய்ச் சிகிச்சைக்குப் பங்களிப்புச் செய்ய முடியுமாகவுள்ள எந்தவொரு வழியிலும் எங்களாலான உதவிகளைச் செய்வதற்கு, மிகவும் ஆர்வமாக உள்ளோம்” எனத் தெரிவித்தார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .