2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’இலங்கையின் வளித் தரம் சிறந்தது’

Editorial   / 2020 செப்டெம்பர் 15 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வளித் தரம் தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக யேல், கொலம்பிய பல்கலைக்கழய ஆய்வாளர்கள் முன்னெடுத்திருந்த சூழல் வினைத்திறன் சுட்டெண் 2020 (EPI) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

22ஆவது ஆண்டாக முன்னெடுக்கப்பட்டிருந்த இந்த சுட்டெண் ஆய்வின் போது, 180 நாடுகள் உள்வாங்கப்பட்டிருந்ததுடன், சூழல் சுகாதாரம், சூழல்கட்டமைப்பு ஆகியன தொடர்பில் இந்த குறிகாட்டிகள் ஆராயப்பட்டிருந்தன.

இந்த ஆய்வில் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளின் ஒப்பிடுகையில் இலங்கை 109ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. (EPI) புள்ளிகள் 100க்கு 39ஆக அமைந்திருந்தது. இது ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில உயர்ந்த நிலையில் காணப்படுகிறது.

வளியின் தரம் தொடர்பான அளவீடுகள் ஒவ்வொரு நாட்டிலும் மனித சுகாதாரத்தில் வளி மாசடைதல் ஏற்படுத்தும் நேரடித் தாக்கம் தொடர்பில் ஆராயப்படுகின்றது. இதில் மூன்று குறிகாட்டிகள் அடங்கியுள்ளன: PM2.5 exposure, household solid fuels, ஓசோன் வெளிப்பாடு போன்றன அவையாகும்.

2020 EPI இன் பிரகாரம் வளித் தரத்தில் இலங்கை 91ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டிருந்தது. பிராந்தியத்துடன் ஒப்பிடுகையில் கடந்த 10 வருடங்களில் இலங்கை நேர்த்தியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

ஏனைய ஆசிய நாடுகள் வளித் தரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்பட்டன. குறிப்பாக, பங்களாதேஷ் 166 ஆம் இடம், இந்தியா 179ஆம் இடம், பாகிஸ்தான் 180 ஆம் இடம் ஆகியவற்றில் தரப்படுத்தப்பட்டிருந்தன. இதனூடாக, மில்லியன் கணக்கான மக்கள் மோசமான வளி மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டிருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.

இலங்கையில் சிறந்த வளித் தரம் காணப்படுவதில், வாகன புகைப் பரிசோதனைத் திட்டம் பங்களிப்பு வழங்கியிருக்கக்கூடும். வளித் தரத்தை மேம்படுத்துவது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம், 2008ஆம் ஆண்டு முதல் வாகனங்களை கண்டிப்பாக பரிசோதிக்கும் திட்டம் இரு நிறுவனங்களுடன் ஆரம்பமானது. CleanCo Lanka (Pvt) Ltd, Laugfs Eco Sri Ltd ஆகியன இந்தப் புகைப்பரிசோதனைகளை மேற்கொண்டு, புகைப்பரிசோதனை சான்றிதழை வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன.

இதுவரையில் இலங்கையின் வாகன புகைப்பரிசோதனைத் திட்டம், வினைத்திறன் வாய்ந்ததாக அமைந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நகரப் பகுதிகளில் வளித் தரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் அதிகளவு புகை வெளியிடும் வாகனங்களை இனங்கண்டு அவற்றை சீர் செய்வதற்காக அறிவுறுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது. மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பிரத்தியேக வாகனங்கள் அடங்கலாக 5.6 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் வீதிகளில் காணப்படும் நிலையில், புகைப் பரிசோதனைகள் முன்னெடுப்பினூடாக, தேசத்தின் வாயுத் தரத்தை உயர்ந்த மட்டத்தில் பேண முடிந்ததுடன், 2020 EPI வாயு தரப் பிரிவில் உயர் புள்ளிகளைப் பெறவும் ஏதுவாக அமைந்திருந்தது.

சிறந்த வளித்தரம் காரணமாக பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், வளி மாசடைதலுடன் தொடர்புடைய சுகயீனம் ஏற்படுவது குறைந்துள்ளதுடன், இதர சுகாதாரப் பிரச்சனைகளும் குறைந்துள்ளன.

இந்த நேர்த்தியான பெறுபேறுகள் பெறப்பட்ட போதிலும், இந்த சுட்டியில் இலங்கையை மேலும் உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு வருவதற்கு மேலும் பணிகள் முன்னெடுக்க வேண்டியுள்ளன. வாகன புகை வெளியேற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, உற்பத்தியாளர்களால் பரிந்துரைக்கப்படாத எரிபொருள்களை பயன்படுத்துவது, வாகனங்களை முறையாக பராமரிப்பது தொடர்பில் வாகன உரிமையாளர்களை தெளிவுபடுத்துவது, வாகனங்களின் பொறியியல் நிலை தொடர்பில் அடிக்கடி கண்காணித்து சிறந்த எரிபொருள் வினைத்திரனை உறுதி செய்வது, வாகனம் செலுத்தும் சரியான முறை, நெரிசலான வேகைளில் வாகனத்தை செலுத்துவது பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையின் வளித் தரத்தை மேலும் அதிகரிக்கக்கூடியதாக இருக்கும்.

இலங்கையின் வாகன புகைப்பரிசோதனைத் திட்டம் என்பது, தேசத்தின் வளித் தரத்தில் சிறந்த பெறுபேறுகளை எய்த பங்களிப்பு வழங்கியிருந்தது மாத்திரமன்றி, நிலைபேறான பிரச்சனைகள் தொடர்பில் பரந்தளவில் கவனம் செலுத்தவும் உதவியாக அமைந்திருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .