2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கைத் தேயிலை மீது நம்பிக்கை ஏற்படுத்த அவசர நடவடிக்கை

Editorial   / 2018 பெப்ரவரி 06 , மு.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தேயிலை மீது மீண்டும் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை இலங்கையின் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர். குறிப்பாக, ஜப்பான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு நாட்டின் தேயிலை ஏற்றுமதி தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  

இதன் பிரகாரம், இரு விசேட குழுக்கள் இரு நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவில் இலங்கைத் தேயிலையின் கீர்த்தி நாமத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஜப்பானிலுள்ள குழுவினர், தேயிலை உற்பத்தியின் போது பயன்படுத்தப்படும் களைநாசினிகள் மற்றும் கிருமிநாசினிகள் பற்றிய புதிய விதிமுறைகள் குறித்த விளக்கங்களை வழங்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.  

ரஷ்யாவில் இலங்கைத் தேயிலை தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டு, பின்னர் அந்தத் தடை நீக்கப்பட்டிருந்தது. இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ரஷ்யாவில் இலங்கை தேயிலை தொடர்பான ஊக்குவிப்பு பிரசார திட்டமொன்று முன்னெடுக்கப்ப ட்டிருந்தது. மேலும் பெப்ரவரி 26 மற்றும் 27ஆம் திகதிகளில் பி‌றிதொரு பிரசார நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக  இலங்கைத் தேயிலைச் சபை ஊக்குப்பு நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் பிரமிளா ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.  

இலங்கை தேயிலை சபையின் தலைவர் கலாநிதி ரொஹான் பேதியாகொட, இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சுமித் அபேசிங்க மற்றும் இலங்கை சுற்றுலா சபையின் ஆய்வுகூடப் பணிப்பாளர் நிஷாந்த ஜயதிலக ஆகியோர் ஜப்பானுக்கு விஜயம் செய்துள்ளதுடன், அங்கு இலங்கைத் தேயிலையில் காணப்படும் மாசுகளின் அளவைக் கட்டுப்படுத்த, தாம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை வழங்குகின்றனர்.  

கிளிபோசேட் பாவனை இலங்கையில் தடைசெய்யப்ப ட்டள்ளதால், புதிய வகை களைநாசினியை இலங்கைத் தேயிலை பெருந்தோட்டங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதில் கிளிபோசேட்டில் காணப்படும் செறிமானத்தை விட அதிகளவு மாசு செறிமானம் காணப்படுவதாகத் தெரிவித்து, இலங்கையி லிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த தேயிலைக் கப்பல் தொகுதி சிலதை, ஜப்பான் நிராகரித்திருந்தது.  

இலங்கையிலிருந்து ஒன்பது மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஜப்பான் இறக்குமதி செய்வதுடன், இதன் சராசரி பெறுமதி 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  
இந்த விடயம் தொடர்பில் உள்நாட்டில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று தொடர்ச்சியாக நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .