2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இலங்கையில் விரைவில் Vivo அலை​பேசிகள்

Editorial   / 2017 நவம்பர் 29 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

Vivo, அடுத்த தலைமுறை சாதனங்களுடன் இலங்கையில் தனது தயாரிப்புகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் 20க்கும் அதிகமான நாடுகளில் 200 மில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக்கொண்டுள்ள இந்தவர்த்தக நாமம், புதிய சந்தைகளுக்கு தனது செயற்பாடுகளை வேகமாக விஸ்தரித்து வருகிறது. 

புத்தாக்கத்தை அடிப்படையாகக்கொண்ட Vivo, உலகளாவிய ரீதியில் ஆறு ஆய்வு நிலையங்களைக்கொண்டுள்ள. இதில் San Diegoஇலும் தனது ஆய்வகத்தைக்கொண்டுள்ளது. இவற்றின் மூலமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான Artificial Intelligence, 5G மற்றும் photography algorithms போன்றன தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்கிறது. ஆய்வு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றுக்கு தன்னை அர்ப்பணித்துள்ள இந்த வர்த்தக நாமம், ஒப்பற்ற ஓடியோ அனுபவத்தை வழங்க Hi-Fi chip சிப் கொண்ட உலகின் முதலாவது அ​ைல​ேபசியை அறிமுகம் செய்திருந்தது. மேலும் 2014இல், உலகின் முதலாவது 2K resolution மொபைல் திரையைக்கொண்ட திறன்பேசியான XPlay மாதிரியை அறிமுகம் செய்திருந்தது. கடந்த ஆண்டில், உலகின் முதலாவது 20 மெகாபிக்சல் இரட்டை முன்புற கமரா கொண்ட V5Plus திறன்பேசியை அறிமுகம் செய்திருந்தது. இதனூடாக சந்தையில் selfiesகள் எடுக்கும் முறையில் புதிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. 

உள்நாட்டு சந்தையில் அறிமுகம் செய்யும் வகையில் Vivo தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாம் மற்றுமொரு திறன்பேசி வர்த்தக நாமமல்ல. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை தோற்றுவிக்கும் வகையில் பூரணப்படுத்தலுக்கு முக்கியத்துவம் வழங்கும் ஒரு வர்த்தக நாமம். தொடர்ச்சியான தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு புத்தாக்கங்கள் ஊடாக, பூரணப்படுத்தலை நாம் எய்துகிறோம். நாம் புத்தாக்கத்தை பதிவு செய்யும் ஒவ்வொரு வேளையிலும், வாடிக்கையாளர்களை வியப்படையச்செய்வதுடன், அவர்கள் முன்னர் அனுபவித்திராத மகிழ்ச்சியான அனுபவங்களை ஏற்படுத்துகிறோம். வர்த்தக நாமம் எனும் வகையில், Vivo, கமரா மற்றும் இசை ஆகியவற்றுக்கு முக்கியத்துவமளிக்கிறது. சிறந்த மொபைல் புகைப்பட மற்றும் ஓடியோ அனுபவத்தை வழங்கும் வகையில் புத்தாக்கங்களை முன்னெடுக்கும். நிபுணத்துவம், ஆக்கத்திறன் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் மீதும் நாம் கவனம் செலுத்துகிறோம். உயர் புத்தாக்கம் மற்றும் தொடர்பாடல்கள் ஊடாக இளம் வாடிக்கையாளர்களின் மனம் விரும்பிய நாமமாக திகழ்வதை நாம் அடிப்படையாகக்கொண்டுள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .