2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இலத்திரனியல் கொடுப்பனவு அறிவித்தலுக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 11 , பி.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்கிகாரமற்ற இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்களை தவிர்த்துக் கொள்ளும் வகையில், இலத்திரனியல் கொடுப்பனவு அறிவித்தல் வசதிக்காக தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

இது குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், EMV சிப்-அடிப்படையிலான கொடுப்பனவு அட்டைகளை தமது நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களிடமிருந்து வாடிக்கையாளர்களை பெற்றுக் கொள்ளுமாறும் அறிவித்துள்ளது. இலத்திரனியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது, கவனமான முறையைப் பின்பற்றக்கூடியதாக இந்த வசதி அமைந்திருக்கும்.  

வாடிக்கையாளர்களின் சேமிப்பு, நடைமுறை கணக்குகளிலிருந்து அசல்-நேர வங்கிகளுக்கிடையிலான பண பரிமாற்றல்களை மேற்கொள்வதற்கும், அட்டைகளினூடான கொடுப்பனவு வசதிகளை செயற்படுத்திக் கொள்ளவும், இலத்திரனியல் கொடுப்பனவு முறைகளைப் பயன்படுத்துவது வாடிக்கையாளர்களுக்குப் பெருமளவு சௌகரியத்தை ஏற்படுத்துகின்றது.

இலங்கையின் கொடுப்பனவு கட்டமைப்புகள்,  உட்கட்டமைப்பு வசதிகள் போன்றன, சர்வதேச பாதுகாப்பு நியமங்களை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன், வாடிக்கையாளர்களின் நிதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்வதாக அமைந்துள்ளன. இந்த வசதிகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்தும் அனுபவிப்பதற்கு, இலத்திரனியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் போது, பொருத்தமான பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளது.  

அதன் பிரகாரம், தமது நடைமுறை அல்லது சேமிப்பு கணக்குகளை பயன்படுத்துவது, அட்டைகளை பயன்படுத்தி கொடுப்பனவு மேற்கொள்வது அல்லது இலத்திரனியல் வொல்ட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதற்காக எந்தவொரு தகவலையும் பகிர்ந்து கொள்ளும் போது வாடிக்கையாளர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.  

நடைமுறை, சேமிப்பு கணக்கு இலக்கங்கள், அட்டை இலக்கம், CVV இலக்கம் மற்றும் காலாவதி திகதி அடங்கலாக கிரெடிட், டெபிட் அட்டை விவரங்கள், தேசிய அடையாள அட்டை இலக்கம், இணைய அல்லது மொபைல் வங்கியியல் அல்லது கடவுச் இவொலட் சொற்கள், PIN இலக்கங்கள், ஒரு நேரம் மட்டும் வழங்கப்படும் கடவுச் சொற்கள் (OTPs), கொடுக்கல் வாங்கலை உறுதி செய்யும் பெறுமதிகள், நடைமுறை, சேமிப்பு கணக்குகளை, கொடுப்பனவு அட்டைகள், வொலட்கள் அல்லது இதர எந்தவொரு கொடுப்பனவு முறைகளை உறுதி செய்ய அல்லது பயன்படுத்த ஏதுவான எந்தவொரு தகவல்களும் இரகசியத்தன்மை வாய்ந்த தகவல்களாக கருதப்படுகின்றன.  

இவ்வாறான தகவல்கள் வாடிக்கையாளரின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக வழங்கப்படுவதுடன், அதனூடாக நிதிக் கொடுக்கல் வாங்கல்களின் பாதுகாப்பை அதிகரிப்பது மற்றும் வாடிக்கையாளரின் நிதியை பாதுகாப்பதற்காக வழங்கப்படுகின்றன.

கடவுச் சொற்கள், PINகள், OTPகள், கொடுக்கல் வாங்கல் உறுதி செய்யும் பெறுமதிகள் அல்லது இதர கொடுக்கல் வாங்கல் உறுதி செய்யும் தகவல் போன்றன எந்தவொரு தரப்பினரும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பதுடன், குறித்த தேவைக்காக மாத்திரமே பயன்படுத்த வேண்டும்.  

இவ்வாறான பாதுகாப்பு செயன்முறைகளை பின்பற்றுவதற்கு தவறுகின்றமையானது, வாடிக்கையாளர்களின் சொந்த நிதி இருப்பின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கும் என்பதுடன், மோசடியில் ஈடுபடுவோர், வாடிக்கையாளர்களின் கணக்குகளை அணுகி, அவற்றை கையகப்படுத்திக் கொள்ளவார்கள்.  

இலங்கை மத்திய வங்கி, ஏனைய அங்கிகாரம் பெற்ற நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களுடனும், பங்காளர்களுடனும் இணைந்து மோசடியான இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்களிலிருந்து வாடிக்கையாளர்களை பாதுகாத்துக் கொள்ள உதவும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளன.  

இதன் பிரகாரம், வாடிக்கையாளர்களுக்கு தமது சகல இணைய மூல கொடுப்பனவுகள் மற்றும் EMV சிப் செயற்படுத்தப்பட்ட அட்டைகளினூடான கொடுப்பனவுகளுக்கு குறுந்தகவல்களினூடாக அல்லது இதர உடனுக்குடன் அறிவிக்கக்கூடிய வழிமுறைகளை பயன்படுத்தி அறிவுறுத்தல்களை பெற்றுக் கொடுப்பதற்கு உள்நாட்டு நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

EMV சிப் அடிப்படையிலான கொடுப்பனவு அட்டைகள் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு உள்ளம்சங்களை கொண்டுள்ளன. அட்டைகளுடன் தொடர்புடைய மோசடியான கொடுக்கல் வாங்கல்களை தவிர்த்துக் கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.  

அங்கிகாரமற்ற இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்களை தவிர்த்துக் கொள்வதற்கு, உடனுக்குடன் தகவல்களை பெற்றுக் கொள்ளக்கூடிய இலத்திரனியல் கொடுப்பனவு அறிவுறுத்தல் வசதிக்கு வாடிக்கையாளர்கள் தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளதுடன், தமது நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனங்களிடமிருந்து EMV சிப் அட்டைகளை தாமதிக்காமல் பெற்றுக் கொள்ளுமாறும், இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது, அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .