2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இளைஞர்களுக்கு வலுவூட்ட DHL திட்டம்

Editorial   / 2019 ஜனவரி 09 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

Deutsche Post DHL Group (DPDHL), இலங்கை SOS சிறுவர் கிராமங்களுடன் கைகோர்த்து இளைஞர்களுக்கு வலுவூட்ட முன்வந்துள்ளது. இதனூடாக குறித்த இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள தயார்படுத்துவது,  வலுவூட்டும் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளது. இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் என்பது, சர்வதேச SOS சிறுவர் கிராமங்கள் ஸ்தாபனத்தின் துணை அமைப்பாக அமைந்துள்ளது.  

DPDHL Group இனால் 2011ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பங்காண்மையின் பிரகாரம், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களின் திறன்கள்,  பிரத்தியேக ஆளுமைகளை மேம்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கையின் SOS சிறுவர் கிராமங்களுடன் இணைந்து பிரத்தியேகமான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.  

DHL குழுமம் தனது இளைஞர் தொழி‌ற்றிறன், ஆற்றல் மேம்பாட்டு நிகழ்ச்சியை முதலில் பிலியந்தலையில் அமைந்துள்ள SOS சிறுவர் கிராமத்தில் முன்னெடுக்கும். இந்த நடவடிக்கை 2018 இன் நான்காம் காலாண்டில் ஆரம்பமாகும் என்பதுடன், ஒவ்வோர் ஆண்டும் இந்தச் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

பங்குபற்றுநர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் தொழில் தேடும் திறன்கள், தனிநபர் முதிர்ச்சி, சமூகத் திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ள இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிக்கும். இந்த நிகழ்ச்சியினூடாக இளைஞர்களுக்குத் தமது தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை மேம்படுத்தப்படும்.  

இந்த நிகழ்ச்சி அறிமுகம் தொடர்பில் DHL Express ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான தலைமையதிகாரி திமித்திரி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் காணப்படும் இளைஞர்களுக்குத் தமது தொழில் வாய்ப்புகளை மேம்படுத்திக் கொள்வதற்கு எந்தவிதத்திலும் உதவிகளை வழங்க நாம் மகிழ்ச்சியுடன் தயாராகவுள்ளோம். அவர்களின் எதிர்கால வெற்றிகரமான செயற்பாட்டுக்கு இது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியினூடாக, அவர்களுக்கு அவசியமான திறன்களைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், சுயாதீனமான, நிலைபேறான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொள்ள அவர்களைத் தயார்ப்படுத்தக் கூடியதாக இருக்கும் எனவும் கருதுகிறோம்” என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .