2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

உயர் போனஸை வழங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ்

Editorial   / 2018 ஜூலை 09 , பி.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

2017ஆம் ஆண்டுக்கான போனஸ் கொடுப்பனவாக 10.25% ஐ வழங்க யூனியன் அஷ்யூரன்ஸ் முன்வந்துள்ளது. ஆகக்குறைந்த உத்தரவாதமளிக்கப்பட்ட தொகையான 10% உடன் ஒப்பிடுகையில் இது உயர்ந்த பெறுமதி என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன், 2017ஆம் ஆண்டுக்கான சராசரி சந்தை வட்டி வீதமான 9.01% ஐ விட உயர்வானது என்பது குறிப்பிடத்தக்கது.  

கடந்த ஆண்டுகளில், யூனியன் அஷ்யூரன்ஸ் தனது காப்புறுதித்தாரர்களுக்கு உத்தரவாதமளித்திருந்த தொகையை விட, உயர் வெகுமதிகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

பங்கிலாபம் அடிப்படையிலான தீர்வுகளைக் கொண்டிருக்கும் காப்புறுதித்தாரர்களுக்கு இந்தப் பங்கிலாபத்தைத் தமது முதலீட்டு வருமதியில் அனுபவிக்க முடியும். பங்கிலாபம் அடிப்படையிலான ஒவ்வொரு காப்புறுதிதாரருக்கும் முதலீட்டுக் கணக்கொன்று தனித்தனியாகப் பேணப்படுவதுடன், மாதாந்த திரட்சி அடிப்படையில் போனஸ் வரவு வைக்கப்படும்.  

நிறுவனத்தின் ‘இலாபத்துடனான’ காப்புறுதித்தாரர்களின் 2017 டிசெம்பர் 31ஆம் திகதி வரையில், செயலில் இருந்த காப்புறுதிகளுக்கு இந்த வருடாந்த போனஸ் கொடுப்பனவு வழங்கப்படும். இது அவர்களின் காப்புறுதிகளில் இணைக்கப்படும்.  

தொடர்ச்சியான வளர்ச்சி, முதலீடுகளைக் கவனமான முகாமைத்துவம் மற்றும் நிதி உறுதித்தன்மை போன்றவற்றால் தனது பெறுமதி வாய்ந்த காப்புறுதித்தாரர்களுக்கு நிறுவனத்தால் உயர்ந்த அனுகூலங்களை வழங்கக்கூடியதாக இருக்கும் என்பதை உறுதி செய்துள்ளது.  

வாழ்க்கையை மாற்றியமைக்கும் பிணைப்புக்கு, யூனியன் அஷ்யூரன்ஸின் அர்பணிப்பு என்பதற்கமைய, 2018 ஆம் ஆண்டுக்காக பங்கிலாபம் அடிப்படையிலான காப்புறுதித் திட்டங்களுக்கு, பங்கிலாப சதவிகிதமாக 10% ஐ அறிவித்துள்ளது.  

ஆயுள் செயற்பாடுகளுக்கான பொது முகாமையாளர் இரோஷினி தித்தகல கருத்துத் தெரிவிக்கையில், “2017 ஆம் ஆண்டு என்பது, யூனியன் அஷ்யூரன்ஸின் வரலாற்றில் மிகவும் சிறந்த ஆண்டாக அமைந்திருந்தது. ரூ. 10.1 பில்லியன் செலுத்தப்பட்ட தவணைக்கட்டணத்தைப் பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22 சதவீத அதிகரிப்பாகும். நிதியளவில் உறுதியான தன்மையை கொண்டுள்ளதுடன், துறையில் சிறந்த அணியைத் தன்வசம் கொண்டுள்ள யூனியன் அஷ்யூரன்ஸ், 2018 இல் தொடர்ந்தும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்பார்ப்புகள் நிறைந்த இலக்குகளை நாம் பதிவு செய்துள்ளதுடன், எமது வாடிக்கையாளர்களுக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் வாழ்க்கையை மாற்றும் பிணைப்புக்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடாக இது அமைந்திருக்கும்” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .