2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எடிசலாட் cliQ சேவை

Editorial   / 2017 ஜூலை 12 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கால அடிப்படையிலான மொபைல் டேடா பக்கேஜ்களை கொள்வனவு செய்வதற்கு எடிசலாட், தனது வாடிக்கையாளர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்காக cliQ எனும் appஐ அறிமுகம் செய்துள்ளது. மொபைல் இன்டர்நெட் இணைப்புகளை cliQ அடிப்படையில் காலத்தை அடிப்படையாகக் கொண்டு கொள்வனவு செய்து, மெகாபைட் மற்றும் ஜிகாபைட் போன்ற புரிந்துகொள்ள சிக்கலான முறைகளை தவிர்த்துக்கொள்வதற்கு வழிகோலியுள்ளது.  

ஃபின்லாந்து நாட்டின் கொம்ப்டெல் கோர்பரேஷனின் புத்தாக்கமான தீர்வாக இது அமைந்துள்ளது. இதனூடாக பாவனையாளர்களுக்கு கால அடிப்படையிலான இணைதள சேவையை பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையில் தமக்குரிய டேடாவை கொள்வனவு செய்கின்றனர், கொடுப்பனவு மேற்கொள்கின்றனர் மற்றும் தமது பிரத்தியேக டிஜிட்டல் சேவைகளை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதை அறிந்து கொள்ள முடியும். 

cliQ அறிமுகத்துடன், எமது வாடிக்கையாளர்களுக்கு தங்கியிருக்கக்கூடிய மொபைல் இணைப்பு சேவைகளை புத்தாக்கமான வகையில் பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளது. அதனூடாக அவர்களின் வாழ்க்கைத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக அமைந்திருக்கும்” என எடிசலாட் லங்கா பிரதம வணிக அதிகாரி காலிஃவா மஹ்முட் தெரிவித்தார். 

“இந்த புத்தாக்கமான புதிய சேவையின் அறிமுகத்தின் மூலமாக, மொபைல் டேடா கொள்வனவு செய்யும் அனுபவம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு டேடாவை வழங்க முடிந்துள்ளதுடன், எடிசலாட் நிறுவனத்துக்கு வருமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

எடிசலாட் உடன் இணைந்து cliQ சேவையை அறிமுகம் செய்வதில் கொம்ப்டெல் மகிழ்ச்சியடைகிறது. இணையத்துடன் இரு பில்லியன் வாடிக்கையாளர்களை இணைப்பது எனும் எமது இலக்கை எம்மால் பூர்த்தி செய்ய முடிந்துள்ளது” என்று கொம்ப்டெல் FWDஇன் தலைவர் ஹரி ஜார்ன் தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .