2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கனவுகளை நனவாக்கும் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி

Editorial   / 2018 மே 30 , பி.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் கதை 18 வருடங்களுக்கு முன்னதாக ஆரம்பமாகியிருந்தது. இலங்கையின் வங்கி மற்றும் நிதியியல் சேவைகள் பிரிவில் தனக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்துக் கொள்ளும் நோக்கத்துடன், ஒரு சிறிய வங்கியாக ஆரம்பித்துத் தனது செயற்பாடு முன்னெடுத்திருந்தது.

புத்தாக்கம் மற்றும் புதிய செயன்முறைகள் என்பது வங்கியின் முக்கிய அம்சங்களில் உள்ளடங்கி இருந்ததுடன், இந்த விடயங்கள் வங்கியை ஒரு சிறிய வங்கி எனும் நிலையிலிருந்து, மதிப்பைப் பெற்ற மாற்றத்துக்கான முன்னோடி எனும் நிலைக்கு உயர்வதற்கு வழிகோலியிருந்தது.

 

இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் அங்கிகாரம் பெற்ற வணிக வங்கிகளில் ஒன்றாக நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி திகழ்வதுடன், தனிநபர்கள், சிறிய, நடுத்தர தொழில்முயற்சியாண்மைகள், கூட்டாண்மைகள் மற்றும் நிறுவனங்களுக்குப் பரிபூரண வங்கியியல் தீர்வுகளை வழங்கி வருகிறது. 

இலங்கையில் காணப்படும் மிகவும் புத்தாக்கமான மற்றும் சேவைகளை வழங்கும் முன்னணி வங்கிகளில் ஒன்றாகத் திகழ முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவர் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தி, அவர்கள் தற்போது, தமது வாழ்க்கையில் காணப்படும் நிலையைக் கவனத்தில் கொண்டு, அவர்களுக்கான சேவைகளைப் பெற்றுக் கொடுக்கிறது. 

இதன் பிரகாரம் வங்கி அண்மையில் ‘உங்கள் கனவு, எமது இலக்கு’ எனும் தொனிப்பொருளில் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. Facebookஇல் காணப்படும் தமது வாடிக்கையாளர்களைத் தமது கனவுகளைப் பதிவு செய்யுமாறு அழைத்திருந்ததுடன், அதனூடாக வட்டியில்லாத கடன் ஒன்றை வெற்றியீடுவதற்கு வாய்ப்பையும் வழங்கியிருந்தது.

இந்தப் போட்டி தொடர்பில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி ஷான் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “வியாபாரங்களுக்கான இலக்குகளை எய்துவதும், நாளைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதும் எமது கூட்டாண்மை இலக்காக அமைந்துள்ளன. ‘உங்கள் கனவு, எங்கள் இலக்கு’ எனும் திட்டம்,  எமது வாடிக்கையாளர்களின் கனவுகளை நனவாக்கும் வகையில் அமைந்துள்ளது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வது என்பது பற்றி நாம், எப்போதும் கவனம் செலுத்துவதுடன், இதன் காரணமாக நாம், எமது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமின்றி, Facebookஇல் பின்தொடர்பவர்களின் கனவைப் பகிர்ந்து கொள்ள நாம் கோரிக்கை விடுத்திருந்ததுடன், அவர்களின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து தெரிவு செய்திருந்தோம்.

அதைத்  தொடர்ந்து, தெரிவு செய்த கருத்துகளை நாம் பொதுவில் வெளிப்படுத்தி, Facebook Likes ஊடாக வெற்றியாளர்களைத் தெரிவு செய்திருந்தோம். சிறந்த மூன்று வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபாய் வரை வட்டியில்லாத கடன் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டி மிகவும் வெற்றிகரமானதாக அமைந்திருந்ததுடன், வாடிக்கையாளர்களின் கனவை நனவாக்கிக் கொள்ள வங்கியின் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாகவும் அமைந்திருந்தது” என்றார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .