2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

காலநிலை மாற்றத் தாக்கத்துக்கு எதிரான வனங்கள் சார்ந்த திட்டம்

Editorial   / 2017 மே 22 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகின் அதிகரித்து வரும் காலநிலை மாற்றத்திற்கு மூலகாரணம், வெப்ப நிலையைத் தக்க வைத்துக் கொள்ளக்கூடிய, வளி மண்டலத்தில் காணப்படும் காபனீரொட்சைட் உட்பட பச்சை இல்ல வாயுக்கள் தான் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். நாசா விஞ்ஞானிகளின் ஆய்வுகளுக்கு அமைய, பல தசாப்த காலமாக நிலவி வரும் இந்த உலக வெப்ப நிலை அதிகரிப்பின் காரணமாக, ஆர்டிக் கடலில் பனிக்கட்டிகளின் அளவு தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது.

இலங்கையின் NEXT செயற்பாட்டின் ஊடாக, நிலையான அபிவிருத்திப் பாதையொன்றை அடைந்துகொள்ள அரசாங்கம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறது. இதன் மூலம், காலநிலை மாற்றத்திற்கு எதிராகச் செயற்படும் அதேவேளை, சமநிலையான பொருளாதார வளர்ச்சியையும் அடைந்துகொள்ள முடியும். UN-REDD வேலைத் திட்டத்தின் மூலம் சுமார் நான்கு வருட காலமாக நாட்டின் வனப் பிரதேசத்தை பாதுகாப்பதற்குரிய நடைமுறைச் சாத்தியச் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்க ஐக்கிய நாடுகள் சபை பல்வேறு உதவிகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு வாயு வெளியீட்டைக் குறைப்பது, அபிவிருத்தியடைந்த நாடுகளின் உலகளாவிய ஒரு செயற்பாடாகக் காணப்படுகின்றது.

காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களுக்கு எதிராக செயற்படும் தேசிய திட்டங்களுக்கு வனம் சார்ந்த உள்ளடக்கங்களைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம், அபிவிருத்தியடைந்து வரும் 64 நாடுகளுக்கு வாயு வெளியீட்டைக் குறைக்கவும், காடு அழிப்பையும் காடுகளின் தரக் குறைவைக் குறைக்கவுமான வேலைத் திட்டத்தின் (REDD) ஊடாக ஐக்கிய நாடுகள் சபை ஒன்றிணைந்து செயற்படும் வேலைத் திட்டம் UN-REDD வேலைத் திட்டமாகும். இந்த வேலைத்திட்டம் 2008 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையினால் ஆரம்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (FAO), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத் திட்டம் (UNDP) மற்றும் ஐக்கிய நாடுகளின் சூழல் வேலைத் திட்டம் (UNEP) ஆகியனவற்றிடமிருந்து தொழில்நுட்ப மற்றும் ஏனைய உதவிகளை பெற்றுக்கொடுக்கிறது.

வன பரிபாலனத் திணைக்களம், வனவிலங்குப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் காலநிலை மாற்ற செயலகம் ஆகிய ஆர்வமுள்ள பல்வேறு நிறுவனங்களின் ஒன்று கூடலாக REDD+ திட்டம் அமைந்துள்ளது. இலங்கை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம், தேசிய REDD+ முதலீட்டு விதிமுறைகள் மற்றும் நடைமுறைத் திட்டம் - NRIFAP பெயரிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X