2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கொமர்ஷல் வங்கியின் ‘பிளாஷ்’

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முதலாவது முழு அளவிலான டிஜிட்டல் வங்கிக் கணக்கை கொமர்ஷல் வங்கி அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் நிதி சேவைகளிலும் நிதி நலன்களிலும் அடுத்தகட்ட பரிணாமத்துக்கு அழைத்துச் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘பிளாஷ்’ என முத்திரை இடப்பட்டுள்ள இந்தக் கணக்கு, சிங்கப்பூரை தளமாகக் கொண்டு செயற்படும் ‘காஷ்மி’ என்ற கம்பனியோடு இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 2016இல் சிங்கப்பூரில் முன்னோடியான சமூகக் கொடுப்பனவு பிரயோக முறையை அறிமுகம் செய்த நிறுவனமாகும்.

பிளாஷ் டிஜிட்டல் வங்கிக் கணக்கானது இலங்கை பாவனையாளர்களுக்கு அவர்கள் எங்கு இருந்தாலும் சரி இலகுவான இடையூறற்ற வங்கித்துறை அனுபவத்தை வழங்கும் என்று வங்கி அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் ஒருபோதும் கண்டிராத தனியார் நிதி முகாமைத்துவக் கருவிகளையும் அது வழங்குகின்றது.

பாவனையாளர்கள் தமது நிதியோடு மேலும் சிறந்த முறையில் புழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள அது உற்சாகமாகவும் தூண்டுதலாகவும் அமைகின்றது. பணத்தை செலவிடும் போதும் சேமிக்கும் போதும் மிகச் சிறந்த தெரிவுகளுக்கும் அது வழியமைக்கின்றது. அதன் மூலம் அவர்கள் தமது சொந்த நிதி நலனைப் பேணிக் கொள்ளவும் முடியும்.

கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர் பிளாஷ் பிரயோக முறையை App ஸ்டோர் அல்லது பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். இது பாரம்பரியமான வங்கி முறையில் பிரவேசிக்க விரும்பாத அல்லது பிரவேசிக்க முடியாத புதிய வாடிக்கையாளர் தளமொன்றுக்கு நிதிச் சேவை உலகத்துக்கான நவீன கதவுகளைத் திறந்து விடும். இந்த வகையில் இலங்கை முழுவதும் நிதி உள்சேர்க்கைகளை ஊக்குவிக்க கொமர்ஷல் வங்கியும் காஷ்மீயும் ஒன்றிணைந்துள்ளன.

இதில் இணைந்து கொண்டதும் வாடிக்கையாளர்கள் பல்வேறு விதமான சேவைகளை தமது கையடக்கத் தொலைபேசியில் இருந்தே எந்த நேரத்திலும் எங்கிருந்தும் அனுபவிக்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X