2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

சிறுவர்களுக்கு ரொபோடிக் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொடுத்த செலான் வங்கி

Editorial   / 2018 பெப்ரவரி 18 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயிரக்கணக்கான சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவித்துள்ள செலான் டிக்கிரி, மற்றுமொரு சாதனையை அண்மையில் எய்தியிருந்தது. செலான் வங்கியின் சின்னமன் கார்டன் கிளையின் மூலமாக, நாட்டின் எதிர்காலத் தலைமுறைக்கு நவீன robotic தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வூட்டும் பயிற்சிப்பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் பயிற்சிப்பட்டறையில் டிக்கிரி கணக்கை வைத்திருக்கும் பல சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர். இரு பிரதான கட்டங்களில் இந்தப் பயிற்சிப்பட்டறை முன்னெடுக்கப்பட்டிருந்தது. முதல் கட்டத்தில் சிறுவர்களுக்கு அடிப்படை coding பொறிமுறைகள் பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்ததுடன், இரண்டாம் கட்டத்தில் அசல் ரொபோக்களுக்கான coding களை நடைமுறைப்படுத்தல் பற்றிய பரிசோதனைகள் விளக்கப்பட்டிருந்தன.

செலான் வங்கியின் உயரதிகாரிகளால் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்ததுடன், பயிற்சிப்பட்டறையின் போது சிறுவர்களுக்கு குறித்த திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய தீர்வுகளைப் புரிந்து கொள்வது மற்றும் வடிவமைப்பது பற்றிய அறிவை வழங்கியிருந்தது.  

சர்வதேச மட்டத்தில் சிறுவர்களிடையே காணப்படும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புரிந்து கொண்டு, தேசத்தின் எதிர்காலப் பணியாளர்களுக்கு நவீன robotics தொழில்நுட்பம் ஊடாகத் தமது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கு வலுவூட்டுவதில் செலான் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது.

இந்தப் பயிற்சிப்பட்டறையின் மூலமாக, சிறுவர்களுக்குத் தமது பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றல், குழுநிலை செயற்பாடுகள் மற்றும் தீர்வுகளை வடிவமைத்தல் போன்றன தொடர்பிலும் விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன.  

சிறுவர் சேமிப்புக் கணக்கு பிரிவில் புத்தாக்கமான மற்றும் விறுவிறுப்பான பதிவுகளை கொண்டுள்ள செலான் டிக்கிரி, தேசத்தின் இளம் தலைமுறையினர் மத்தியில் robotics தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்திய முதலாவது சிறுவர் சேமிப்புக் கணக்காக திகழ்கிறது.திறமை வாய்ந்த டிக்கிரி கணக்கு வைத்திருக்கும் சிறுவர்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வொன்றும், அவர்கள் மத்தியில் நேர்த்தியான சிந்தனையை ஊக்குவிக்கும் சந்திப்பு நிகழ்வொன்றும் இந்தப் பயிற்சிப்பட்டறையின் நிறைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .